தேங்காய்ப் பால் பிரிஞ்சி சாதம், கோவக்காய் பொரியல் செய்வது எப்படி?
Coconut milk brinji rice and courgette fritters recipe- தேங்காய்ப்பால் பிரிஞ்சி சாதம் (கோப்பு படம்)
Coconut milk brinji rice and courgette fritters recipe- சுவையான ரெஸ்டாரெண்ட் ஸ்டைல் தேங்காய்ப்பால் பிரிஞ்சி சாதம் வித் கோவக்காய் பொரியல் எப்படி வீட்டிலேயே சிம்பிளா செய்வது என்று தெரிந்துக்கொள்வோம்,
தேங்காய்ப்பால் பிரிஞ்சி சாதம் செய்ய தேவையான பொருட்கள்;
தேங்காய்-1
தேங்காய் எண்ணெய்-1 குழிக்கரண்டி.
பட்டை-1
கிராம்பு-1
சோம்பு-1 தேக்கரண்டி.
ஏலக்காய்-4
வெங்காயம்-2
பச்சை மிளகாய்-4
இஞ்சி பூண்டு பேஸ்ட்-1 தேக்கரண்டி.
கேரட்-1
பீன்ஸ்-1கப்.
உருளை-1
கொண்டைக்கடலை-1கப்.
உப்பு-1 தேக்கரண்டி.
புதினா, கொத்தமல்லி- தேவையான அளவு.
அரிசி-1 கப்.
கொத்தமல்லி- சிறிதளவு.
தேங்காய் பால் பிரிஞ்சி சாதம் செய்முறை விளக்கம்:
முதலில் முழு தேங்காய் நன்றாக துருவி அதை மிக்ஸியில் சேர்த்து தண்ணீர் சிறிது ஊற்றி அரைத்து வடிக்கட்டி எடுத்துக்கொள்ளவும்.
இப்போது குக்கரில் 1 குழிக்கரண்டி தேங்காய் எண்ணெய் சேர்த்து பட்டை 1, கிராம்பு 1, சோம்பு 1 தேக்கரண்டி, ஏலக்காய் 4 சேர்த்துவிட்டு பொடியாக நறுக்கிய வெங்காயம் 2, பச்சை மிளகாய் 4 சேர்த்து நன்றாக வதக்கவும். இப்போது இதில் 1 தேக்கரண்டி இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும். பொடியாக நறுக்கிய கேரட் 1, பீன்ஸ் 1 கப், உருளை 1 ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கவும்.
இத்துடன் வேகவைத்த கொண்டைக்கடலை 1 கப், புதினா, கொத்தமல்லி தேவையான அளவு, உப்பு 1 தேக்கரண்டி சேர்த்து கலந்துவிட்ட பிறகு ஏற்கனவே தயார் செய்து வைத்திருக்கும் தேங்காய்ப் பாலை சேர்க்கவும். 1 கப் அரிசிக்கு 1 ½ கப் தேங்காய்ப்பால் சேர்க்க வேண்டும். இது சற்று கொதித்ததும் ஏற்கனவே ஊறவைத்திருக்கும் அரிசியை 1 கப் சேர்த்துக்கொள்ளவும். கடைசியாக கொத்தமல்லி சிறிது தூவி குக்கரை மூடி 2 விசில் வைத்து எடுத்தால் சுவையான தேங்காய்ப் பால் பிரிஞ்சி சாதம் தயார். நீங்களும் இந்த சூப்பரான ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பாருங்கள்.
கோவக்காய் பொரியல் செய்ய தேவையான பொருட்கள்;
கோவக்காய்-2 கப்.
எண்ணெய்- தேவையான அளவு.
கடுகு-1 தேக்கரண்டி.
உளுந்து-1 தேக்கரண்டி.
கருவேப்பிலை-சிறிதளவு.
வெங்காயம்-1
உப்பு-1 தேக்கரண்டி.
தக்காளி-1
மஞ்சள் தூள்-1/4 தேக்கண்டி.
மிளகாய் தூள்-1 தேக்கரண்டி.
தேங்காய் துருவல்- சிறிதளவு.
கோவக்காய் பொரியல் செய்முறை விளக்கம்;
முதலில் கோவக்காயை சின்ன சின்னதாக வெட்டி எடுத்துக்கொள்ளவும். இப்போது அடுப்பில் கடாயை வைத்து தேவையான அளவு எண்ணெய்யை ஊற்றிக் கொள்ளவும்.
அதில் 1 தேக்கரண்டி கடுகு, 1 தேக்கரண்டி உளுந்து சேர்த்து கருவேப்பிலை சிறிது, நறுக்கிய வெங்காயம் 1 சேர்த்து நன்றாக வதக்கவும். இப்போது இதில் 1 தேக்கரண்டி உப்பு, நறுக்கிய தக்காளி 1, மஞ்சள் தூள் 1/4 தேக்கரண்டி சேர்த்து நன்றாக வதக்கவும். இப்போது வெட்டி வைத்திருக்கும் கோவக்காய் 2 கப்பை சேர்க்கவும். இத்துடன் 1 தேக்கரண்டி மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாக கிளறிவிடவும், கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து இப்போது இதை ஒரு 2 நிமிடம் வேக வைக்கவும். கடைசியாக தேங்காய் துருவல் சிறிது சேர்த்து கிளறிவிட்டு இறக்கினால் சுவையான கோவக்காய் பொரியல் தயார். நீங்களும் இந்த ரெசிபியை வீட்டிலேயே ட்ரை பண்ணிப் பாருங்கள்!
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu