Benefits of Drumstick water: நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் முருங்கை சாறு பற்றி தெரிந்துக்கொள்வோம்!

Drumstick juice boosts immunity - முருங்கை சாறு குடிங்க! உடம்புக்கு மிகவும் ஆரோக்கியம் தருகிறது (கோப்பு படங்கள்)
Drumstick juice boosts immunity- நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் முருங்கை சாறு
முருங்கையில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உடலின் செல் சேதத்தைத் தடுப்பதிலும், வலுவான நோயெதிர்ப்பு மண்டலத்தை ஆதரிக்கவும் உதவியாக உள்ளது.
‘முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவேன்’.என்ற பழமொழிக்கு ஏற்ப உங்களது உணவு முறையில் தினமும் முருங்கையை சேர்த்துக் கொள்ளும் போது எவ்வித உடல் நல பாதிப்பும் ஏற்படாது. வயதானக் காலத்திலும் கூட யாருடைய துணையும் இல்லாமல் கம்பீரமாக நடக்க முடியும் என்பதைத் தான் இந்த பழமொழி எடுத்துரைக்கிறது. ஆம் முருங்கையில் இலை முதல் காய், பூ என அனைத்திலும் அத்தனை ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளது. இவற்றில் ஒன்றான முருங்கை இலையைக் கொண்டு செய்யப்படும் முருங்கை சாறு மற்றும் அவற்றின் நன்மைகள் குறித்து அறிந்துக் கொள்வோம்.
முருங்கை இலை சாறின் ஆரோக்கிய நன்மைகள்:
தினமும் காலையில் முருங்கை இலைகளை வேக வைத்து சீரகம், பூண்டு,மிளகு தூள் சேர்த்து குடித்து வந்தால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முடியும். அதிலும் குளிர்காலத்தில் ஏற்படும் பருவ காலத் தொற்றிலிருந்து உங்களைப் பாதுகாக்கவும் உதவியாக உள்ளது.
இதில் உள்ள வைட்டமின் ஏ, பி 1, பி2, பி 3, பி 6 மற்றும் வைட்டமின் சி மற்றும் இரும்பு சத்துக்கள் அதிகம் உள்ளதால் உங்களது எலும்புகளை வலுவாக்கவும், ஹீமோகுளோபின் அளவையும் அதிகரிக்கவும் உதவியாக உள்ளது.
முருங்கையில் உள்ள பொட்டாசியம், கால்சியம் மற்றும் வைட்டமின்கள் உடலுக்கு தேவையான ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும், உடலின் பல்வேறு செயல்பாடுகளுக்கு உதவுகிறது.
முருங்கையில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உடலின் செல் சேதத்தைத் தடுப்பதிலும், வலுவான நோய் எதிர்ப்பு மண்டலத்தை ஆதரிக்கவும் உதவியாக உள்ளது.
குர்செடின் மற்றும் குளோரோஜெனிக் அமிலம் போன்ற சேர்மங்களால் ஏற்படும் அழற்சி எதிர்ப்பு பண்புகளுக்கு முருங்கை புகழ் பெற்றது என்பதால், முருங்கை நீரை வழக்கமாக உட்கொள்வது உடல் வீக்கத்தைக் குறைக்கவும் உதவியாக உள்ளது.
முருங்கை இலைகளில் உள்ள ஐசோதியோசயனேட்டுகள் இருப்பதால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.
பாக்டீரியா மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் அதிகளவில் உள்ளதால், சருமத்தில் ஏற்படும் தொற்றுகள் மற்றும் பாக்டீரியாவினால் ஏற்படும் பிரச்சனைகளை சரி செய்வதற்கு உதவியாக உள்ளது. மேலும் பெண்களுக்கு ஏற்படும் சிறுநீர் பாதை தொற்றுகளை போக்கவும் உதவுகிறது.
முருங்கை இலைகளை தினமும் பருகும் போது நுரையீரலில் புற்றுநோய் செல்கள் உருவாவதைத் தடுக்கவும், உடலில் உள்ள புற்றுநோய் கட்டிகளை அழிக்கவும் உதவியாக உள்ளது. நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவாக வைத்திருக்கவும் உதவியாக உள்ளது.
இது போன்று பல்வேறு நன்மைகள் உள்ளதால், முருங்கை இலைகளைக் கொண்டு நீங்கள் சாறு அல்லது ஜூஸ் செய்து பருகலாம். ஒருவேளை உங்களுக்கு ப்ரெஸ்ஸான கீரைகள் கிடைக்கவில்லை என்றாலும், கடைகளில் பாக்கெட்டுகளில் விற்கப்படும் முருங்கை இலை பொடி வாங்கி உபயோகித்துக் கொள்ளலாம்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu