உங்களுக்கு மழைக்கால பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றி தெரியுமா?

உங்களுக்கு மழைக்கால பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றி தெரியுமா?
X

சென்னையில் அண்மையில் பெய்த மழையினால் ரோடுகளில் தேங்கிய நீர்  (மாதிரி படம்)

Safety Measures - தமிழகத்தில் தற்போது அனைத்து மாவட்டங்களிலும் மழை பெய்து வருவதால் ஆறு,குளம்,ஏரிகளில் தண்ணீர் நிரம்பி வழிகிறது. இதுபோன்ற மழைக்காலங்களில் நம் ஆரோக்யத்தைப் பாதுகாக்க என்ன செய்யலாம் என்பதை பார்க்கலாமா?

Safety Measures - தமிழகத்தில் அண்மைக்காலமாக அனைத்து மாவட்டங்களிலும் கனமழையானது பெய்து வருகிறது. இதனால் பல மாவட்டங்களில் ஏரி, குளம் ,குட்டைகள் உட்பட அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி வழிகிறது. இதுமட்டும் அல்லாமல் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பல விவசாய நிலங்களில் தண்ணீர் புகுந்துள்ளது. இவையனைத்தும் இயற்கையின் சீற்றம் என்று கூட சொல்லலாம்.

ஆனால் மனிதர்களாகிய நாம் மழைக்காலத்தில் நம் உடலைக் காப்பாற்றிக்கொள்ள என்னென்ன முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பார்ப்போம்.

வெயிலோ மழையோ குளிரோ தட்ப வெப்பநிலைக்கு ஏற்ப நமது உடல் தகவமைத்துக்கொள்ளும் இயல்புடையது. அதேபோல, அந்தந்த தட்ப வெப்பத்திற்கு ஏற்ப வைரஸ், பாக்டீரியாக்களால் நோய்களும் அதிகமாக பரவ ஆரம்பிக்கும். தற்போது வடகிழக்குபருவமழை துவங்கிவிட்டது. நோயின் முன்னோடியாக டெங்கு காய்ச்சல் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் பாதிப்பினை ஏற்படுத்தி வருகிறது.

மழைக்காலத்தில் பல்வேறு நோய்களும் நம்மைத் தாக்கும். வெயில் காலத்தில் எறும்பைப் போலசுறுசுறுப்பாக செயல்படும் நாம் மழைக்காலத்தில் சோம்பல் நிலைக்கு சென்று விடுவோம்.திடீர் மழையில் நனையும் போது சளி, காய்ச்சல் தொந்தரவு ஏற்படும். மழைக்கால நோய்கள் அதிலிருந்து நம்மை பாதுகாப்பது, நோய் வந்தால் எப்படி நாம் செயல்படுவது? .

மழையால் வீட்டுத்தரை அடிக்கடி ஈரமாவதால் தினமும் மிதியடியை மாற்ற வேண்டும். மழை நேரத்தில் வெளியில் சென்று வீட்டுக்குள் நுழையும்போது தரை ஈரமாகும். மிதியடியும் நனைந்துவிடும். மண்ணும் சேர்வதால் மிதியடியை மிதித்து உள்ளே சென்றால் தரை அசுத்தமாகும்.

தினமும் மிதியடியை மாற்ற வேண்டும். டைல்ஸ், மார்பிள்ஸ், தரையில் தண்ணீர் தேங்கி நின்றால், சட்டென்று பார்வைக்கு தெரியாது. கவனிக்காமல் காலை வைத்தால்வழுக்கி விழ நேரிடும். எனவே தண்ணீர் இருந்தால் துடைத்து விட வேண் டும். மழையில் நனைந்த துணிகளை உடனடியாக துவைத்து பிழிந்து காற்றில் உலர்த்த வேண்டும்.

கதவு, ஜன்னல்களை அடிக்கடி திறந்துவைத்தால் வீட்டுக்குள் இருக்கும் புளுங்கல் நாற்றம் குறையும். துணிகளை வாஷிங் மெஷின் டிரையரில் உலர்த்தி லேசான வெயில்வரும்போது வெளியில் காயவிட்டு உடனடியாக எடுத்தால் ஈரவாடை வராது. துணிகள்வெயிலில் காயாமல் இருந்தால் லேசான துர்நாற்றம் வரும். துணிகளை துவைக்கும்போது கடைசி தண்ணீரில் கிருமிநாசினி கலந்து பிழிந்தெடுத்தால் நாற்றம் வராது. அறைக்குள் வாசனை திரவியத்தை தெளிக்கலாம்.

காலை மாலை ஊதுவத்தி ஏற்றினாலும் நல்லது. ஈரத்துணிகள் இருந்தால் கொசுக்கள் எளிதில் உற்பத்தி ஆகும். வீட்டில் எதையும் அடைசலாக்காமல் உடனுக்குடன் சுத்தம் செய்யுங்கள்.

கழிப்பறையை தினமும் சுத்தம் செய்யவேண்டும். வாசலில் எந்த நேரமும் தண்ணீர் தேங்குவதால் தரை வழுக்கலாம். ப்ளீச்சிங் பவுடர் துாவி தேய்த்தால் தரை சுத்தமாகும். மழை பெய்தால் அன்றைய தினம் செடி, கொடிகளுக்கு தண்ணீர் ஊற்ற வேண்டாம். அதே நேரம் அதிக மழையில் செடிகளின் வேர் அழுகாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். நல்ல வெயில் படும் நேரத்தில் தொட்டிகளை இடமாற்றி வைத்தால் நல்லது. சுற்றுப்புறங்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொண்டால் கொசுக்களும் உற்பத்தியாகாது .

மேலும் மழைக்காலத்தில் மழையில் அதிக நேரம் நனைவதை தவிருங்கள். அப்படியே நனைந்தாலும் தலை ஈரத்துடன் அதிக நேரம் இருக்காதீர்கள். தலையை ஈரமில்லாமல் துடைத்துவிடுவது ஆரோக்யத்துக்கு நல்லது. மேலும் மழை வரும் அறிகுறிகளை முன்னமே அறியும்பட்சத்தில் கையில் கவுரவம் பார்க்காமல் குடை எடுத்து செல்வது நலம் பயக்கும். மழைக்காலத்தில் இப்போது எந்த நகரத்திலும் நடந்து வரும் நிலையே இல்லை. ரோடுகளில் சாக்கடை நீரும் கலந்து ஓடுவதால் நமக்கு இதுவரை வராத நோய்களும் வர வாய்ப்பிருக்கிறது. அதுமட்டும்அல்லாமல் ரோடுகள் இருக்கும் நிலையில் நாம் நன்கு பார்த்து செல்லவேண்டியது கட்டாயம். அதுமட்டும் அல்லாமல் மழை பெய்யும்போது முடிந்தவரை வெளியில் செல்வதை தவிர்ப்பது மிகவும் நல்லது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!