Eel Fish in Tamil-உணவுக்கு பயன்படாத மின்சாரத்தினை பாய்ச்சி இரையை வேட்டையாடும் விலாங்குமீன்:

Eel Fish in Tamil
Eel Fish in Tamil
கடல் வாழ் உயிரினங்களான மீன் வகைகளில் அனைத்து வகைகளையும் நாம் சாப்பிட முடியுமா- ? என கேட்டால் ஒருசில வகைகள் விதிவிலக்கும் உண்டு. அந்த வகையில் ஈல் வகை மீன்களை சாப்பிட்டால் செரிமான பிரச்னை வர வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.
அதாவது விலாங்குமீன் வகைகளில் ஒரு வகையான எலக்ட்ரிக் ஈல் எனப்படுபவை தன்இரைகளை வேட்டையாடமின்சாரத்தினை வெளிப்படுத்தி எதிராளியை தாக்கி உணவை பெற்றுக் கொள்ளும் எலக்ட்ரிக் ஈல் மீன் கள் கூட்டாக வாழ்பவை. சிறிய மீன்களான டெட்ராஸ் மீன்கள்தான் இதன்இலக்கு.
சீனாவிலும் ஈல் வகை உணவுகளுக்கு பஞ்சமில்லை. இத்தாலி, நியூசிலாந்து, ஜெர்மனி, நெதர்லாந்து, போலந்து, டென்மார்க், செக் குடியரசு மற்றும் சுவீடன் ஆகிய நாடுகளிலும் விலாங்கு மீன் உணவு களைகட்டுகிறது.இந்த எலெக்ட்ரிக் ஈல் மீன்கள் வட தென் அமெரிக்கா முழுவதும் பரவலாகக் காணப்படுகின்றன.
பிரேசில், கியானாஸ் சுரினாம் , வெனிசுலா , கொலம்பியா , பெரு மற்றும் ஈக்வடார் வரை பரவலாக காணப்படுகின்றன.இவை நன்னீர் ஏரிகள், நீரோடைகள், குளங்கள் மற்றும் அமேசான் காடுகளிலுள்ள நீர்நிலைகளில் அதிகம் காணப்படுகின்றன.
தங்கள் உடலிலிருந்து மின்சாரத்தினை பாய்ச்சிய உடன் அதிர்ச்சியில் நீருக்கு மேல் துாக்கியெறியப்படும் டெட்ராஸ்மீன்கள் மீண்டும் தண்ணீரில் விழும்போது உயிரிழந்து போகின்றன. அந்த மீன்களை ஈல் மீன்கள் விழுங்கிவிடும். தலை,உடம்பு, வால்பகுதி ஆகியவை இம் மீனின் மூன்று முக்கியபகுதிகள். இந்த உறுப்புகள் மூலமாக தனக்கு ஏதாவது பிரச்னைகள் வந்தால் அந்த பிரச்னைக்கு ஏற்ப தனது உடலிருந்து 300 முதல் 860 வாட்ஸ் வரை மின்சாரத்தை பாய்ச்சி எதிராளியை சமாளிக்கும்.
ஈல் மீன்கள் தண்ணீருக்கு அடியில் மட்டுமல்லாமல் கொஞ்சம் மூச்சை அடக்கி தண்ணீருக்கு வெளியே வந்து சின்னச்சின்ன மிருகங்கள் மீது மின்சாரத்தை பாய்ச்சி உணவிற்காக வேட்டையாடும்.ஈல் மீன்கள் வறட்சியான காலகட்டத்தில் தான் இனப்பெருக்கம் செய்யும். பெண் ஈல் மீன்கள் கர்ப்பம் ஆனபிறகு ஆண் ஈல் மீன்கள் தண்ணீருக்கு அடியில் தனது எச்சில் மூலம் கூடு கட்டும். அந்த கூட்டிற்குள் தான் பெண் ஈல் மீன்கள் முட்டையிட்டு பாதுகாக்கும். பாதுகாக்கும் பணியைஆண் மீன்கள் தான் செய்யும்.
ஆண் ஈல் மீன்கள் கட்டிய கூட்டிற்குள் தான் பெண் ஈல் மீன்கள் ஆயிரத்து இருநுாறு முட்டை வரை இடும். ஆனால் அவற்றில் ஒரு சில குஞ்சு மீன்கள் மட்டும் தான் உயிருடன் பிழைக்கும். ஈல் மீன்களுக்கு கண் பார்வை குறைவுதான்.தண்ணீருக்கு அடியில் அதனால் முழுமையாக பார்க்க முடியாது. இந்த நேரத்தில் தனது எலக்ட்ரிக் பவரை ரேடார் பவராக மாற்றி எவ்வளவு தூரத்தில் உணவு இருப்பதை கண்டுபிடித்து அங்கு சென்று வேட்டையாட ஆரம்பிக்கும்.
உலகில் இருக்கும் விலங்குகளிலேயே அதிக அளவில் மின்சாரத்தை வெளிப்படுத்தும் உயிரினம் இதுதான். இந்த மீன்கள் 2 மீட்டர் நீளம் வரை வளரும்.எலக்ட்ரிக் மீன்களிலேயே வோல்டாஸ் எலக்ட்ரிக் ஈல் என்கிற வகையான மீன்கள் தான் அதிபயங்கரமான சக்தி கொண்டவை. இந்த வகை ஈல்களால் 860 வோல்ட் மின்சாரத்தை வெளிப்படுத்த முடியும்.
மின்சாரத்தை உற்பத்தி செய்யும் ஒரு பிரத்யேக பாகம் இந்த ரக மீன்களின் உடல்களில் இருக்கின்றன. இந்த பாகம் ஆயிரக்கணக்கான எலக்ட்ரோலைட்ஸ் எனப்படும் பேட்டரி போன்ற அமைப்பினை கொண்டுள்ளது.இந்த மீன்கள் தூண்டப்படும் போது, இந்த பாகத்திலிருந்து மின்சாரம் வெளிப்படுகிறது. அது ஈல் மீன்களின் உடல் முழுக்க பரவி வெளிப்படுகிறது.
இந்த வகை மீன்கள் தனித்துவமானவை. இவை உயரழுத்த மின்சாரத்தைப் பயன்படுத்தி வேட்டையாடுகின்றன. ஆனால் தற்போது இந்த ஈல் மீன்கள் கூட்டமாகவும் வேட்டையாடுகின்றன' உலகில் சுமார் 800 வகையான விலாங்கு மீன்கள் உள்ளன.இந்தியாவில் விலாங்கு என்கிற எலெக்ட்ரிக் ஈல் மீன்களை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்வதில்லை. அதன் உடம்பில் எலெக்ட்ரிக் பவர் இருப்பது மட்டுமின்றி அதன் ரத்தத்தில் விஷம் கலந்திருக்கும்.
விஷம் கலந்த புரோட்டீன் என்பதால் ஈல் மீன்களை நாம் சாப்பிட்டால் நமது செரிமான மண்டலம் பாதித்து பழுதாகி விடும்.ஆனால் நன்னீர் ஈல்களான உனகி மற்றும் கடல் ஈல்களான கொங்கர் ஈல் , அனகோஆகியன ஜப்பானிய உணவுகளில் மிக முக்கிய இடத்தை பிடிக்கின்றன.
ஈல் மீன்கள் 600 முதல் 650 வோல்ட் மின்சாரத்தை தன் உடலில் உற்பத்தி செய்கிறது. இதில் "போராக்" என்னும் ஒருவகை ஈல் மீன் உள்ளது. அது அதிகப்படியாக 860 வோல்ட் வரை மின்சாரத்தை உற்பத்தி செய்கிறதாம்.வரைதான் மின்னோட்டம் இருக்கும்.
இந்த அளவு மின்சாரம் மனிதர்களுக்கு கடுமையான வலிகளை ஏற்படுத்தலாம். எப்போதாவது அரிதாக மூச்சு திணறல் மற்றும் இதய செயலிழப்பை ஏற்படுத்தலாம். ஆனாலும் பெரும்பாலும் உயிரிழப்பை ஏற்படுத்துவதில்லை.எனவே இது மனிதர்களுக்கு அதிகப்படியான மின் அதிர்ச்சியை கொடுக்குமே தவிர உயிருக்கு பெரும்பாலும் ஆபத்தை ஏற்படுத்துவதில்லை. ஆனால் சிறியரக உயிரினங்கள் உடனடியாக மரணத்தை தழுவுகின்றன.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu