மனிதன் சிரிக்காத நாட்கள், அவன் வாழாத நாட்கள்!
Laughing Quotes in Tamil
Laughing Quotes in Tamil
நடிகர் வடிவேலு நடிப்பதை விட்டு, பல ஆண்டுகள் ஆனாலும் அவரது படத்தின் காட்சிகள் தொடர்ந்து மீம்ஸ்களாக வெளிவந்துகொண்டே இருக்கிறது. நகைச்சுவை சேனல்களில் மணிக்கணக்கில் வடிவேலு காமெடி காட்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது. அவர் நடிப்பதை நிறுத்தினாலும், தொடர்ந்து அவரது காமெடி காட்சிகள், தமிழ் சினிமாவில் அவர் நிலைத்திருப்பதாக கருத தோன்றுகிறது. அதே போல், நகைச்சுவை நடிகர் விவேக், மறைந்தாலும் அவரது நகைச்சுவையால் இன்றும் ரசிகர்களால் மிகவும் ரசிக்கப்படுகிறார். அவரும் ரசிகர்களின் மனதில் வாழ்கிறார்.
கணவனிடம் மனைவி சொல்கிறாள்;
அன்பே
உன் கையை பிடித்து
நகை கடை வரை செல்ல
ஆசை.....
செல்போனும் ஊறுகாய் போல்
தொடாமல் பலரும் சாப்பிடுவதில்லை
தான் உண்டு
தன் வேலை உண்டுனு
இருந்தவர்கள் எல்லாம்
இப்போ தான் உண்டு
தன் போன் உண்டுன்னு
இருக்கின்றனர்
பிறகு பார்த்துக்
கொள்ளலாம் என்று
தள்ளிப்போடாத
ஒரே செயல்
இப்போதைக்கு மொபைல்
சார்ஜிங் மட்டும்
தான் போல
கணவன்
நாசாவுக்கு போறதும்
நாசமா போறதும்
கட்டிய மனைவியே தீர்மானிக்கிறாள்
நம்ம வாழ்க்கைல
சந்தோஷம் என்பது
ராங்கால் மாதிரி
எப்பவாச்சும் வரும்
ஆனா கஷ்டம் என்பது
கம்பெனிக்கால் மாதிரி
இம்சை எப்பவும் வரும்
பிரச்சினை
கவுண்டமணியாக இருந்தால்
வாழ்க்கை எதிர்பாராத
நேரத்தில் அடி வாங்கும்
செந்திலாகத் தான் பயணிக்கிறது
உங்க மனைவி ஏன் உங்களை திட்டீட்டே இருக்காங்க...?
எங்க அம்மா, ஊருக்கு போயிட்டாங்க... மாமியார் கூட சண்டை போட முடியாத அந்த கோபம் தான்
என்ன, உங்க பையன் சிகரட் பிடிக்கிறான், நீங்க அவன்கிட்ட கேட்க மாட்டீங்களா?
இல்லீங்க, அவன் பிராண்ட் வேற, என்னோட பிராண்ட் வேற
என்னடீ, உங்க வீட்டுக்காரர் போனையே தொட மாட்டாரா?
ஆமா, போன் ஸ்கிரீன்ல எங்க கல்யாண போட்டோவை வெச்சிருக்கேன்
- இப்படிப்பட்ட நகைச்சுவைகள், படிக்க படிக்க மனசு லேசாகும். வாய்விட்டு சிரிக்க தோன்றும். மனதில் உள்ள கவலைகள் மறந்து போகும். இரண்டரை மணி நேரம் பார்க்கிற சினிமாவிலேயே, ஒரு மணி நேரத்துக்கு மேல் நகைச்சுவை காட்சிகள் இடம்பெறுகிறது. நூறு ஆண்டுகள் வாழ்கிற மனித வாழ்க்கைக்கு, ஒவ்வொரு நாளிலும் நகைச்சுவை மிக அவசியமானதாக உள்ளது.
மக்கள் கவலை மறந்து, வாய்விட்டு மணிக்கணக்கில் சிரிக்க வேண்டும் என்பதற்காகவே, நகைச்சுவை படங்கள் என்றே, பல படங்கள் எடுக்கப்படுகிறது. குறிப்பாக, காமெடி நடிகர்கள், ஹீரோக்களின் நண்பர்களாக, படம் முழுக்க வருவதே, அவ்வப்போது அவர்கள் செய்யும் காமடெி ரசிகர்களை சிரிக்க வைக்க வேண்டும் என்பதற்காக தான்.
சினிமாவில் வரும் காமடெி காட்சிகளை போல, வாழ்க்கையில் நடக்கும் காமெடியான விஷயங்களையும் ரசித்து பார்த்து சிரிக்க வேண்டும். ஆனால்,மற்றவர் படும் துன்பங்களை பார்த்து சிரித்து விடக்கூடாது என்பது மிகவும் முக்கியம்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu