/* */

தொடர்ந்து ஏசி பயன்பாடு நோய்த்தொற்று ஏற்படுத்தும்: எப்படி என தெரியுமா?

தொடர்ந்து ஏசி பயன்பாடு நோய்த்தொற்று ஏற்படுத்தும்: அது எப்படி என்பதை அறிய தொடர்ந்து படிக்கலாம்.

HIGHLIGHTS

தொடர்ந்து ஏசி பயன்பாடு நோய்த்தொற்று ஏற்படுத்தும்: எப்படி என தெரியுமா?
X

தற்போது கோடை காலம் என்பதால் வெயில் வாட்டி வதைக்கிறது. இந்த ஆண்டு அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்து இருப்பதால் மக்கள் அனலில் இட்ட புழு போல் அன்றாடம் துடித்துக்கொண்டிருக்கிறார்கள்.

ஒருபுறம் தாங்க முடியாத வெயில் மறுபுறம் ஜில்லுன்னு சுகமாய் வாழ ஏசி வாங்குங்கள் என்ற கவர்ச்சிகரமான விளம்பரங்கள். இதனால் நாளுக்கு நாள் குளிர்சாதன எந்திரங்களின் விற்பனை அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. உஷ்ணத்தில் இருந்து தப்பிக்க பெரு நகரங்களில் உள்ள பெரும்பாலான வீடுகளில் ஏசி எந்திரத்தை பொருத்திவிட்டார்கள்.

இன்னும் நிறைய பேர் வீடு, அலுவலகம் கார் என்று எல்லாவற்றிலும் ஏசி எந்திரங்களை பயன்படுத்தி அந்த சௌகரியத்தை தங்களுக்கு கிடைத்த வரமாக கருதிக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் முறையற்ற ஏசி பயன்பாடு வரம் அல்ல உடலுக்கு பாரம். உடலின் இயற்கை தன்மை தொடர்ச்சியான ஏசி குளிரால் சிதைக்கப்படுகிறது.

ஏசி எந்திரம் எவ்வாறு செயல்படுகிறது என்பது எல்லோருக்கும் தெரியும். அந்த எந்திரம் வெளியே இருக்கும் காற்றை உள்வாங்கி குளிர்வித்து அறைக்குள் அனுப்பும். அதே நேரத்தில் அறைக்குள் இருக்கும் சூடான காற்றையும் தூசுவையும் வெளியே அனுப்பும். இதனை முறையாக பராமரித்து அளவோடு பயன்படுத்தினால் ஆபத்து இல்லை முறையாக பராமரிக்கா விட்டால் எந்திரத்தின் உள்ளே சேரும் தூசுகளால் வெளியே இருந்து உள்ளே வரும் காற்றும் மாசு அடைந்து விடும். அந்த மாசுவால் அறைக்குள் லெஜியோ நல்லா நியூ மோபிலியா, ஆப்டினோ மைசட்ஸ் என்ற இருவகை பாக்டீரியாக்கள் பரவும்.

இவை இரண்டும் அறைகளில் பரவி இருந்தால் முதலில் தொண்டையில் அலர்ஜியை உருவாக்கும். பின்பு எரிச்சலை ஏற்படுத்தி புண்களை தோற்றுவிக்கும். இதன் மூலம் அறிகுறி வறட்டு இருமல் ஆக வெளிப்படும். அடுத்து மூக்கில் இருந்து நீர் ஒழுகுதல், கண் எரிச்சல், மூச்சு விட சிரமம் ஏற்படுதல் போன்ற பல்வேறு ஆரோக்கிய சிக்கல்கள் தோன்றும். இவைகளில் இருந்து தப்பிக்க வேண்டும் என்றால் ஏசி எந்திரத்தை முறையாக பராமரிக்க வேண்டும்.

அலுவலகம் வீடு, கார் போன்று புழங்கும் அனைத்து இடங்களிலும் ஏசி பயன்படுத்துவது நல்லதல்ல. ஏனென்றால் தொடர்ச்சியாக குளிர்ச்சி சருமத்தில் பட்டுக் கொண்டிருந்தால் சருமத்தின் நீர் தன்மை குறைந்து வறண்டு போய்விடும்.வாய் சுகாதாரத்தை பற்றி நாம் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தாலும் இரவில் தூங்கச் செல்லும் முன்பு பல் துலக்குபவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்து கொண்டிருக்கிறது.

ஏசி அறையில் காற்றோட்டம் இருக்காது அதனால் வாய் சுகாதாரம் இல்லாதவர்கள் வெளிப்படுத்தும் மூச்சு காற்றால் அந்த அறையில் தூங்கும் மற்றவர்களும் பாதிக்கப்படுவார்கள். ஏசி அறையில் அமர்ந்திருப்பவர்கள் பொது சுகாதாரத்தை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். அவர்கள் உமிழ் நீர் தெறிக்க பேசக்கூடாது மூக்கை பொத்திக்கொள்ளாமல் தூங்குவதையும் வாயைப் பற்றிக் கொள்ளாமல் இருமுவதையும் தவிர்க்க வேண்டும்.

சுத்தப்படுத்தப்படாத காலணிகள் ,துவைக்காத சாக்ஸ் போன்றவற்றை அணிந்து கொண்டு ஏசி அறைக்குள் செல்லக்கூடாது. காருக்குள் ஏசியை பயன்படுத்துவதிலும் அதிக கவனம் தேவை. சிலர் அலட்சியமாக காருக்குள் ஏசியை கூட விட்டுக்கொண்டு காரின் ஜன்னலை மூடிக் கொண்டு தூங்குவார்கள். இது ஆபத்தானது. நீண்ட நேரம் உள்ளே இருந்தால் குளிர் அதிகமாகி உடல் வெப்பம் குறையும் அதைத்தொடர்ந்து ரத்தத்தின் அடர்த்தி அதிகமாகி இரத்த நாளங்களில் ரத்த ஓட்டம் குறையும் இது தூக்கத்தில் மயக்கம் மூச்சுத் திணறலை உருவாக்கி உயிர் பிரியும் நிலைமையை கூட உருவாக்கிவிடும்.

அதனால் காருக்குள் ஏசியை போட்டுக் கொண்டு தூங்குவது நல்லது அல்ல ஏசி எந்திரங்கள் வரமல்ல. பாரம் தான் என்பதை புரிந்து கொண்டு அதனை வேறு வழியே இல்லாத நிலை உருவாகும் போது மட்டும் பயன்படுத்துவது நல்லது.

Updated On: 2 April 2024 2:57 PM GMT

Related News

Latest News

 1. லைஃப்ஸ்டைல்
  துரோகிகளை தூக்கி எறியுங்கள்..! துன்பங்கள் தானே விலகும்..!
 2. காஞ்சிபுரம்
  12 மணி நேரம் தொடர் பணி : வருவாய்த்துறை ஊழியர்கள் பணிக்கு வரவேற்பு..!
 3. லைஃப்ஸ்டைல்
  அப்பாவின் கோபமும் மாயமாகும் அக்காவின் ஒற்றை சொல்லால்..!
 4. ஈரோடு
  ஈரோடு மக்களவைத் தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருப்பறையில் வைத்து...
 5. காஞ்சிபுரம்
  காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல்...
 6. லைஃப்ஸ்டைல்
  எப்போதும் குழந்தைகளுடன் உறங்கும் பெற்றோரா நீங்கள்? இதை படியுங்க..!
 7. லைஃப்ஸ்டைல்
  மனைவியுடன் சண்டையில் கணவன் தோற்பது சகஜமப்பா..! அது பெருந்தன்மை..!
 8. மானாமதுரை
  வெளி நாட்டில் வேலைக்கு சென்ற கணவரை மீட்க , மனைவி மனு!
 9. லைஃப்ஸ்டைல்
  அற்புதமான சுவையில் வாழைப்பூ வடை செய்வது எப்படி?
 10. லைஃப்ஸ்டைல்
  பல் பிரச்னைகளுக்கு வீட்டு வைத்தியம் என்னென்ன?