சே குவாராவின் புரட்சிகர பொன்மொழிகள்..
Che Quotes in Tamil
Che Quotes in Tamil
அர்ஜென்டீனாவை சேர்ந்த மாபெரும் புரட்சியாளரும், மருத்துவரும், பல புரட்சிப் போர்களில் பங்குபெற்ற ஒரு போராளி தான் சே குவேரா. மார்க்சியவாதியான இவர் உலகெங்கிலும் மக்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகளுக்கும், வர்க்கச் சுரண்டல்களுக்கும் எதிராகப் போராடி அதில் வெற்றியும் கண்டார்.
ஃபிடல் காஸ்ட்ரோவுடன் இணைந்து கியூபாவின் விடுதலைக்காக போராடினார். மேலும் கியூபாவின் மத்திய வங்கியிலும் 14 ஆண்டு காலம் பணியாற்றியுள்ளார். கொரில்லாப் போர் முறையில் வல்லவராக இருந்த சே குவேரா கொரில்லாப் போர்முறை குறித்த புத்தங்களையும் எழுதியுள்ளார்.
வெறும் 39 வருடங்கள் மட்டுமே இந்த பூமியில் வாழ்நது சரித்திரத்தின் பொன்னேடுகளில் தன்னை பதித்துக்கொண்ட சாமான்யன். ஆம், தன்னை சாமான்யன் என அழைப்பதைத்தான் சே விரும்புவார்.
பொலிவியா காட்டில் வாலேகிராண்டே பகுதியில் சே குவேராவின் உடலுக்குள் பாய்ந்த எம்1 கார்பைன் ரக துப்பாக்கியின் ஒன்பது குண்டுகளில் முதல் ஐந்து கால்களிலும், இரண்டு கைகளிலும் ஒன்று தோளிலும் பாய்ந்தது. ஆனால் கடைசியாக மார்பில் பாய்ந்த குண்டுதான் அவரது உயிரை பறித்தது. அந்த கடைசி குண்டுக்குத் தெரியாது தான் ஒரு உடலை விதையாக மாற்றப்போகிறோம் என்பது.
ஃபிடல் காஸ்ட்ரோ சே குவாரா பற்றி கூறுகையில், ''அவர் நமக்கு மட்டுமல்ல... இந்த உலகத்துக்கே முழுமையான மனிதன் எப்படி இருப்பான் என அடையாளமாக வாழ்ந்து காட்டியிருக்கிறார். வருங்காலத்தில் அவர் விடுதலை உணர்வின் அடையாளமாக உலகம் முழுக்க கொண்டாடப்படுவார்'' என்று சொன்னார்.
சே குவாராவின் புரட்சிகர பொன்மொழிகளில் சில உங்களுக்காக:
ஒருவனின் காலடியில் வாழ்வதைவிட, எழுந்து நின்று உயிரை விடுவது எவ்வளவோ மேல்.
போருக்குச் செல்லும் போது, கையில் ஆயுதம் கொண்டு செல்ல வேண்டும் என்பது அவசியம் இல்லை. நீ சுத்த வீரன் என்றால் உனக்கான ஆயுதத்தை நீ செல்லும் போர்க்களத்திலேயே உன்னால் சம்பாதித்துக்கொள்ள முடியும்.
நான் இறந்த பிறகு என் துப்பாக்கியைத் தோழர்கள் எடுத்துக்கொள்வார்கள். அப்போதும் தோட்டாக்கள் சீறிப் பாயும்
வாழ்க்கையில் எதிரிகளே இல்லாமல் இருப்பவன் வாழ்க்கையை முழுவதுமாக வாழவில்லை என்றுதான் அர்த்தம்
இந்த உலகத்தில் அநீதி தலையெடுக்கிற போதெல்லாம் கோபமும், வெறுப்பும் நீ குமுறியெழுவாயானால் அதுவே விடியலின் அடையாளம்
புரட்சி என்பது பழுத்தவுடன் விழும் ஆப்பிள் பழம் அல்ல, நீங்கள்தான் அதை விழ வைக்க வேண்டும்
எங்கெல்லாம் அடக்கப்பட்டவர்களின் இதயத் துடிப்புகள் கேட்கிறதோ அங்கெல்லாம் என் கால்கள் பயணிக்கும்
ஒரு மனிதனை தூக்கிலிடுவதற்கு, அவன் குற்றம் செய்ததற்கான ஆதாரம் தேவையில்லை. அவனை தூக்கிலிட வேண்டியது அவசியம் என்பதற்கான ஆதாரம் மட்டுமே தேவை.
நமது இளைஞர்கள் எப்போதும் சுதந்திரமாக இருக்க வேண்டும், இந்த உலகம் முழுவதும் என்ன நடக்கிறது என்பதைப் பற்றி விவாதித்து கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ள வேண்டும்.
நீ என்னைக் கொல்ல வந்திருக்கிறாய் என்று எனக்குத் தெரியும். சுடு கோழையே, நீ ஒரு மனிதனை மட்டும் கொல்லப் போகிறாய்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu