ருசியான முட்டை இட்லி செய்வது எப்படி?

ருசியான முட்டை இட்லி செய்வது எப்படி?
X

Egg Idli Recipe- முட்டை இட்லி ரெசிப்பி ( கோப்பு படம்)

Egg Idli Recipe- சுவையான காலை டிபன் முட்டை இட்லி சாப்பிட்டால், அந்த நாளே சந்தோஷமாக துவங்கி விடும். முட்டை இட்லி செய்வது எப்படி என்று தெரிந்துக்கொள்வோம்.

Egg Idli Recipe- தினமும் காலை என்ன டிபன் செய்வது என்று பல தாய்மார்களுக்கும் பெண்களுக்கும் குழப்பம் இருக்கும். வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் தினமும் இட்லி தோசை செய்து இல்லத்தரசிகளுக்கு சலித்து போயிருக்கும். அப்படி என்றால் உங்கள் வீட்டில் முட்டை இருந்தால் போதும் இந்த வித்தியாசமான சுவையான காலை டிபன் செய்து கொடுக்கலாம்.

அந்த வரிசையில் சுவையான ஆரோக்கியமான முட்டை இட்லி செய்வது எப்படி என்று இந்த கட்டுரையில் பார்க்கலாம். இந்த முட்டை இட்லியை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.


சுவையான முட்டை இட்லி செய்ய தேவையான பொருட்கள்:

ஆறு முட்டை

நாலு டேபிள் ஸ்பூன் காய்ச்சாத பால்

1/2 டேபிள் ஸ்பூன் மிளகுத்தூள்

தேவையான அளவு உப்பு

2 சிட்டிகை மஞ்சள் தூள்

ஒரு டேபிள் ஸ்பூன் நெய்

ஒரு பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம்

ஒரு பொடியாக நறுக்கிய கொடை மிளகாய்

இரண்டு துருவிய கேரட்

இரண்டு பொடியாக நறுக்கிய தக்காளி

ஒரு டேபிள் ஸ்பூன் மிளகுத்தூள்

தேவையான அளவு கருவேப்பிலை


சுவையான முட்டை இட்லி செய்வது எப்படி?

முதலில் ஒரு சிறிய கிண்ணத்தில் நாம் எடுத்து வைத்த ஆறு முட்டைகளை உடைத்து ஊற்றி நன்கு அடித்துக் கொள்ளுங்கள். பிறகு அந்த முட்டையோடு காய்ச்சாத பால் ஊற்றி நன்கு கலக்க வேண்டும். இப்போது தேவையான அளவு உப்பு, மிளகு தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இதற்கு பிறகு ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் சிறிதளவு நெய் ஊற்ற வேண்டும். இந்த நெய் நன்கு சூடானதும் நாம் பொடியாக நறுக்கி வைத்து உள்ள வெங்காயம் தக்காளி குடைமிளகாய் மற்றும் துருவிய கேரட்டை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.


பிறகு இந்த காய்கறிகளுடன் தேவையான அளவு மிளகுத்தூள் மற்றும் உப்பு சேர்த்து சுமார் இரண்டு நிமிடம் வதக்க வேண்டும். இப்போது இந்த வதக்கிய காய்கறிகளை முட்டையுடன் சேர்த்து நன்கு கலந்த வைத்துக் கொள்ள வேண்டும். இதனைத் தொடர்ந்து ஒரு இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து அந்த தண்ணீரை கொதிக்க வைக்க வேண்டும். இந்த தண்ணீர் நன்கு கொதித்ததும் இட்லி தட்டில் இட்லி ஊத்துவது போல எண்ணெய் தடவி இட்லி மாவுக்கு பதிலாக முட்டை கலவையை ஊற்ற வேண்டும். பிறகு பத்து நிமிடம் இதை வேக வைத்து எடுத்தால் போதும். அவ்வளவுதான்... சுவையான முட்டை இட்லி தயார்.

Tags

Next Story