Eating ghee- காலையில் எதுவும் சாப்பிடாம வெறும் வயித்துல நெய் சாப்பிடலாமா, கூடாதா - வாங்க தெரிஞ்சுக்கலாம் !
Eating ghee- காலையில் வெறும் வயிற்றில் நெய் சாப்பிடுவது குறித்து தெரிந்துக்கொள்வோம் (கோப்பு படம்)
Eating ghee, empty stomach- மக்கள் மத்தியில் அதிகாலையில் வெறும் வயிறாக இருக்கும் போது நெய் சாப்பிடும் பழக்கம் பரவி வருகிறது. எனினும் நெய்யை அப்படி சாப்பிடுவதால் ஒரு தரப்பினர் நன்மை ஏற்படுவதாகவும், ஒரு தரப்பில் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் இருதரப்பு முரண்பட்ட கருத்துகளை கூறுகின்றனர். எனவே, நெய் யாரெல்லாம் வெறும் வயித்துல சாப்பிடலாமா, எவ்வளவு எடுத்துக்கலாம் என்பது குறித்து தெரிந்துக்கொள்வோம்.
நெய் தினமும் எடுத்துக் கொள்ளலாமா? நெய் சாப்பிட்டால் எடை கூடும், கொலஸ்டிரால் அதிகமாகிவிடும். மாரடைப்பு வந்துவிடும் போன்ற பயம் நமக்கு இருக்கிறது. உண்மையிலேயே நெய் அவ்வளவு ஆபத்தானதா? தினமும் காலை வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்ளலாமா? எந்தெந்த பிரச்சினை இருக்கிறவர்கள் நெய்யை எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது பற்றி மிகத் தெளிவாக தெரிந்துக்கொள்ளலாம்.
நெய் ஆறிய பிறகு சாப்பிட்டால் தான் கொலஸ்டிரால் அதிகமாகும். உருக்கி எடுக்கலாம். காலை வெறும் வயிற்றில் சாப்பிடுவது ஆரோக்கியமானது தான் என்றும் நம்பப்படுகிறது. இது ஓரளவு உண்மை தான். நம்முடைய உடல் வாகுக்கு ஏற்றவகையில் நெய்யை காலையில் எடுத்துக் கொண்டால் எந்த பக்க விளைவுகளும் இல்லாமல் நன்மைகளை மட்டும் பெற முடியும்.
சித்த மருத்துவத்தில் நெய் மிக முக்கியமான மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. இதை திரவத் தங்கம் என்றும் குறிப்பிடுவார்கள்.
பொதுவாக சித்த மருத்துவத்தில் 64 வகையான மருந்து வகைகள் இருக்கின்றன. அதில் 32 உள் மருந்தாகவும் 32 வெளி மருந்தாகவும் இருக்கிறது. அதில் உள் மருந்தாக எடுப்பதில் நெய் முக்கிய இடம் பெறுகிறது. இன்னும் சொல்லப்போனால் நெய் மருந்துகள் என்றே ஒரு வகையுண்டு.
நெய்யையே மருந்தாக மாற்றிக் கொடுப்பார்கள். சில மருந்துகளை நெய்யில் கலந்து சாப்பிட அறிவுறுத்துவார்கள். நம்முடைய பாரம்பரிய மருத்துவத்தில் இவ்வளவு மகத்துவம் வாய்ந்த நெய் எப்படி நமக்கு கெடுதல் தரும் என்று யோசிக்க வேண்டும். நெய்யை யார் யார் எப்படி எடுத்துக் கொள்ளலாம் என்று தெரிந்தாலே போதும்.
கழுத்து எலும்புகளில் தேய்மானப் பிரச்சினை இருப்பவர்கள, ஆஸ்டிரியோபொராசிஸ், எலும்பின் அடர்த்தி குறைவது உள்ளிட்ட எலும்புத் தேய்மானம் மற்றும் எலும்பு பலவீனம் உடையவர்கள் நெய்யை சேர்த்துக் கொள்வது மிக முக்கியம்.
அதிலும் குறிப்பாக வெறும் வயிற்றில் நெய் எடுத்துக் கொள்வது நல்ல பலன்களைத் தரும்.
பால் பொருள்களில் கால்சியம் அதிகம். கால்சியம் பற்றாக்குறை உள்ளவர்கள் நெய்யை தினமும் வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்வது நல்லது.
உடலுக்குத் தேவையான கால்சியமும் கிடைக்கும். எலும்பின் அடர்த்தியை அதிகரிக்கச் செய்து எலும்பு மூட்டுகளைப் பலப்படுத்வும் செய்கிறது.
உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள், அதற்காக டயட்டில் இருப்பவர்கள் நெய் சாப்பிடவே மாட்டார்கள். இது இன்னும் எடையை அதிகப்படுத்தும் என்று சொல்வதுண்டு. ஆனால் எடையைக் குறைக்க நினைப்பவர்களும் கூட நெய்யை வெறும் வயிற்றில் எடுக்கலாம்.
டயட்டில் இருப்பவர்கள் காலை எழுந்ததும் வெந்நீர் குடிக்கும் பழக்கம் இருக்கும். அவர்கள் ஒரு கிளாஸ் வெந்நீரில் 10 மில்லி அளவு நெய்யை கலந்து குடிக்க அதன் பலனும் கிடைக்கும். எடையும் கூடாது.
நீர்ச்சதது குறைபாடு உடலில் இருப்பவர்களும் எலும்பு மூட்டுகளுக்கு இடையே உள்ள ஜவ்வில் வறட்சியும் உராய்வும் ஏற்படும்போது வீக்கங்கள் ஏற்படும்.
எலும்பு மற்றும் தசைகளில் வீக்கங்கள் உள்ளிட்ட இன்ஃபிளமேஷன் பிரச்சினை இருப்பவர்கள் காலை வெறும் வயிற்றில் பத்து மில்லி அளவுக்கு நெய்யை எடுத்துக் கொண்டே வரும்போது இன்ஃபிளமேஷன்கள் குறையும். எனவே, நெய்யை காலையில் சாப்பிடுவதால் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu