தேங்காய்ப் போளி சாப்பிட்டு இருப்பிங்க.....நெல்லிக்காய் போளி சாப்பிடறீங்களா
நெல்லிக்காய் போளி. (பைல் படம்)
பால் போளி, தேங்காய்ப் போளி, பருப்புப் போளி தான் செய்து சாப்பிட்டு இருப்பீங்க. நெல்லிக்காய் கிடைக்கும் சீஸனில் இந்தப் போளியை செய்து சுவைக்கலாம்.
தேவையான பொருட்கள்:
மைதா மாவு - 50 கிராம்,
பெரிய நெல்லிக்காய் - 5,
நெய் - 75 மில்லி,
கடலைப்பருப்பு - 50 கிராம்,
வெல்லம் - 100 கிராம் (பொடித்துக்கொள்ளவும்),
தேங்காய்த் துருவல் - 4 டேபிள்ஸ்பூன்,
கேசரி பவுடர் - ஒரு சிட்டிகை,
நல்லெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்,
ஏலக்காய்த்தூள் - சிறிதளவு.
செய்முறை:
1. ஒரு பாத்திரத்தில் மைதா மாவை போட்டு அதனுடன் நல்லெண்ணெய், கேசரி பவுடர் சேர்த்து சிறிதளவு தண்ணீர்விட்டு கெட்டியாகப் பிசைந்து மூடி வைக்கவும்.
2. நெல்லிக்காயை வேகவைத்து உதிர்த்து கொட்டை எடுக்கவும்.
3. கடலைப்பருப்பை வெறும் வாணலியில் லேசாக வறுத்து, ஒரு மணி நேரம் ஊறவைத்து குக்கரில் வைத்து ஒரு விசில் வரும் வரை வேகவிட்டு எடுத்து தண்ணீர் வடிக்கவும்.
4. வெல்லத்தைச் சிறிதளவு தண்ணீர்விட்டு கொதிக்கவிட்டு வடிகட்டவும்.
5. வேக வைத்த கடலைப்பருப்பு, நெல்லிக்காய், தேங்காய்த் துருவல் சேர்த்து மிக்ஸியில் சிறிதளவு வெல்லத் தண்ணீரை விட்டு கெட்டியாக அரைக்கவும்.
6. கடாயில் மீதம் உள்ள வெல்லத் தண்ணீர், அரைத்த விழுது சேர்த்துக் கெட்டியாகக் கிளறவும். ஆறிய உடன் ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலந்து சிறு உருண்டைகளாக உருட்டவும்.
7. ஒரு வாழையிலையில் சிறிதளவு நெய் தடவி, மைதா மாவை சிறு உருண்டைகளாக உருட்டி வைத்து லேசாக குழவியால் உருட்டி பூரணத்தை உள்ளே வைத்து மூடி கைகளால் போளி வடிவில் தட்டவும்.
8. தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும் தீயைக் குறைத்து, தட்டிவைத்து இருக்கும் போளியை ஒவ்வொன்றாகப் போட்டு இருபுறமும் நெய் தடவி வாட்டி எடுக்கவும்.
அருமையான நெல்லிக்காய் போளி ரெடி......
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu