நமது உடலில் ரத்த பிளேட்லெட் கவுண்ட் குறைந்தால் என்ன ஆகும் தெரியுமா?
மனித உடலில் உள்ள ரத்த அணுக்கள் மூன்று வகைப்படும். ரத்த வெள்ளை அணுக்கள், ரத்த சிவப்பணுக்கள், பிளேட்லெட் எனப்படும் ரத்த தட்டுகள். இவற்றுள் ரத்த சிவப்பணுக்கள் உடலில் உள்ள திசுக்களுக்கு ஆக்ஸிஜனை எடுத்து செல்லும் பணியை செய்யும் ரத்த வெள்ளை அணுக்கள் நோய்களை எதிர்த்து போராட உதவும். விபத்தாலோ வேறு ஏதேனும் காரணமாகவோ உடலில் ஏற்படும் காயங்களிலிருந்து வழியும் ரத்தத்தை உறைய வைப்பதற்கு பிளேட்லெட்டுகள் உதவும்.
சாதாரணமாக ஒருவரது உடலில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் முதல் 4 லட்சத்து 50 ஆயிரம் வரையிலான எண்ணிக்கையில் பிளேட்லெட்டுகள் இருக்கும். ஒரு லட்சத்து 50 ஆயிரம் குறைவாக பிளேட்லெட்டுகள் இருந்தால் ரத்தம் குறைவதில் பிரச்சனை ஏற்படும். டெங்கு, மலேரியா, வைரஸ் காய்ச்சல் ,இதய நோய் பாதிப்புக்கு ஆளாகுவது ,ஒரு சில மருந்துகள் உட்கொள்வது பிளேட்லெட்டுகளின் எண்ணிக்கை குறைவதற்கு முதன்மையான காரணங்களாக இருக்கின்றன.
பிளேட்லெட் எண்ணிக்கையை உயர்த்த பப்பாளி இலையை சாறு எடுத்து குடிக்கும் வழக்கம் நடைமுறையில் இருந்து வருகிறது. வேறு சில காய்கறிகள் பழங்கள், உணவுப் பொருட்களும் பிளேட்லெட் எண்ணிக்கை அதிகரித்து ரத்த ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். மாதுளம் பழத்தில் ஆண்டி ஆக்சிடென்ட்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. இவை பிளேட்லெட் எண்ணிக்கையையும் ஒட்டுமொத்த நோய் எதிர்ப்பு செயல்பாட்டையும் மேம்படுத்த உதவும் கீரை, முட்டைகோஸ் மற்றும் ப்ரோக்கோலி போன்ற காய்கறிகளில் வைட்டமின் கே அதிகமாக உள்ளன. இரத்தம் உறைதலுக்கு இவை அவசியமானவை சாலட்டுகள் ஸ்மூத்திகள் மற்றும் சமையலில் சேர்த்துக் கொள்வதன் மூலம் பிளேட்லெட் எண்ணிக்கை அதிகரிக்கச் செய்யலாம்.
பூசணிக்காயில் வைட்டமின் ஏ நிறைந்துள்ளது பிளேட்லெட்டுகள் உற்பத்திக்கு உதவுவதோடு நோய் எதிர்ப்பு மண்டலத்தையும் பலப்படுத்தும் பூசணிக்காய் உணவில் சேர்ப்பதுடன் உட்கொள்ளலாம் .பீட்ரூட்டிலும் இரும்பு மற்றும் புல்லட் அதிகம் உள்ளது. ரத்த சிவப்பணுக்கள் மற்றும் பிளேட்லெட்டுகள் உற்பத்திக்கு இவை உதவும். பீட்ரூட்டை சாலடுகள் ஸ்மூத்திகளில் கலந்து உட்கொள்ளலாம்.
கேரட்டில் பீட்டா கரோட்டின் மற்றும் வைட்டமின் ஏ அதிகம் உள்ளது. இது நோய் எதிர்ப்பு செயல்பாட்டுக்கும் பிளேட்லெட் உற்பத்திக்கும் உதவும். கேரட்டை பச்சைையாகவோ வேக வைத்தோ, லூசாகவோ சாலட்டுகளில் கலந்து சாப்பிடலாம். வைட்டமின் ஏ பிளேட்லெட் உற்பத்திக்கு உதவும் சர்க்கரைவள்ளி கிழங்கு, பால் அனைத்து வகை காய்கறிகள் பழங்களிலும் வைட்டமின் ஏ நிறைந்திருக்கும். வைட்டமின் சி நோய் எதிர்ப்பு செயல்பாட்டில் முக்கிய பங்கு வகிப்பதுடன் பிளேட்லெட்டுகள் சரியாக வேலை செய்ய உதவும் இரும்புச்சத்தை உறிஞ்சும் திறனை மேம்படுத்தும் ஆரஞ்சு எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்களில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது பிளாட்லெட் உற்பத்தியை அதிகரிக்கவும் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தவும் உதவும். அதேபோல கிவி ,பெர்ரி ஸ்ட்ராபெரி, மாம்பழம், அன்னாசி ,சிவப்பு, பச்சை நிற குடைமிளகாய் புரோக்கோலி, நெல்லிக்காய் போன்றவையும் வைட்டமின் சி நிறைந்தவை.
இந்த உணவுகளை சாப்பிடுவதன் மூலம் பிளேட்லெட் எண்ணிக்கை அதிகரிக்கச் செய்யலாம் ஆரோக்கியமான ரத்த அணுக்களுக்கு போல்ட் அவசியம். இது முக்கியமாக பச்சை இலை காய்கறிகளில் காணப்படுகிறது. கீரை, அஸ்பாரகஸ், பட்டாணி போன்றவைகளில் மிகுந்திருக்கிறது. உடலில் போல்ட் குறைபாடு ஏற்பட்டால் பிளேட்லெட் எண்ணிக்கையும் பாதிப்புக்குள்ளாகும். எனவே போல்ட் நிறைந்த உணவுகளை உட்கொள்வது எண்ணிக்கை அதிகரிக்க உதவி செய்யும்.
முட்டை, இறைச்சி போன்றவைகளில் வைட்டமின் கே உள்ளது .ரத்த உறைவுக்கும், எலும்பு ஆரோக்கியத்திற்கும் வைட்டமின் கே அவசியம். இவற்றை உட்கொள்வது பிளேட்லெட் எண்ணிக்கை அதிகரிக்கவும் துணை புரியும். நல்லெண்ணையில் பிளேட்லெட் எண்ணிக்கை அதிகரிக்க உதவும் அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. அதனால் சமையலில் தவறாமல் பயன்படுத்தி வருவது நல்லது. இஞ்சி, மஞ்சள், பாதாம் ,பூண்டு உள்ளிட்டவற்றை உணவில் சேர்த்துக்கொள்வதும் பலன் அளிக்கும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu