சப்பாத்திக்கு 20 நிமிடத்தில் ஒரு சுவையான சைடு டிஷ் செய்யலாமா?

Delicious side dish for chapati- சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள தட்டை பயிறு மசாலா செய்வது எப்படி? (கோப்பு படம்)
Delicious side dish for chapati- இன்று இரவு சப்பாத்திக்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? எப்போதும் ஒரே மாதிரி குருமா மற்றும் மசாலாவை செய்து போரத்துவிட்டதா? உங்கள் வீட்டில் தட்டைப்பயறு உள்ளதா? அப்படியானால் அந்த தட்டைப்பயறை ஒரு மணிநேரம் நீரில் ஊற வைத்து, அதைக் கொண்டு மசாலா செய்யுங்கள்.
இந்த தட்டைப்பயறு மசாலா சப்பாத்தி, பூரி போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். கடலை பருப்புடன், இந்த 4 பொருளை சேர்த்து அரைச்சா போதும்.. இட்லி, தோசைக்கு அருமையான சட்னி ரெடி! உங்களுக்கு தட்டைப்பயறு மசாலாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தட்டைப்பயறு மசாலா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது.
தேவையான பொருட்கள்:
* தட்டைப்பயறு - 1 கப்
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* பெரிய தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 1
* பூண்டு - 3 பல்
* இஞ்சி - 1/2 இன்ச்
* கசூரி மெத்தி - 1 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
* உப்பு - சுவைக்கேற்ப
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 2 டீஸ்பூன்
* பட்டை - 1/4 இன்ச்
* கிராம்பு - 1
மசாலா பொடிகள்...
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1/2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* கறி மசாலா தூள் - 1/2 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் தட்டைப்பயறை நீரில் 1 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
* பின் தக்காளியை அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு, சீரகம் ஆகியவற்றை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்பு அதில் இஞ்சி, பூண்டு ஆகியவற்றை தட்டிப் போட்டு, 1 நிமிடம் வதக்க வேண்டும்.
* பிறகு வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அடுத்து அரைத்து வைத்துள்ள தக்காளியை சேர்த்து 1 நிமிடம் நன்கு வதக்க வேண்டும்.
* பின் அதில் மிளகாய் தூள், மல்லித் தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள், கறி மசாலா தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, பச்சை வாசனை போக நன்கு வதக்க வேண்டும்.
* பின்னர் தட்டைப்பயறை சேர்த்து கிளறி, தேவையான அளவு நீரை ஊற்றி கிளறி, குக்கரை மூடி மிதமான தீயில் வைத்து 3 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, சிறிது தட்டைப்பயறை மட்டும் எடுத்து மசித்து, குக்கரில் உள்ள மசாலாவுடன் சேர்த்து, மீண்டும் குக்கரை அடுப்பில் வைத்து, குறைவான தீயில் வைத்து 5 நிமிடம் சற்று கெட்டியாகும் வரை வேக வைத்து இறக்கி, கொத்தமல்லி மற்றும் கசூரி மெத்தியை சேர்த்து கிளறினால், சுவையான தட்டைப்பயறு மசாலா தயார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu