கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான ஆத்மார்த்தமான வாழ்த்துகள் ....தமிழில்

Christmas Valthukkal in Tamil
X

Christmas Valthukkal in Tamil

Christmas Valthukkal in Tamil -ஆண்டு தோறும் டிசம்பர்மாதம் 25 ந்தேதி உலகமெங்கும் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

Christmas Valthukkal in Tamil

Christmas Valthukkal in Tamil

உலகளாவிய மத மற்றும் மதச்சார்பற்ற பண்டிகைகளில் கிறிஸ்துமஸ் பண்டிகை உள்ளது. இயேசுவின் பிறந்த நாளை கவுரவிக்கும் ஒரு அற்புத திருநாள்தான் கிறிஸ்துமஸ்.ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் 25 ம்தேதி கிறிஸ்துவத்தை நிறுவியவரின் பிறந்த நாளில் இப்பண்டிகை உலகமெங்கும் கொண்டாடப்படுகிறது. இத்திருநாளில் கிறிஸ்துவ மதத்தினை சார்ந்தவர்கள் மட்டுமல்லாமல் பல்வேறு மதங்களைச் சார்ந்தோரும் வாழ்த்துகளை பரிமாறிக்கொள்வது மரபாக உள்ளது.

கிறிஸ்துமஸ் டிசம்பர்மாதம் 25 ந்தேதி அன்று ஆண்டுதோறும் கொண்டாடப்படுவதால் அம்மாதம் துவங்கியவுடன் நட்சத்திரவிளக்குகளை தங்களுடைய வீடுகளின் வெளிப்புறத்திலோ அல்லது மேல்புறத்திலோ வண்ண , வண்ண விளக்கு பொருத்தி தொங்கவிட்டுவிடுவர். அதாவது ஈஸ்டர் பண்டிகையை வரவேற்பதற்காக அது கட்டப்படுகிறது.

கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது அதன் முந்தைய நாள்இரவு கிறிஸ்துவமதத்தினைச் சேர்ந்தவர்கள் அனைவரும் புத்தாடை உடுத்தி சர்ச்சிற்கு சென்று ஜெபம் செய்வர். இதில் அனைவரையும் சந்தித்து வாழ்த்துகளை பரிமாறிக்கொள்வர். அதுமட்டும் அல்லாமல் அன்று நடனம்,பாடல், விருந்து என உற்சாகமாக நண்பர்களுடன், உறவுகளுடனும் கொண்டாடுவர். "மெர்ரி கிறிஸ்மஸ்" என்று ஒருவரையொருவர் வாழ்த்தி பரிசுகளை பரிமாறிக்கொள்வர்.

Christmas Valthukkal in Tamil

Christmas Valthukkal in Tamil

ஒரு மாதத்திற்கு முன்பே, கிறிஸ்தவர்கள் இந்த பண்டிகைக்கு தயாராகி வது வழக்கம். அதாவது வணிக சந்தையில்இதற்கான அழகான பொருட்களை விற்பனை செய்கின்றனர். முக்கிய இடங்களில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி குடில் அமைப்பர். அதுவும் குறிப்பாக பேக்கரிகளில் இதுபோன்று அமைத்து தன் வியாபார விளம்பரத்தினை செய்கின்றனர் வழக்கமாக.

தங்கள் வீட்டின் நடுவில் கிறிஸ்துமஸ் மரத்தை அலங்கரித்து, சாக்லேட்டுகள், மிட்டாய்கள், பலூன்கள், பொம்மைகள், பறவைகள், பூக்கள், விளக்குகள் போன்ற ஏராளமான பரிசுகளால் அதை பளபளப்பாகவும் அழகாகவும் ஆக்குகிறார்கள்.

அவர்கள் தங்கள் நண்பர்கள், உறவினர்கள் மற்றும் அண்டை வீட்டாரிடையே பாடல்களைப் பாடி பரிசுகளைப் பரிமாறிக்கொள்கின்றனர்.கிறிஸ்துமஸ் அன்று இவர்கள் சார்பிலேயே பொதுவிருந்துக்கு ஏற்பாடு செய்து அதில் அனைவரையும் பங்கேற்று உணவருந்த சொல்கின்றனர். சுவையான உணவு விருந்தில் பரிமாறப்படும். விருந்துக்கு பின்னர் ஆடல், பாடல் என களை கட்டும்...வாழ்த்துகள் பரிமாற்றம் ,பரிசு பரிமாற்றங்கள் நடக்கும்.

கிறிஸ்துமஸ் பண்டிகை என்பது உலகம் முழுவதும் கொண்டாடப்படும் கலாச்சார மற்றும் வணிக நிகழ்வு ஆகும். இரண்டாயிரம் ஆண்டுகளாக இது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.டிசம்பர் 25-கிறிஸ்துமஸ் தினம் 1870 முதல் அமெரிக்காவில் ஒரு கூட்டாட்சி விடுமுறையாக இருந்து வருகிறது.மேலும் அன்றைய தினத்தில் இயேசுவின் பிறந்த நாளில் அனைவருமே தேவாலயத்துக்கு சென்று பிரார்த்தனை செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

Christmas Valthukkal in Tamil

Christmas Valthukkal in Tamil

அன்றைய தினம் பல்வேறுநிகழ்ச்சிகளும்நடத்தப்படுகிறது. அதாவது 25 ந்தேதிக்கு ஒரு வாரத்திற்கு முன்பிருந்தே களை கட்ட துவங்கிவிடும். பல இடங்களில் கிறிஸ்துமஸ் மரத்தினை தோற்றுவித்து அதனை வண்ண,வண்ணவிளங்ககுகளால் அலங்கரிப்பார்கள். அதேபோல் இயேசு கிறிஸ்து பிறந்த வரலாற்றினை தத்ரூபமாக விளக்கும் வகையில் பல இடங்களில் குடில்களை அமைத்து பல ஆயிரக்கணக்கானோர் இதனை கண்டு களிப்பர். இதுமட்டும் அல்லாமல் பெரிய வணிக மால்கள், மற்றும் நிறுவனங்களில் இந்த பண்டிகையை போற்றும் விதமாகவும் ஒரு விளம்பர நோக்கிலும் இதுபோன்று குடில்களை அமைப்பது, சாண்டோக்ளாஸ் உருவத்தில் கேக் செய்வது போன்ற நவீன யுத்திகளை பல ஆண்டுகளாக நாட்டில் கடைப்பிடித்து வருவதும் மரபாக இருந்து வருகிறது.

Christmas Valthukkal in Tamil

ஆத்மார்த்தமான வாழ்த்துகளைப் பார்ப்போமா,,,, படிங்க..

உறவுகள் அனைத்திற்கும் மனமார்ந்த கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்...நட்புக்களுக்கு என் மனமார்ந்த கிறிஸ்துமஸ் இனிய நல்வாழ்த்துகள்...

பாவங்களைப் போக்க பூமியில் பரமபிதா பிறந்தநன்னாளே கிறிஸ்துமஸ்...அனைவருக்கும் வாழ்த்துகள்

விண்ணின் தேவன் புவியில் தவழ்ந்த நன்னாள் இன்றுஜெபிப்போம்... அனைவரும் ஒன்று சேர்ந்து... உலகம் சிறக்க...

இயேசு பிரான் அன்பிற்கு சொந்தக்காரர் அவர் அவதரித்த இந்நன்னாளில் நாம் அனைவரும் அவரை போற்றுவோம்..

Christmas Valthukkal in Tamil

அன்பால் உலகை ஆள்வோம்... இயேசு பிறந்த தினத்தில்...அன்பை விதைத்து அகிம்சையை அறுவடை செய்வோம்...

மாசில்லாத மகிமையின் தேவனாக புவியில் பிறந்த இயேசு பெருமான் இன்று அவதரித்த நன்னாள்... போற்றுவோம்... வாழ்த்துகள்..

உலகில் வாழும் அனைத்து மதத்தினரும் ஒற்றுமையுடன் நல்வாழ்வு வாழ பிரார்த்திப்போம்...இறைவனிடம்இன்று...

நாம் அனைவரும் இனம், மொழி, மதம், ஆகியவற்றில் வேறுபட்டாலும் ஓர் தாயின் பிள்ளைகளாகிய நாம்

சகோதர பாசத்துடனே பழகுவோம்.. என்றென்றும்...அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்...

இறையருளால் உங்களுக்குமகிழ்ச்சியும் வெற்றியும் கிட்டட்டும்...இந்நன்னாளில்... வாழ்த்துகள்

இயேசு காட்டிய வழியில் பயணிப்போம்...இரக்கம் காட்டி மற்றவர்களுக்குஉதவுவோம்...நம்மால் இயன்றதை...

christmas valthukkal in tamil

மற்றவர்களிடம் அன்பு காட்டுங்கள்...கடவுளின் கதவுதிறக்கப்படும்... கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்...

பகைமையை விரட்டி, பண்பை வளர்த்துக்கொள்ளுங்கள்..அன்பால் அரவணைப்போம் மற்றவர்களை... வாழ்த்துகள்..

உறவுகள் அனைத்தும் ஒன்று கூடி கொண்டாடும்பண்டிகை கிறிஸ்துமஸ் .. வாழ்த்துகள் அனைவருக்கும்..

உறவுகள், நண்பர்கள் அனைவருக்கும் அட்வான்ஸ்கிறிஸ்துமஸ்... நல்வாழ்த்துகள்...

அனைவருக்கும் இதயங்கனிந்த மெர்ரி கிறிஸ்துமஸ்நல்வாழ்த்துகள்...வாழ்க... வளமுடன்...

அனைவரின் துன்பங்களை களைய துயரங்கள் தகர்த்துவிமோசனம் பிறக்க பூவுலகில் பிறந்தார் தேவனானவர்

வி்ண்ணுலக தேவன் மண்ணுலகில் பிறந்த நாள்இன்றுஅறியாமையை போக்கிடுவோம்..பகைமையைப்போக்குவோம்..

துன்பங்கள் களைந்து துயரங்கள் ஓடிடட்டும் இந்நன்னாளில்..கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்..

கிறி்ஸ்துமஸ் பண்டிகை ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் 25ந்தேதிகொண்டாடப்படுவதால் அதற்கு முன்னதாகவே இதனை சிறப்பாக கொண்டாட அனைவரும் ஏற்பாடுகள் செய்வர்.

கிறிஸ்துமஸ் மரத்தினை உருவாக்கி அதில் வண்ண வண்ண விளக்குகளை எரியவிடுவர். நட்சத்திர வடிவிலான பேப்பர் விளக்குகளை வீட்டின் வாசலில் கட்டி தொங்கவிட்டு மெர்ரி கிறிஸ்துமஸ் வருவதை அனைவருக்கும் தெரிவிப்பர். கிறிஸ்துமஸ் நாளை என்றால் அதற்கு முந்தைய இரவு விடிய விடிய தேவாலயங்களில் பிரார்த்தனை கூட்டம் நடக்கும் என்பதால் அனைவருமே கிறிஸ்துமஸ் புத்தாடை உடுத்தி குடும்பம் குடும்பமாக கலந்துகொள்வர். விடிந்தபின் விருந்துகளும் உண்டு. இந்த விருந்து முடிந்தபின் பரிசுகளை பகிர்ந்து பரிமாறிக்கொள்வதோடு வாழ்த்துகளை பரிமாறிக்கொள்வர். ஒருசிலர்இந்நன்னாளில் ஆதரவற்றோர் இல்லங்களில் உள்ள குழந்கைளுக்கு விருந்தளிப்பதும் உண்டு.. உலகம் முழுவதும் கொண்டாடப்படும் இப்பண்டிகைக்கு இந்தியாவில் மத்திய, மாநில அரசுகள் அரசு விடுமுறையை விடுவதை வழக்கமாகி கொண்டுள்ளது இதன் சிறப்பை உணர்த்தும்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story