உதடு வறட்சி ஏற்படுவதற்கான காரணமும்... அதற்கான தீர்வும்

உதடு வறட்சி ஏற்படுவதற்கான காரணமும்... அதற்கான தீர்வும்
X

பைல் படம்.

Dry Lips Remedy - வறட்சியால் உதட்டில் வெடிப்பு ஏற்படுவதை தடுக்கும் வழிமுறைகளை பார்க்கலாம்.

Dry Lips Remedy - தினமும் இரவில் படுக்கும் முன் உதடுகளில் வெண்ணெயை தடவி வந்தால் உதடுகளும் தானாக வறண்டு போகாது, அல்ல‍து காய்ந்து போகாது. நமது உதடுகளில் வறட்சி ஏற்படுவதற்கு, அல்ல‍து அடிக்கடி காய்ந்து போவதற்கு நமது உடலின் வெப்ப‍நிலை உயர்ந்து விட்ட‍தன் அறிகுறியே இது.

ஆகவே உதட்டை நாவினால் வருடி ஈரமாக்குவதை விட உஷ்ணத்தைக் குறைக்கும், மோரை அடிக்கடி நாம் பருகி வர வேண்டும். வெண்ணெய் சிறிது எடுத்து அடிக்கடி சாப்பிட்டு வர வேண்டும். ஒவ்வொரு நாள் இரவில் வெண்ணெயைக் கொஞ்சம் உதட்டில் தடவிக்கொண்டு படுக்கைக்கு செல்ல‍ வேண்டும். இவற்றின் காரணமாக நமது உடலில் ஏற்பட்டுள்ள‍ உஷ்ணம் குறையும், உதடுகளும் தானாகவே வறண்டு போகாது, அல்ல‍து காய்ந்து போகாது.

உதடு சொரசொரப்பாக வறட்சியாக இருந்தால், தேனுடன் சர்க்கரையை சேர்த்து லேசாக தேய்த்தால் உதடு மிருதுவாகி விடும். உதடு தவிர்த்து, முகத்திற்கு தயிருடன் கடலை மாவை சேர்த்து முகத்தில் தடவி வர வெயிலினால் ஏற்படும் கருமை நீங்குவதுடன் எண்ணெய் பிசுபிசுப்பும் நீங்கும். வெறும் புளித்த தயிரை வீணாக்காமல் மஞ்சள் சேர்த்து தடவினால் முகத்தில் ஏற்படும் எரிச்சல் நீங்கும். அழுக்குகளும் நீங்கும்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
ai in future agriculture