Dark Vs Milk chocolate- டார்க் சாக்லேட் Vs மில்க் சாக்லேட்; குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு எது சிறந்தது?

Dark Vs Milk chocolate- டார்க் சாக்லேட் Vs மில்க் சாக்லேட்; குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு எது சிறந்தது?

Dark Vs Milk Chocolate-டார்க் மற்றும் மில்க் சாக்லேட்டில் உள்ள நன்மைகள் (கோப்பு படம்)

Dark Vs Milk Chocolate - டார்க் சாக்லேட் மற்றும் மில்க் சாக்லேட் இரண்டில் குழந்தைகளின் ஆரோக்கியத்துக்கு மிகவும் சிறந்தது என்பதை தெரிந்துக்கொள்வோம்.

Dark Vs Milk சாக்லேட்- பொதுவாக சாக்லேட்டுகள் சாப்பிடுவதே குழந்தைகளுக்குக் கேடு விளைவிக்கும் ஒரு செயல் தான்.

கடலை மிட்டாய், பொரி உருண்டை, ஆரஞ்சு மிட்டாய் அனைத்தும் குழந்தைகளின் திண்பண்ட வரிசைகளில் இருந்து காணாமல் போய் வெகுநாள்கள் ஆகிவிட்டது. உங்களுக்கு என்ன வேண்டும் என கேட்டால், குழந்தைகள் சட்டென்று சொல்லும் வார்த்தை சாக்லேட் என்று தான். அந்தளவிற்கு குழந்தைகளையும் சாக்லேட்டுகளையும் என்றுமே பிரிக்க முடியாது. அழுகையில் ஈடுபடும் குழந்தைகளை அம்மா சமானதாப் படுத்துகிறாரோ? இல்லையோ? சாக்லேட்டுகள் தான் அவர்களின் அழுகையை நிறுத்தும்.


பெற்றோர்கள் பிரியத்துடனும், குழந்தைகள் அடம்பிடித்தும் வாங்கி சாப்பிடும் சாக்லேட்டுகள் அவர்களின் உடல் நலத்திற்கு ஆரோக்கியமானதா? என்பதை ஒருபோதும் யோசித்தது உண்டா? அவர்களின் ஆசையை நிறைவேற்றுகிறோம் என்ற பெயரில், இளம் வயதிலேயே அவர்களுக்கு பல நோய்களை நாமே விலைக்கொடுத்து வாங்கிக் கொடுக்கிறோம். இந்த சூழலில் டார்க் சாக்லேட் மற்றும் மில்க் சாக்லேட்டில் எது குழந்தைகளுக்கு சிறந்தது? என்னென்ன ஆரோக்கிய நன்மைகள் உள்ளது? என பெற்றோர்கள் தெரிந்துக் கொள்வது அவசியமான ஒன்று.

மில்க் சாக்லேட்டின் ஆரோக்கிய நன்மைகள்:

மில்க் சாக்லேட் தயாரிக்கும் போது கோகோ பவுடர், பால் மற்றும் அதிக சர்க்கரையைப் பயன்படுத்துகின்றனர்.டார்க் சாக்லேட்டுகளை ஒப்பிடும் போது மில்க் சாக்லேட்டுகளில் கோ-கோ பவுடர் குறைவாகவும், அதிக இனிப்பு சுவை இருப்பதால் தான் குழந்தைகள் அதிகளவில் விரும்பி சாப்பிடுகின்றனர்.

மில்க் சாக்லேட்டுகளில் புரோட்டீன் நிறைந்த பால் சேர்க்கப்படுவதால் குழந்தைகளின் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு உதவியாக உள்ளது என்று சில ஆய்வுகள் கூறுகின்றனர்.

வணிக ரீதியாக கிடைக்கும் சில மில்க் சாக்லேட்டுகளில் செயற்கை சுவையூட்டிகள் அதிகளவில் இருக்கும். இருந்தாலும் இது ஒரு பெரிய பிரச்சனை என்று கருத்தில் கொள்ளத் தேவையில்லை. மாறாக அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது.

டார்க் சாக்லேட்டின் ஆரோக்கிய நன்மைகள்:

நாம் சாப்பிடக்கூடிய டார்க் சாக்லேட்டுகளில் அதிக அளவு கோ- கோ பவுடர், குறைந்த அளவு சர்க்கரை மற்றும் பால் சேர்க்கப்படுகிறது. மில்க் சாக்லேட்டுகளை விட கோ- கோ பவுடர் அதிகளவில் சேர்க்கப்படுவதால் கசப்பு சுவையாக இருக்கும் என்பதால் குழந்தைகள் அதிகளவில் விரும்பிச் சாப்பிடுவதில்லை.

இந்த டார்க் சாக்லேட்டில் உடல் செயல்பாடுகளை மேம்படுத்துவது முதல் புத்துணர்ச்சி, அறிவாற்றலை மேம்படுத்துவது குறித்து பல்வேறு நன்மைகள் உள்ளன.

டார்க் சாக்லேட்டில் உள்ள பினாவனாய்டுகள் மற்றும் குழந்தைகளின் அறிவாற்றல் வளர்ச்சி உதவியாக இருப்பதாக சில ஆய்வுகள் கூறுகின்றனர்.


குழந்தைகளுக்கு எது சிறந்த தேர்வு?

பொதுவாக சாக்லேட்டுகள் சாப்பிடுவதே குழந்தைகளுக்குக் கேடு விளைவிக்கும் ஒரு செயல் தான். மில்க் சாக்லேட்டுகளை விட டார்க் சாக்லேட்டுகளில் சர்க்கரை குறைவான அளவு உள்ளது. இவை இரண்டையும் ஒப்பிடும் போது டார்க் சாக்லேட்டுகள் ஒரளவிற்கு சிறந்ததாக அமைகிறது.

குழந்தைகளின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தும் பெற்றோர்களாக நீங்கள் இருந்தால், இனிப்புகளைத் தவிர்ப்பது நல்லது. எப்பொழுதாவது ஒரு முறை ஆசைக்குக் கொடுக்கலாம். இதையே வழக்கமாக்கிக்கொள்வது தவறான செயல்.

Tags

Next Story