குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று

Childrens Day Quotes Tamil

Children's Day Quotes Tamil

Children's Day Quotes Tamil-இந்தியாவின் முதல் பிரதமர் நேருவின் பிறந்த தினமான நவம்பர் 14ம் நாள், இந்தியாவில் குழந்தைகள் தினமாக கொண்டாடி வருகிறோம்.

Children's Day Quotes Tamil

குழந்தைகள் என்றால், யாருக்கு தான் பிடிக்காது. ஒரு தேசத்தின் உண்மையான பலமாகவும் சமூகத்தின் அஸ்திவாரமாகவும் குழந்தைகளை கருதினார் நேரு. குழந்தைகள் மீது அவர் கொண்டிருந்த அன்பு மற்றும் அவர்களது முன்னேற்றத்தில் அவர் காட்டிய அக்கறை ஆகியவற்றின் காரணமாக அவரது பிறந்த நாளை இந்தியாவில் குழந்தைகள் தினமாகக் கொண்டாடி வருகிறோம். நேருவை இதனாலேயே குழந்தைகள் செல்லமாக நேரு மாமா என்று அழைக்கின்றனர்.

குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்

மழலைச்சொல் கேளா தவர்

அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்

சிறுகை அளாவிய கூழ்.

என திருவள்ளுவர் குழந்தைகளை பற்றி கூறியுள்ளார்


பாரதியார் தனது பாப்பா பாட்டில்

ஓடி விளையாடு பாப்பா! - நீ

ஓய்ந்திருக்க லாகாது பாப்பா!

கூடிவிளையாடு பாப்பா! - ஒரு

குழைந்தையை வையாதே பாப்பா!

பொய்சொல்லக் கூடாது பாப்பா! - என்றும்

புறஞ்சொல்ல லாகாது பாப்பா!

பாதகஞ் செய்பவரைக் கண்டால் - நாம்

பயங்கொள்ள லாகாது பாப்பா!

மோதி மிதித்துவிடு பாப்பா! - அவர்

முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா!

என அறிவுரை கூறியுள்ளார்

குழந்தை தினத்தை முன்னிட்டு தமிழில் குழந்தைகள் தின வாழ்த்துக்கள், குறுஞ்செய்திகள் இந்த தொகுப்பில் காணலாம்

குழந்தைகள் வடிவமைக்கப்பட வேண்டிய விஷயங்கள் அல்ல, ஆனால் மக்கள் வெளிப்படுத்தப்பட வேண்டியவர்கள் - ஜெஸ் லைர்

எங்கள் குழந்தைகளுக்கு ஒரு நல்ல நாளை பெற எங்கள் இன்றைய தினத்தை தியாகம் செய்வோம். - ஏ.பி.ஜே அப்துல் கலாம்

ஒரு சொல் பேச்சிலே உள்ளம் குனியவைத்து

கள்ளமில்லா சிரிப்பினால்

உள்ளம் நெகிழ வைக்கும்

மழலை அதன் சிரிப்பினிலே

இறைவன் படைப்பில்

இயல்பு மாறாமல் தொடரும் பட்டியலில்

என்றும் இருப்பது

மழலை சிரிப்பு மட்டுமே...

மழைகாலம் ஒரு முறை

கோடைகாலம் ஒரு முறை

குளிர்காலம் முறை என

காலங்கள் மாறலாம்..

ஆனால், குழந்தையின் புன்னகை

காலத்திற்கு ஏற்ப மாறுவதில்லை..

நொடிக்கு நொடி உதிக்கும் குழந்தையின்

சிரிப்பின் முன்னால்

சூரியன் கூட தோற்றே போகும்

இனிய குழந்தைகள் தின வாழ்த்துகள்!

உலகில் எத்தனை

வர்ணங்கள் இருந்தாலும்

அத்தனையும் தோற்றுதான் போகின்றது

உந்தன் கரங்கள் முன்

இனிய குழந்தைகள் தின வாழ்த்துகள்!

பன்னிரண்டு வருடங்களுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி மலரைவிட

உன் அரை நொடிப் புன்னகை அதிசயம்!

செடியில் பூக்கும் மலரை விட

நொடியில் பூக்கும் மழலையின் புன்னகை அழகு

குழந்தைகள் புத்தகப் பையுடன் புத்தர்கள்.

கற்பித்துக் கொண்டேயிருக்கிறார்கள் ஆசிரியர்களுக்கு.

பொறுமையை, அன்பை, சகிப்புத்தன்மையை,

மன்னிப்பை………

இனிய குழந்தைகள் தின வாழ்த்துகள்!

பல நூறு மொழிகள்

இருப்பினும் உனது மழலை மொழியில்

பேரின்பம் அடைந்தேன்...

இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துகள்

ஒவ்வொரு முறையும் என் முன் நீ செய்யும் குறும்பே என் கதைக்கும் கவிதைக்கும் வித்தாக அமைகிறது

இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துகள்

உனது சலிப்பு கூட மெய்சிலிர்க்க வைக்கும்

அரும்பு குறும்பு வகை தான்!!!

இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துகள்

கோயில் எதற்கு தெய்வங்கள் எதற்கு உனது புன்னகை போதும்! அன்பு குழந்தைகளுக்கு குழந்தைகள் தின நல்வாழ்த்துகள்!

குழந்தையும் தெய்வமும் ஒன்று என்பர். குழந்தையின் சிரிப்பில் இறைவனை காண்போம். இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துகள்!

இந்த உலகில் மிகவும் விலைமதிப்பற்ற விஷயம் ஒரு குழந்தையின் முகத்தில் வரும் புன்னகை. உலகிலுள்ள ஒவ்வொரு குழந்தைகளுக்கும் குழந்தைகள் தின வாழ்த்துகள்!

அனைவருடைய வாழ்க்கையின் இனிமையான காலம் அவர்களின் குழந்தைப்பருவமாகும். உலகின் அனைத்து குழந்தைகளுக்கும் மிகவும் மகிழ்ச்சியான குழந்தைகள் தினம்.

அவர்களின் புன்னகையின் அப்பாவித்தனமும் அவர்களின் இதயங்களின் தூய்மையும் என்றென்றும் மங்காமல் இருக்கட்டும். உலகின் ஒவ்வொரு குழந்தைக்கும் மகிழ்ச்சியான குழந்தைகள் தின வாழ்த்துகள்!

பணத்தால் மகிழ்ச்சியை வாங்க முடிந்தால், எல்லோரும் தங்களுடைய எல்லா பணத்தையும் கொண்டு தங்கள் குழந்தைப்பருவத்திற்கு திரும்பிச் செல்வார்கள். ஒவ்வொரு குழந்தையும் போலவே குழந்தைப் பருவமும் அருமை. குழந்தைகள் தின நல்வாழ்த்துகள்!

என்ன நினைப்பதை விட எப்படி சிந்திக்க வேண்டும் என்பதை குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுங்கள். விதைகளை நீங்கள் பொருத்தப் போகிற விதம் அது அந்த வழியில் பூக்கும்.

ஒவ்வொரு குழந்தையும் ஒரு வித்தியாசமான மலர், அவை அவற்றின் வழியில் அழகாக இருக்கின்றன. குழந்தைகள் தின நல்வாழ்த்துகள்!

உங்களை எங்கள் குழந்தையாக வைத்திருப்பதற்கு நாங்கள் எப்போதும் பெருமைப்படுகிறோம். உங்களுடைய ஒரு சிறிய புன்னகையுடன் எங்கள் எல்லா வலிகளையும் நீக்கிவிடலாம். குழந்தைகள் தின நல்வாழ்த்துகள்.

இந்த சிறப்பு நாளில், நாம் அனைவரும் நம் குழந்தைகளின் அப்பாவித்தனத்தையும் தூய்மையையும் கொண்டாடுவோம். நம்மால் முடிந்த எல்லா வழிகளிலும் அவர்கள் விலைமதிப்பற்றவர்களாக உணரட்டும்.

நாங்கள், ஆசிரியர்கள் உங்களிடமிருந்து கற்றுக்கொள்ள பல விஷயங்கள் உள்ளன, குறிப்பாக எளிய விஷயங்களில் எவ்வாறு மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story