'டேஸ்ட்டா சாம்பார் வைக்கிறது எப்படி?' வைத்துத்தான் பாருங்களேன்..!
Sambar Eppadi Seivathu
Sambar Eppadi Seivathu-சாம்பார் என்றால் எல்லோருக்கும் நினைவுக்கு வருவது இரண்டு மட்டுமே. ஒன்று கத்திரிக்காய் சாம்பார். இன்னொன்று முருங்கைக்காய் சாம்பார். என்னதான் கத்தரிக்காய் சாம்பாருக்கு தனி சுவை உண்டு எனினும், முருங்கைக்காய் சாம்பாருக்கு ஒரு தனி 'கிக்' இருக்குங்க. யாரும் இல்லைன்னு சொல்லுவீங்களா?
அதனாலதான், இயக்குனர் பாக்யராஜ் சார், முருங்கைக்காயை சிறப்புக் காட்சியாக அவரது படத்தில் திரைப்படுத்தி இருப்பார். சரி..சரி அதனால், இப்போ நாம் முருங்கைக்காய் சாம்பார் எப்படி வைப்பதுன்னு பார்க்கலாம். அதிலும் சும்மா இல்லீங்க. சுவையான முருங்கைக்காய் சாம்பார். ஓகே..?
சாம்பார் வைப்பதற்கு என்னென்ன பொருட்கள் வேணும்?
துவரம் பருப்பு – 1/2 டம்ளர், சின்ன வெங்காயம் சிறிது, தக்காளி – 2 , பூண்டுப்பல் – 3 , கருவேப்பிலை – சிறிதளவு, பச்சை மிளகாய் -2 சாம்பார் பொடி – 2 டீஸ்பூன், உப்பு – தேவைக்கேற்ப, பெருங்காயம் – 1/2 டீஸ்பூன், கொத்தமல்லி இலை – சிறிதளவு, கடுகு – சிறிதளவு, எண்ணெய் – 2 டீஸ்பூன், நாட்டு முருங்கைக்காய் தேவையான அளவு
எப்படி செய்வது?
ஒரு குக்கரில் துவரம் பருப்பு 1/2 டம்ளர், 2 சின்ன வெங்காயம், 3 பல் பூண்டு, மஞ்சள் தூள் சிறிது கடலை எண்ணெய்விட்டு அதனுடன் பருப்பு எடுத்த அதே டம்ளரில் 1 1/2 டம்ளர் தண்ணீர் ஊற்றி பருப்பை வேகவைக்க வேண்டும். நல்ல துவரம் பருப்பு எனில் 3 முதல் 5 விசில் வைத்தாலே போதுமானது.
குக்கரில் ஆவி அடங்கும் வரை சும்மா நிக்காதீங்க. என்ன தெரியுதா..? இந்த வேலைய செய்யணும். அதாவது இன்னொரு பாத்திரத்தில் 1 டீஸ்பூன் அளவு கடலை எண்ணெய் ஊற்றி அது நன்கு காய்ந்ததும், அதில் கடுகு மற்றும் கருவேப்பிலை போட்டு தாளிக்கவும். பிறகு அதில் நறுக்கிய வெங்காயத்தை போட்டு சிவக்க வதக்கவும்.இதனுடன் கீறிய பச்சை மிளகாயையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும், அதில் வெட்டி வைத்துள்ள தக்காளியைப் போட்டு நன்றாக வதக்கவும். தக்காளி கரைந்து கூழ்ம நிலைக்கு வரும்போது அதில் சாம்பார் பொடி, இன்னும் சிறிது மஞ்சள் தூள், பெருங்காயம் பவுடர் சிறிது போட்டு எண்ணெய்யில் சிறிது நேரம் விடுங்கள். அப்போதுதான் சாம்பார்தூள் மணம் அடங்கும். பின்னர் அதனுடன் குக்கரில் வேகவைத்த பருப்பை கொட்டி கிளறுங்கள்.
தேவையான அளவு தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்கவிடுங்கள். தேவையான அளவு உப்பு சேருங்கள். ஒரு கொதி வந்ததும் வெட்டி வைத்துள்ள நாட்டு முருங்கைக்காயை போடுங்கள். இப்படி போடுவதால் முருங்கைக்காயின் மணம் அப்படியே சாம்பாரில் இருக்கும். கடைசியாக சாம்பாரை இறக்கும்போது கொத்தமல்லி தழையை தூவி விடுங்கள். சும்மா ஜம்முன்னு வாசம் அடிக்கும்.
தேவைப்பட்டால் ஒரு சிறிய நெல்லிக்காய் அளவு புளி கரைசலை சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கினால், சுவையான சாம்பார் ரெடி. நீங்க வைச்ச சாம்பார் வாசம் அடித்து, உங்கள் பக்கத்து வீட்டு கமலா அக்கா.. ஓடி வந்து..'என்னடி..மீனா? முருங்கைக்காய் சாம்பார் ஆளையே தூக்குதுன்னு' கேப்பாங்க.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu