தேங்காய் பூ சாப்பிட்டால் முதுமை காணாமல் போகும் என்பது தெரியுமா?
தேங்காய் பூ சாப்பிடும் யோகா ஆசிரியர் விஜயகுமார்.
தேங்காய் பூவை சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி இயற்கை ஆர்வலர்களுடன் திருச்சியில் நடைபெற்றது.
திருச்சி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் தேங்காய் பூவை சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா என சொற்பொழிவாற்றினார். அவர் பேசுகையில் கூறியதாவது:-
இளநீர், தேங்காய் போன்றவற்றை நாம் அடிக்கடி சாப்பிட முடிந்தாலும், தேங்காய்ப்பூ என்பது அரிதாக கிடைக்கும் ஒன்று தான். தேங்காய் பூ கிடைக்க, முற்றிய தேங்காயை மண்ணில் புதைத்து வைக்க வேண்டும். இருபது நாட்களுக்கு பின்னரே, தேங்காய் குருத்து வளர ஆரம்பிக்கும். குருத்து வளரும் பக்குவத்தில் தேங்காயை உடைத்தால் தேங்காய் பூ கிடைக்கும்.இதுபோல் நன்கு முற்றிய தேங்காய் கன்றில் இருக்கும் வளர்ந்த கரு தான் தேங்காய்ப்பூ.
பனை பூ, குருத்து மற்றும் தேங்காய் பூ, குருத்து தற்போது பல இடங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கேரளாவில் மட்டும் விற்பனையாகி வந்த தேங்காய் பூக்கள், பொள்ளாச்சி, சென்னை திருச்சி, நாமக்கல் போன்ற பல்வேறு மாவட்டங்களில் விற்க ஆரம்பித்துள்ளனர். தைராய்டு பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள் தேங்காய்ப்பூவை சாப்பிட்டு பயனடைகின்றனர். தேங்காய்ப் பூ உண்பதால் உடல் எடையை கட்டுக்கோப்பாக வைக்கவும் முடிகிறது. இதில் குறைந்த அளவு கலோரி இருப்பதால் உடல் எடை குறைய உதவுகிறது. தேங்காய்ப்பூ இன்சுலின் சுரப்பை தூண்டுகிறது. இதனால் ரத்தத்தில் அதிகப்படியான சர்க்கரையை கட்டுப்படுத்த இயலுகிறது.
தேங்காய் பூவிலுள்ள மினரல், வைட்டமின் குடலுக்கு பாதுகாப்பு அளிக்கிறது. மலச்சிக்கலை குணமாக்குகிறது. தேங்காய் பூவில் முதுமையை தடுக்கும் ஆன்டி ஆக்ஸிடென்ட் நிறைய உள்ளது. சுருக்கங்கள், வயதான தோற்றம், சரும தொய்வு போன்றவை நம்மை நெருங்கவிடாது.சிறுநீரக பாதிப்பை குறைக்கும் திறன் தேங்காய்ப் பூவுக்கு உண்டு. மேலும் சிறுநீரக தொற்றுநோய்களையும் குணப்படுத்துகிறது. நச்சுக்களை வெளியேற்றி ஆரோக்கியமான சிறுநீரகத்தை தேங்காய் பூவினால் பெறலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu