கல்லூரி மாணவியரும் விரும்பி உடுத்தும் காட்டன் புடவைகள்; அதில் இத்தனை ரகங்கள் இருக்கா?
Cotton sarees are also popular among college girls- புடவையில், பெண்களுக்கு தனி அழகு வந்துவிடுகிறது. (கோப்பு படம்)
Cotton sarees, college girls, so many varieties- சேலைகளில் காட்டன் புடவைகளுக்கு என்று தனி ரசிகர் பட்டாளம் உண்டு. உடுத்துவதற்கு வசதியாகவும், அதே சமயம் நேர்த்தியான கம்பீரமான தோற்றம் தருவது காட்டன் புடவைகள். எல்லா பருவ நிலைகளிலும் அணிந்து கொள்ள வசதியாக இந்த காட்டன் புடவைகள் இருக்கும்.
முன்பெல்லாம் காட்டன் புடவை என்று சொன்னாலே அதை பராமரிப்பது மிகவும் கடினம் என்று தோன்றும். இப்பொழுது பியூர் காட்டன் மட்டுமின்றி காட்டனுடன் வேறு சில நூல்களும் கலந்து பராமரிப்பதற்கு எளிதாகவும் பார்க்கும் பொழுது வசீகரிக்க வைக்கும் விதத்திலும் பல்வேறு புடவைகள் வரத்தொடங்கி விட்டன. இருப்பினும் காட்டனுக்கு என்று பெயர்பெற்ற பல்வேறு வகையான புடவைகள் உள்ளன.
கோவை கோரா காட்டன் புடவைகள்:
இந்த வகையான புடவைகள் பருத்தியும் பட்டும் கலந்த கலவையாகும். நல்ல தரமான பருத்தி நூலுடன் பாரம்பரியமிக்க பட்டு நூலும் கலந்து இந்த கோரா காட்டன் புடவைகள் தயாரிக்கப்படுகிறது. இந்த கோர காட்டன் புடவைகள் வண்ணமயமான வடிவமைப்புடன் தயாராகிறது. எளிமையான அதேசமயம் எடுப்பான தோற்றம் கிடைக்க வேண்டும் என்று விரும்பினால் நீங்கள் கண்ணை மூடிக்கொண்டு கோவை கோரா காட்டன் புடவைகளை தேர்வு செய்யலாம்.
காதி காட்டன் புடவைகள்:
கண்களை உறுத்தும் வகையில் இல்லாமல் எளிமையான கம்பீரமான தோற்றம் பெற்றிட இந்த காதி காட்டன் புடவைகளை தேர்வு செய்திடுங்கள். காதி காட்டன் என்பது கைத்தறி சேலைகள் ஆகும். இந்த காட்டனில் ஃபேப்ரிக் சில்க் பயன்படுத்தப்பட்டிருக்கும். காட்டன் புடவை பிரியர்கள் அலமாரியில் கண்டிப்பாக இடம் பெற்றிருக்கும் காதி காட்டன் புடவை.
கோட்டா தோரியா புடவைகள்:
ராஜஸ்தான் மாநிலத்தின் கோட்டா என்னும் பகுதியில் இருந்து கிடைக்கக்கூடிய புடவைகள் இந்த கோட்டா தோரியா புடவைகள். இதில் புடவை முழுவதும் சதுரங்களால் ஆன வடிவமைப்பை கொண்டிருக்கும். பார்ப்பதற்கு அழகாகவும் வசீகரமானதாகவும் இருக்கக்கூடிய புடவைகள் இவை.
செட்டிநாடு காட்டன் புடவைகள்:
வழக்கமான காட்டன் புடவைகளை விட செட்டிநாடு காட்டன் புடவை சற்று அடர்த்தி அதிகமாக இருக்கும். இதில் பெரிய அளவிலான வேலைப்பாடுகள் இல்லாமல் எளிமையான கட்டங்கள் மற்றும் கோடுகள் போன்ற அமைப்புகள் அதிகம் இருக்கும். பெரிய பார்டர்களை கொண்டு பல்லுவிலும் இதே கட்டம் மற்றும் கோடுகளால் டிசைன் செய்யப்பட்டிருக்கும். பல ஆண்டுகளாக பாரம்பரியமாக நெய்து வரப்படும் இந்த செட்டிநாடு காட்டன் புடவை பலரின் விருப்புத்தேர்வாகவும் இருக்கிறது.
இவை மட்டுமின்றி இன்னும் பல்வேறு வகையான புகழ்பெற்ற காட்டன் புடவைகள் இருக்கின்றன. காட்டன் புடவை என்றாலே இல்லத்தரசிகள், ஆசிரியர்கள், அலுவலகம் செல்லும் பெண்கள் இவர்களுக்கானது என்ற நிலை மாறி இன்று கல்லூரி செல்லும் பெண்கள் கூட அதிகம் விரும்பும் வகையில் காட்டன் புடவைகளில் பல்வேறு மாறுதல்களும் டிசைன்களும் மெருகூட்டப்பட்டு அனைவரின் விருப்பத்தேர்வாக மாறி வருகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu