இதயத்திற்கு கூட பாதிப்பு வரும்: ஹெட்போன்களால் இவ்வளவு ஆபத்துகளா?

இதயத்திற்கு கூட பாதிப்பு வரும்: ஹெட்போன்களால் இவ்வளவு ஆபத்துகளா?
இதயத்திற்கு கூட பாதிப்பு வரும் என்பதால் ஹெட்போன்களால் நிறைய ஆபத்துகள் உள்ளன.

தகவல் தொழில் நுட்பம் உச்சத்தில் வளர்ந்துள்ள காலத்தில் நாம் வசித்து வருகிறோம். செல்போன் அதுவும் ஸ்மார்ட் போன் இல்லை என்றால் வாழ்வே சூனியமாகி விடும் நிலை தான் உள்ளது.



தற்போதைய சூழலில் பலரும் ஹெட் போன் அல்லது இயர் போன் காதில் மாட்டிக்கொண்டு எப்போதும் செல்போனில் மூழ்கி இருக்கிறார்கள். இதை வசதியாக மட்டும் இன்றி ஸ்டைல் ஆகவும் கருதுகிறார்கள். இருசக்கர வாகனத்தில் பறக்கும், பஸ் ,ரயிலில் பயணிக்கும் பல பெண்களையும் இயர்போனும் காதுமாக தான் காண முடிகிறது .

தொடர்ந்து இயர்போன் போன்றவற்றை பயன்படுத்துவதால் என்ன பாதிப்பு ஏற்படும் தெரியுமா என்பதை அறிய தொடர்ந்து படிக்கலாம்.

இயர் போன் அல்லது ஹெட் போன் மூலம் உரத்த இசையை செய்ய கேட்பது கேட்கும் திறனை பாதிக்கும். இயர் போன் மூலம் ஒலியலைகள் தொடர்ந்து செவிப்பறையை தாக்குவது நாள் அளவில் பாதிப்பை ஏற்படுத்தும். நிபுணர்களின் கூற்றுப்படி இயர்போன்களை மணிக்கணக்கில் அணிந்து கொண்டு இசை கேட்பது காதுகளுக்கு மட்டுமல்ல இதயத்துக்கும் நல்லதல்ல.

இதனால் இதயம் வேகமாக துடிப்பதுடன் படிப்படியாக பாதிப்புக்கு உள்ளாகும். இயர் ஃபோன்களில் இருந்து வெளிப்படும் மின்காந்த அலைகள் மூளையில் மோசமான விளைவை ஏற்படுத்துகின்றன. இதனால் தலைவலி மற்றும் ஒற்றைத் தலைவலி பிரச்சினைகள் உண்டாகின்றன பலர் தூக்கம் இன்மை அல்லது தூக்கத்தில் மூச்சு திணறல் போன்றவற்றால் பாதிக்கப்படுகின்றனர்.


இயர் ஃபோன்கள் நேரடியாக காதில் வைக்கப்படுவது காற்றுப்பாதையை தடுக்கிறது. இந்த அடைப்பு பாக்டீரியாக்களின் வளர்ச்சி உட்பட பல்வேறு வகையான காது நோய் தொற்றுகளை ஏற்படுத்தும். இயர் ஃபோன்கள் நீண்ட காலமாக பயன்படுத்துவது ஒரு நபரின் சமூக வாழ்க்கை மற்றும் மன ஆரோக்கியத்தை பாதிக்கும் சில சமயங்களில் அதிகப்படியான பதட்டத்தையும் மன அழுத்தத்தையும் ஏற்படுத்தும். இயர் ஃபோன்களில் தொடர்ந்து பாடல்களை கேட்பதால் கவனம் செலுத்துவதில் குறைபாடு ஏற்படுகிறது.

இது படிப்பு வேலை அல்லது பிற செயல்பாடுகளில் தவறுகளுக்கு வழி வகுக்கிறது. இயர் போன்களை காதுகளில் பொருத்தி இசை, பேச்சு என கேட்டு ரசிப்பது சுகமாக இருக்கும் தான். ஆனால் அதனால் ஏற்படக்கூடிய ஆபத்துகளையும் மனதில் கொள்ள வேண்டும். விவேகமாகவும் குறைந்த நேரத்துக்கும் இயர்போன்களை பயன்படுத்துவது எப்போதுமே பாதுகாப்புக்குரியதாகும். எனவே இவற்றின் பயன்பாட்டை குறைத்துக்கொள்வது நல்லது.

Tags

Next Story