வாழை இலையில ரசம் செஞ்சு இருக்கீங்களா...... அட அட ஊரே மணக்கும்

பைல் படம்.
தேவையான பொருட்கள்:
சிறிய பிஞ்சி வாழை இலை - 1
தக்காளி - 1
காய்ந்த மிளகாய் - 3
சீரகம் - ஒரு தேக்கரண்டி
மிளகு - ஒரு தேக்கரண்டி
புளி - எலுமிச்சை அளவு
பூண்டு - 8 பல்
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
உப்பு, கொத்தமல்லி, கறிவேப்பிலை - தேவையான அளவு
எண்ணெய் - 1 தேக்கரண்டி
கடுகு, பெருங்காயம், வெந்தயம் - தாளிக்க
வாழை இலையை நன்றாக கழுவிய பின்னர் துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். தக்காளியை துண்டுகளாக வெட்டிகெள்ளவும். கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். இளம் வாழை இலை, பூண்டு, மிளகு, சீரகம், தக்காளியை விழுதாக அரைத்து கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், பெருங்காயம், வெந்தயம் சேர்த்து தாளித்த பின்னர் அரைத்த மசாலாவை சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும். மசாலா நன்கு வதங்கியதும் அதில் புளிக்கரைசல், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து லேசாக கொதிக்க ஆரம்பித்ததும் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும். சூடான சுவையான ஆரோக்கியமான வாழை இலை ரசம் ரெடி. இதனை சாதத்துடன் பிசைந்தும் சாப்பிடலாம் அல்லது சூப் போன்றும் குடிக்கலாம்.காய்ச்சல், சளி உள்ளவர்களுக்கு இது ஒரு நல்ல மருந்தாகும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu