EPF Withdrawal: பணி ஓய்வுக்கு முன்னரே பிஎஃப் (PF) தொகையை எடுக்க முடியுமா? எவ்வளவு எடுக்கலாம்?

EPF Withdrawal: பணி ஓய்வுக்கு முன்னரே பிஎஃப் (PF) தொகையை எடுக்க முடியுமா? எவ்வளவு எடுக்கலாம்?
X

பைல் படம்

EPF Withdrawal: பணி ஓய்வுக்கு முன்னரே பிஎஃப் (PF) தொகையை எடுக்க முடியுமா? எவ்வளவு எடுக்கலாம்? தெரிந்துகொள்வோம் வாங்க..

EPF Withdrawal: வருங்கால வைப்பு நிதி என்பது பணியாளர்கள் வாங்கும் மாதச்சம்பளத்தில் 12 சதவீதம் பிடித்தம் செய்யப்பட்டு பணியாற்றும் நிறுவனம். அதற்கு சமமான தொகையையும் சேர்த்து வருங்கல வைப்பு நிதி ஆணையத்தில் முதலீடு செய்யும். இதுவே வருங்கால வைப்பு நிதி. இதில் 8.33 சதவீதம் பென்சன் திட்டத்திற்கும், 3.7 சதவீதம் வருங்கால வைப்பு நிதியகவும், 0.50 சதவீதம் காப்பீட்டிற்கும் செலுத்தப்படும்.

சம்பளத்தில் 12 சதவீதம் வைப்பு நிதி என்றாலும் , எவ்வளவு சம்பளம் வாங்கினாலும் குறைந்தது நிறுவனம் 1800 ருபாய் செலுத்தவேண்டும் என்ற விதி இருப்பதால் இதையே நிறுவனங்கள் பின்பற்றுகின்றன. நிறந்த வைப்பு நிதி எண் UAN Universal Account Number கையாளப் படுகிறது.பி எஃப் இணையதளத்தில் நமது தொகையை அறியமுடியும். பணியில் சேர்ந்து 5 ஆண்டுக்குள் பி எஃப் தொகையை எடுக்கவேண்டும் என்றால் 10 % தொகை பிடித்தம் செய்யப்படும். 5 ஆண்டுகளுக்கு மேல் என்றால் பிடித்தம் கிடையாது. இரண்டு மாதத்துக்கு மேல் வேலை இல்லை என்றால் பி எஃப் தொகை எடுத்துக்கொள்ளும் வசதி உண்டு.

குழந்தைகள் படிப்பு , திருமணம், மருத்துவம், வீடுகட்டுதல் போன்றவற்றிர்க்கு முன் பணம் எடுத்துக்கொள்ளலாம். வரும் 2015 மார்ச்சு மாதம் முதல் பி எஃப் தொகையை ஆன்லைன் மூலம் 3 மணி நேர பரிசீலனையில் பி எஃப் வங்கிக்கணக்கில் பெறும் திட்டம் வர உள்ளது. தற்போது ஆதார் எண் உள்ளவர்கள் 3 நாட்களில் பெறமுடியும். தற்போது பி எஃப் ஆணையத்தில் 8.5 லட்சம் கோடி ரூபாய் இருக்கிறது. இவை அரசாங்க பத்திரத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. 2015 - 2016 நிதி ஆண்டில் 5000 கோடி ரூபாய் பங்குச்சந்தையில் முத்லீடு செய்யப் போவதாக ஆணையம் அறிவித்து உள்ளது. நடப்பு நிதி ஆண்டில் பி எஃப் தொகைக்கு 8.7 சதவீதம் வட்டி நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. மாதம் 12 சதவீதத்திற்கும் மேல் பிடித்தம் செய்ய வசதி உண்டு.

நீங்கள் உங்கள் வேலையை சில காரணங்களால் பாதியிலேயே விட்டுவிட நேரிட்டால், அத்தகைய சூழ்நிலையில் உங்கள் EPF கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட PF தொகையை திரும்பப் பெறலாம்.

ஊழியர் இன்னும் ஓய்வு பெறவில்லை என்றால் அவசர காலங்களில் மட்டுமே பிஎஃப் பணத்தை எடுக்க முடியும். இது தவிர, பின்வரும் சூழ்நிலைகளில் EPFO இல் டெபாசிட் செய்யப்பட்ட பணத்தையும் நீங்கள் திரும்பப் பெறலாம் (Withdraw).

வேலையை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டால்:

நீங்கள் உங்கள் வேலையை சில காரணங்களால் பாதியிலேயே விட்டுவிட நேரிட்டால், அத்தகைய சூழ்நிலையில் உங்கள் EPF கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட PF தொகையை திரும்பப் பெற்று நல்ல இடத்தில் முதலீடு செய்யலாம்.

அதில் ஊழியர்கள் எந்த பிரச்சனையும் சந்திக்க வேண்டிய நிலை ஏற்படாது. இப்போது கேள்வி என்னவென்றால் எவ்வளவு பணம் எடுக்க முடியும்? உங்களுக்கு ஒரு மாதத்திற்கு வேலை கிடைக்காவிட்டால், வட்டிப் பணத்தில் 75 % வரை எடுக்கலாம். மேலும், இரண்டாவது மாதம் முடிந்த பிறகு, 100% பணத்தை எடுக்கலாம்.

எந்த காரணங்களுக்காக நீங்கள் PF பணத்தை எடுக்கலாம்:

  • ஊழியர்கள் தங்கள் குழந்தைகளின் கல்விக்காக
  • அவர்கள் எளிதாக PF பணத்தை எடுத்து குழந்தைகளின் கல்விக்கு தேவையான தொகையை withdrawal செய்யலாம்.
  • உங்கள் குழந்தைகளின் திருமணத்திற்கு PF-லிருந்து பணத்தை எடுத்து செலவிடலாம்.
  • வீடு கட்டுவதற்கு/ வீட்டு கடன் /வீடு நிலம் வாங்க.
  • தொழிற்சலை மூடல்
  • வேலையிழப்பு
  • நோய்வாய்ப்படுதல்
  • இயற்கை சீற்றம் பாதிப்பு

என பட்டியலில் உள்ளவற்றைக்கு உரிய படிவத்தின் மூலம் PF பணத்தை பெறலாம்.


மேலும் விவரங்களுக்கு லிங்க் https://epfindia.gov.in/site_en/WhichClaimForm.php

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!