Coconut Benefits - தேங்காய் சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியத்தில் இவ்வளவு நன்மைகளா?

Coconut Benefits- தேங்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் (கோப்பு படம்)
Coconut Benefits- பரீட்சையில் பாஸானால் பிள்ளையாருக்கு உடைக்கப்படும் தேங்காய் அன்றாட சமையலிலும் தவறாமல் இடம்பிடிக்கிறது. இளநீர் மற்றும் தேங்காய்களில் இருக்கும் நன்மைகளை தெரிந்துக்கொள்ளலாம். உடல் ஆரோக்கியத்திற்கு தேங்காய்கள் எவ்வளவு நல்லது என்பது முழுமையாகப் புரிகிறது .
தேங்காய் தண்ணீர் - மனிதக் கரங்களால் மாசுபடாத நீர்
உலகின் மிகத் தூய்மையான நீரை நீங்கள் பருகிக்கொண்டு இருக்கிறீர்கள் நண்பர்களே!” என்பார்கள் இளநீர் அருந்துபவர்களிடம். வேர் வழியே உறிஞ்சி உச்சிக்குக் கொண்டுபோய், சொம்புத் தண்ணீரை கொத்துக்கொத்தாய் தேக்கிவைத்திருக்கும் இயற்கையின் அற்புதம் இளநீர்த் தேங்காய்.
வயிறு நிரம்ப வகைவகையாகச் சாப்பிடுவதைவிட, அரை மூடி தேங்காய்த் துண்டுகளைச் சாப்பிட்டுப் பாருங்கள், புத்துணர்ச்சியை அனுபவிப்பீர்கள்.
மனிதக் கரங்களால் மாசுபடாத நீர் அது. இரண்டாம் உலக யுத்தத்தின்போது, போர்க்களத்தில் காயம்பட்ட வீரர்களுக்கு அவசர கால குளுகோஸ் மருந்தாகச் செலுத்தப்பட்டது, தேங்காய் தண்ணீர்தான்.
தேங்காயின் பரவலான பயன்பாடு
இந்து கலாச்சாரத்தில் ஆன்மீக செயல்முறைகளில் மிகப் பரவலாகப் பயன்படுத்தப்படுவதில் ஒன்று, தேங்காய். கடவுளர்களுக்கு அர்ப்பணிப்பாகத் தரையில் போட்டு உடைப்பதால், அகங்காரத்தை அழித்துக்கொள்வதாக ஐதீகம். இந்து மதப் புராணங்களில் தென்னை மரம் ‘கற்பகவிருட்சம்’ எனச் சொல்லப்படுகிறது. கேட்டதைக் கொடுப்பது என்பது இதன் பொருள்.
உலகின் பல்வேறு கலாச்சாரங்களாலும் போற்றப்படுவது தேங்காய். இந்தியாவில் புதிதாய் ஒன்றை வாங்கும்போது பூஜிக்கவும்... கோவில்களிலும், திருவிழாக்களிலும், ஹோமங்களிலும் அர்ப்பணிக்கவும் அனைவரும் பயன்படுத்துவது தேங்காயைத்தான். தேங்காயை மட்டுமே உண்டு உயிர் வாழும் மனிதர்களும் உண்டு. உலகில் பல்வேறு மருத்துவ முறைகளிலும் தேங்காய் முக்கியப் பங்காற்றுகிறது.
தேங்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்
தேங்காய், மிகச் சிறந்த ரத்த சுத்திகரிப்புப் பண்டம்.
தேங்காயின் மருத்துவத்தன்மை இருதயம், கல்லீரல், சிறுநீரகக் குறைப்பாடுகளை களையக்கூடியது.
தாகம் தணிக்கவும் உடலின் சூட்டைத் தணிப்பதற்கும் இதைவிடச் சிறந்த ஒன்று இல்லை.
சமனற்ற உடல் சூட்டினால் ஏற்படும் விக்கல்களை தேங்காய் நீரைப் பருகுவதால் தணிக்க முடியும்.
முற்றாத தேங்காய்களில் உடலுக்குத் தேவையான புரோட்டீனும் குளுகோஸும் அதிகம்.
வாழைப்பழம், ஆப்பிள் பழங்களில் உள்ளதைவிட அதிக புரோட்டீன் தேங்காயில் உள்ளது.
இளம் தேங்காயின் குளிர்ந்த நீர் செரிமாணத்துக்கு மிகமிக ஏற்றது. குழந்தைகளுக்கும் இதனைப் பருகக் கொடுக்கலாம்.
வயிற்றுப்போக்கு, சிறுநீரகப் பாதையில் தொற்றுநோய் உள்ளவர்கள் இளநீர் பருகினால் குணப்படும் வாய்ப்பு உள்ளது.
தீவிர வயிற்றுப் புண் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் 100, 200 மில்லி இளநீரை தினமும் இரண்டு முறை அருந்தலாம்.
பெரிய நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்கூட அலுவலங்களில் காபி, டீ போன்றவற்றைத் தவிர்த்துவிட்டு, தற்போது இளநீர் பருகத் தொடங்கியிருப்பது ஆச்சரியப்படத்தக்க உண்மை.
வயிறு நிரம்ப வகைவகையாகச் சாப்பிடுவதைவிட, அரை மூடி தேங்காய்த் துண்டுகளைச் சாப்பிட்டுப் பாருங்கள், புத்துணர்ச்சியை அனுபவிப்பீர்கள்.
ஆரோக்கியத்துக்கு மட்டுமல்ல, அன்பர்களே... தமிழ்நாட்டில் இட்லி, தோசைக்கு சாம்பாருடன் தொட்டுக்கொள்ள தேங்காய் சட்னியும், ஆப்பத்துக்குத் தேங்காய் பாலையும் பலரும் விரும்பி சாப்பிடுகின்றனர்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu