/* */

தனியா எனப்படும் மல்லியின் பயன்கள் தெரியுமா? வாங்க பாக்கலாம்

Coriander Powder Meaning in Tamil-மல்லித் தூளை உணவில் அதிகம் சேர்ப்பதால் இதயம் சார்ந்த பிரச்சனைகள் வராமல் தடுத்து இதயத்திற்கு ஆரோக்கியத்தை அளிக்கிறது

HIGHLIGHTS

தனியா எனப்படும் மல்லியின் பயன்கள் தெரியுமா? வாங்க பாக்கலாம்
X

Coriander Powder Meaning in Tamil-நம் நாட்டில் கிடைக்கும் பழமையான மூலிகையெல்லாம் சஞ்சீவியாக விளங்குகிறது. உதாரணத்திற்கு, மல்லி பொடியின் குணங்களை எடுத்துக் கொள்வோம். மல்லி பொடி அளிக்கும் உடல்நல பயன்கள் நம்மை பிரமிக்க வைக்கும்.

கொத்தமல்லி விதைகள் மூலம் தயாரிக்கப்படும் இது மல்லி தூள் என அழைக்கப்படுகிறது. இதில் அதிகளவு நார்சத்து உள்ளதால் இதயம் சார்ந்த பிரச்சனைகள் வராமல் தடுத்து இதயத்திற்கு ஆரோக்கியத்தை அளிக்கிறது.

நம் நாட்டில் விளையும் மற்ற மசாலாப் பொருட்களை போலவே, மல்லியும் வருடம் முழுவதும் கிடைக்கும் ஒரு மசாலா பொருளே.அதனை பொடியாக்கியும் உபயோகிக்கலாம். 100 கிராம் அளவுகொண்ட தனியாவில் மொத்த கொழுப்பு 18 கிராம், நிறைவுற்ற கொழுப்பு 1 கிராம், சோடியம் 35 மி.கி, பொட்டாசியம் 1,267 மிகி, மொத்த கார்போஹைட்ரேட் 55 கிராம், நார்ச்சத்து 42 கிராம், புரதம் 12 கிராம், வைட்டமின் சி 35%, கால்சியம் 70%, இரும்புச்சத்து 90%, மெக்னீசியம் 82% அடங்கியுள்ளது

8% நார்ச்சத்து மற்றும் 2.9% கால்ஷியம் அதில் அடங்கியுள்ளது. அதனால் ஆரோக்கியமான மசாலா பொருட்களில் இதுவும் ஒன்றாக விளங்குகிறது.

ஐரோப்பியாவில் பல இடங்களில் இதனை "ஆன்டி-டயபெடிக்" செடி மருத்துவ குணங்களை கொண்டுள்ள மல்லி பொடியை பற்றி கூறுகின்றனர்

இரத்தத்தில் உள்ள சர்க்கரையை கட்டுப்படுத்தும்

சர்க்கரை நோய் என்பது உலகம் முழுவதும் பலருக்கும் உள்ள ஒரு பொதுவான வியாதி தான். மல்லி பொடியை உட்கொண்டால் அது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும் என்று பல ஆராய்சிகள் கூறுகிறது.

சால்மோனெல்லா என்ற பாக்டீரியாவை அழிக்க மல்லி பயன்படுகிறது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. சால்மோனெல்லா பாக்டீரியா உணவு சம்பந்தமான நோய்களை உண்டாக்கும். உங்கள் உணவுகளில் மல்லி போன்ற ஆரோக்கியமான மசாலாக்களை சேர்த்தால் இவ்வகை நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்கலாம்.

பருக்களுக்கு நிவாரணி

உடல்நல பலன்களை தவிர மல்லி பொடி பருக்களை நீக்கவும் பெரிதும் உதவுகிறது. இளைஞர்களுக்கு பருக்கள் என்றாலே பெரிய பயம். மல்லி பொடியையும் மஞ்சளையும் அல்லது மல்லி சாற்றை பயன்படுத்தி வந்தால் பருக்களை பெரிதளவில் குறைக்கலாம்.

கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தும்

மல்லி பொடியில் உள்ள மிகப்பெரிய மருத்துவ குணம், அது கொலஸ்ட்ராலை வெகுவாக குறைக்கும். மல்லி உங்கள் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை வெகுவாக குறைத்து நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்கும் என்று ஆய்வுகள் கூறுகிறது.

 • பெரிய அம்மை போன்ற சுலபமாக பரவக் கூடிய வியாதிகளுக்கு மல்லியில் உள்ள மருத்துவ குணங்கள் இந்த கிருமிகளுக்கு எதிராக போராடி அதனை அழிக்கும் ஆற்றலை ஓரளவுக்கு பெற்றுள்ளது
 • மாதவிடாயின் போது இரத்த கசிவு அதிகமாக இருந்தால் மல்லி பொடியை அல்லது மல்லி விதையை வெந்நீரில் போட்டு உட்கொள்ளுங்கள்.
 • மல்லி விதையை தேநீராக தினமும் காலையில் அருந்தி வரலாம். இதன்மூலம் வயிற்றில் உள்ள வாயுக்களை அகற்றுகிறது. வாயு மட்டுமல்லாது சளி, இருமல், மைக்ரேன் தலைவலி, ரத்தக் கொதிப்பு, சர்க்கரை, பித்தக் கிறுகிறுப்பு, சிறுநீரக பாதை நோய்கள் முதலான பல நோய்களை போக்க வல்லது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 12 April 2024 5:16 AM GMT

Related News

Latest News

 1. லைஃப்ஸ்டைல்
  தமிழக கிராம உணவின் சிறப்புகள்
 2. குமாரபாளையம்
  மழை வேண்டி மழைக்கஞ்சி வழங்க பாட்டுப்பாடி அரிசி தானம் பெற்ற பொதுமக்கள்
 3. லைஃப்ஸ்டைல்
  வாழ்க்கையின் வலிகூட நமக்கான பாடம்தான்..! கற்றுக்கொள்வோம்..!
 4. லைஃப்ஸ்டைல்
  மூளையை சுறுசுறுப்பாக்குங்கள்: புத்திசாலித்தனமாக செயல்பட 10 வழிகள்
 5. லைஃப்ஸ்டைல்
  இனிய உறவாக தோழனின் தோள் பாதுகாக்கும்..!
 6. இந்தியா
  5ஜி நெட்வொர்க் ஏஐ பயன்பாட்டில் தானியங்கி சேவை: சி-டாட், ஜோத்பூர் ஐஐடி...
 7. கடையநல்லூர்
  கேரளாவில் பறவை காய்ச்சல்: தமிழக-கேரள எல்லையில் மாவட்ட ஆட்சியர்...
 8. லைஃப்ஸ்டைல்
  கோடையில் கூந்தலுக்கு 'கவசம்'
 9. லைஃப்ஸ்டைல்
  இளம் பெண்களே..உங்கள் சருமம் அழகாக இருக்கணுமா? அவசியம் படீங்க..!
 10. தென்காசி
  கள்ள நோட்டு வழக்கில் 6 நபருக்கு 7 ஆண்டு கடுங்காவல்: நீதிமன்றம் அதிரடி