மனதை மகிழ்ச்சியாக வைத்திருக்க உதவும் 3 ஹார்மோன்கள் பற்றி தெரியுமா?

மனதை மகிழ்ச்சியாக வைத்திருக்க உதவும் 3 ஹார்மோன்கள் பற்றி தெரியுமா?
மனதை மகிழ்ச்சியாக வைத்திருக்க உதவும் 3 ஹார்மோன்கள் பற்றி தெரிய வேண்டுமானால் தொடர்ந்து படியுங்கள்.

நமது உடல் ஒரு உயிருள்ள தொழிற்சாலை போன்றது. அது தனக்கு தேவையானவற்றை தானே உற்பத்தி செய்து கொள்கிறது. அப்படித்தான் ஹார்மோன்களும் நாம் மன உளைச்சலுக்கு ஆளாகும்போது சந்தோஷத்தை உண்டாக்க மகிழ்ச்சி ஹார்மோன்களை உடலில் சுரக்கிறது.

உதாரணமாக டோபமைனை பாராட்டும் வேதிப்பொருள் என்று கூறலாம். நாம் ஒரு செயலை வெற்றிகரமாக செய்து முடிக்கும் போது இது சுரக்கிறது. அபாரம் என்று தட்டிக் கொடுப்பதை போன்றது இது.


எனவே உங்களின் சிறு வெற்றிகளை கூட கொண்டாடத் தவறாதீர்கள். அப்போதெல்லாம் டோபமைனை சுரக்கும் .அதே போல என்டார் பின்ஸ் எனப்படுபவை இயற்கை வலி நிவாரணிகள் ஆகும். இவற்றை நீங்கள் பல்வேறு வகை நடவடிக்கைகள் மூலம் சுரக்க செய்ய முடியும்.

வியர்வை சொட்ட சொட்ட உடற்பயிற்சி செய்வது, உங்களுக்கு விருப்பமான பாட்டுக்கு நடனமாடுவது, நகைச்சுவை படத்தை பார்ப்பது நண்பர்களுடன் மனம் விட்டு பேசி சிரிப்பது ஆகிய அனைத்தும் என்டார்பின்களை சுரக்க செய்யும்.

மற்றொரு மகிழ்ச்சி ஹார்மோன் ஆக்ஸிடோரின். இது காதல் ஹார்மோன் என்றும் அழைக்கப்படுகிறது. இது சமூகத் தொடர்புகளை ஊக்குவிக்கிறது உடல் ஸ்பரிசத்தின் போது ஏற்படுகிறது .எனவே உங்களுக்கு பிடித்தவர்களுடன் நேரத்தை செலவிடுங்கள் அவர்களை அன்போடு கட்டி பிடியுங்கள். உங்கள் செல்ல பிராணிகளை கொஞ்சி மகிழுங்கள். தேவை உள்ளவர்களுக்கு உதவுங்கள் இவையெல்லாம் பிறருடன் உங்களையும் மகிழ்ச்சியடைய செய்யும் ஆக்சிடோஸின் ஈர்ப்புக்கு வழிகோலும்.

செரட்டோனின் எந்த ஹார்மோன் நமது மன நிலையை சமநிலையில் வைப்பதற்கு உதவுகிறது. இது மகிழ்ச்சி உணர்வை அதிகரிக்கிறது.உடல் நலனையும் உயர்த்துகிறது. அதிகாலை சூரிய ஒளியில் மூழ்கி எழுந்தால் உங்கள் உடலில் செரட்டோனின் அளவு அதிகரிக்கும். பொதுவாக இயற்கை உடன் இணைந்து செல்லும் போது உங்கள் உடலில் செரட்டோனின் அளவு உயர்கிறது. நீங்கள் செய்யும் எந்த உடற்பயிற்சியும் உங்கள் உடலுக்கு மட்டும் நன்மை அளிப்பதில்லை மனதுக்கும் நன்மை கொடுக்கிறது.


உடற்பயிற்சியின் போது என்டார்பின்ஸ், டோபமைன், செரட்டோனின் ஆகியவை சுரக்கின்றன. இது உங்களுக்கு மகிழ்ச்சி மனநிலை ஏற்படும் வாய்ப்பை அளிக்கிறது. ஒருவேளை நடை, யோகா, நடனம், உடற்பயிற்சி என எதுவாக இருந்தாலும் உங்கள் உடலுக்கு சக்தியை கொடுக்கிறது. உங்கள் உடல் மற்றும் மனம் இரண்டையும் மகிழ்ச்சியாக்குகிறது.

எனவே அன்றாட வாழ்வில் உடற்பயிற்சியை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள் உங்களுக்கு மகிழ்ச்சியையும் மன நிறைவையும் கொடுக்கும் செயல்களில் ஈடுபடுங்கள். நல்ல உறவுகளை பராமரித்திடுங்கள். குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுங்கள். நன்றி உணர்வை வளர்த்துக் கொள்ளுங்கள். இவை எல்லாம் உங்கள் உடலை மகிழ்ச்சிகரமாக்க ஹார்மோன்களை சுரக்க செய்யும். உங்களை எப்போதும் சந்தோஷமாக வைத்திருக்கும்.

Tags

Next Story