உடல் எடை குறைய வேண்டுமா? தினமும் நடனம் ஆடுங்க!

உடல் எடை குறைய வேண்டுமா? தினமும் நடனம் ஆடுங்க!
X

Dancing can help you lose weight- நடனம் ஆடி எடையை குறைக்கலாமா? (கோப்பு படம்)

Dancing can help you lose weight- உடல் எடை குறைய பலவிதமான உடற்பயிற்சிகளை செய்கிறோம். உணவில் கட்டுப்பாடுகளை கடைபிடிக்கிறோம். நடனம் உங்கள் எடையை கணிசமாக குறைக்கும். எப்படி என்று தெரிந்துக்கொள்வோமா?

Dancing can help you lose weight- நல்ல மன ஆரோக்கியம் மற்றும் குறைவான கார்டிசோல் அளவுகள் விரைவான எடையைக் குறைப்பதற்கு உதவியாக உள்ளது.

இன்றைய பெண்களுக்கு குண்டாக இருப்பது தான் பெரும் மன உளைச்சலாக உள்ளது. வீட்டு வேலை, அலுவலக வேலை அனைத்திலும் பிஸியாக இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் கொள்வதில்லை. சில நேரங்களில் ஜிம்மிற்கு சென்றோ? அல்லது வீட்டிலேயே உடற்பயிற்சி செய்து உடல் எடையைக் குறைக்கலாம் என முயற்சி செய்தாலும் அவர்களால் அதை கடைபிடிக்க முடியவில்லை.


இந்த நிலையை நீங்களும் அனுபவித்து உள்ளீர்களா? அப்படி என்றால் உங்களது எடையைக் குறைக்க மற்ற உடற்பயிற்சிகளை விட்டு விட்டு நடனத்தில் உங்களது கவனத்தை செலுத்துங்கள். பொழுதுப்போக்கு விஷயங்களில் ஒன்றாக உள்ளதால், நீண்ட காலத்திற்கு இந்த பயிற்சிகளை உங்களால் செய்ய முடியும்.

சமீபத்திய ஆய்வில் கூட அதிக எடை மற்றும் உடல் பருமன் உள்ளவர்களுக்கு பல்வேறு வகையான நடனத்தின் மூலம் ஆரோக்கிய நன்மைகள் கிடைப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. ஆம் வாழ்க்கையில் தொடர்ந்து நடன பயிற்சியை மேற்கொள்பவர்களை மற்றவர்களுடன் ஒப்பிடும் போது , இடுப்பு சுற்றளவு, உடல் கொழுப்பின் சதவீதம் கணிசமாக குறைகிறது என ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.

நடனப் பயிற்சியின் முக்கியத்துவம்:

வாக்கிங், ஜாக்கிங், எடை தூக்குதல் போன்ற பயிற்சிகளை மேற்கொள்ளும் போது உடல் வலியை உணர்வதோடு சில நேரங்களில் உடல் அசதியாகிவிடும். அதே சமயம் நீங்கள் நடனம் ஆடுவது உங்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும். இதோடு உங்களை எப்போதும் சுறுசுறுப்பாகவும் தசைகளுக்கு வலுவாகவும் அமைகிறது.


நடனம் மன அழுத்தத்தைக் குறைக்க உதவும் அதே சமயத்தில், புத்துணர்ச்சியைக் கொடுக்கிறது. நல்ல மன ஆரோக்கியம் மற்றும் குறைவான கார்டிசோல் அளவுகள் விரைவான எடையைக் குறைப்பதற்கு உதவியாக உள்ளது.

உடலில் உள்ள ஒவ்வொரு தசையையும் பலப்படுத்துகிறது மற்றும் உங்களை நெகிழ்வாகவும் வைத்திருக்கிறது. நீங்கள் ஒவ்வொரு நாளும் 30 நிமிடமாவது நடனத்தில் ஈடுபடும் போது, சுமார் 130 - 250 கலோரிகள் வரை எரிக்க முடியும்.

ஜூம்பா( Zumba) என்பது நடனம் மற்றும் ஏரோபிக் அசைவுகளை நீங்கள் செய்யும் போது, உங்களது தசைகளை வலுவாக்குகிறது. மேலும் உங்களைப் புத்துணர்ச்சியாகவும் வைத்திருக்கிறது. ஹிப்- ஆப் டான்ஸ், பெல்லி டான்ஸ், ஜாசர்சைஸ் போன்ற நடனப் பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலம் உடல் எடையைக் குறைக்க முடியும். ஏரோபிக் நடனம் வாரத்திற்கு 2 முதல் 3 நாட்கள் வரை நீங்கள் மேற்கொள்ள வேண்டும்.


பெல்லி டான்ஸ் மேற்கொள்ளும் போது வயிறு, இடுப்பு, முதுகு மற்றும் வயிற்று தொப்பையைக் குறைக்கவும் உதவுகிறது.

இது போன்ற நடனப் பயிற்சிகள் உடல் எடையைக் குறைப்பதற்கு மட்டுமின்றி, மேம்படுத்தப்பட்ட இரத்த ஓட்டம், ஒரு வலுவான நோய் எதிர்ப்பு அமைப்பு,சிறந்த தூக்கம், மள அழுத்தம் குறைவு, நீரிழிவு மற்றும் இதய நோய் சம்பந்தப்பட்ட பல உடல் நல பிரச்சனைகளையும் குறைக்க உதவியாக உள்ளது.

நடனம் ஆடுவது உடலுக்கும் மனதுக்கும் அதிக உற்சாகத்தை ஏற்படுத்துகிறது. அதனால் நடனத்தை அடிக்கடி ஆடும்போது உடல் ஆரோக்கியத்தும், மன ஆரோக்கியத்துக்கும் அதிக நன்மையை ஏற்படுத்துகிறது. அதனால் ஓய்வு நேரங்களில் நடனமாடி உடல் எடையை குறைத்து விடலாம்.

Tags

Next Story
ai in future agriculture