உங்க வீட்டு பிரிட்ஜில் துர்நாற்றம் வீசுகிறதா? இதனை செய்து பாருங்களேன்
பிரிட்ஜ் எனப்படும் குளிர்பதன பெட்டியில் பலதையும் போட்டு அடைத்து வைப்பது அனைவரது வழக்கமாக உள்ளது. இதனால் பிரிட்ஜ் கதவை திறந்ததுமே துர்நாற்றம் அடிக்கும் நிலையும் காணப்படுகிறது. பிரிட்ஜில் துர்நாற்றத்தை போக்க எலுமிச்சை பயன்படுத்தலாம். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து அதில் இரண்டு துண்டாக வெட்டி எலுமிச்சை பழத்தை போடுங்கள்.
பின்னர் அந்த பாத்திரத்தை பிரிட்ஜில் வைத்திருங்கள். இப்படி செய்தால் பிரிட்ஜில் துர்நாற்றத்தை முற்றிலும் நீங்கிவிடும். பிரிட்ஜில் இருக்கும் துர்நாற்றத்தை நீக்க பேக்கிங் சோடாவையும் பயன்படுத்தலாம். பேக்கிங் சோடா சிறிது தண்ணீரில் கலந்து அதை கொண்டு ஃப்ரிட்ஜை சுத்தம் செய்யவும்.
இது பிரிட்ஜில் துர்நாற்றத்தை எளிதில் நீக்கிவிடும்.மேலும் காபி கோட்டையின் உதவியுடன் பிரிட்ஜில் துர்வாசத்தை நீக்கலாம். காபி கொட்டைகளை பிரிட்ஜில் வெவ்வேறு மூலைகளில் வைத்து இரவு முழுவதும் மூடி வைத்து காலையில் பிரிட்ஜை திறந்தால் துர்நாற்றம் அடிக்காது. பிரிட்ஜின் துர்நாற்றத்தை நீக்க உப்பு போட்டு சுத்தம் செய்யலாம் வெந்நீரில் உப்பு கலந்து அந்த தண்ணீரில் துணியை நனைத்து பிரிட்ஜை சுத்தம் செய்தால் துர்வாடை எளிதில் நீங்கிவிடும். ஆரஞ்சு பழ தோல்களை கொண்டும் பிரிட்ஜில் துர்நாற்றத்தை நீக்கலாம். இதற்கு ஆரஞ்சு பழத்தோலை குளிர் பதனப்பட்டியில் வைத்தாலே போதும் துர்நாற்றம் தானாகவே மறைந்துவிடும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu