Calcium Foods in Tamil: எலும்பு வலுவாக இருக்க உதவும் கால்சியம் எந்த உணவில் இருக்கு தெரியுமா?

Calcium Foods in Tamil: எலும்பு வலுவாக இருக்க உதவும் கால்சியம் எந்த உணவில் இருக்கு தெரியுமா?
X

கால்சியம் மிகுந்த உணவுகள் 

கால்சியத்தை உடலால் உற்பத்தி செய்ய முடியாது. எனவே நமது உணவு பழக்கத்தில் கால்சியம் மிகுந்த உணவுகளை உட்கொள்வது நல்லது.

உடலின் ஒவ்வொரு செயலுக்கும் கால்சியம் தேவைப்படுகிறது. நமது உடலின் இயக்க செயல்பாடுகளுக்கு நம்முடைய எலும்புகள் ஆரோக்கியமாக இருப்பது அவசியம். எலும்புகள் வலுவாக இருக்க நம் உணவில் கால்சியம் சத்து நிறைந்த பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டும்..

நமது உடலின் திடமான உறுப்பான எலும்பு உடலை தாங்கி இருக்கிறது. சிவப்பு மற்றும் வெள்ளை இரத்த அணுக்களை உருவாக்குகிறது. உடலுக்கு தேவையான தாதுக்களை சேமிக்கிறது மற்றும் உடல் உள்ளுறுப்புகளை பாதுகாக்கிறது. கால்சியம் காரணமாக நமது எலும்புகள் வலுவாகவும் நெகிழ்வாகவும் இருக்கும். வயதாகும்போது நமது உடல் கால்சியத்தை குறைவாக உற்பத்தி செய்கிறது, இதனால் நமது எலும்புகள் மோசமடைகின்றன.

கால்சியம் சத்து எலும்பு மற்றும் பற்களுக்குத் தேவையான ஆரோக்கியத்தையும் வலுவையும் கொடுக்கிறது. கால்சியம் சத்து குறைப்பாட்டால் உடலின் ஒட்டுமொத்த நிலைத்தன்மை பாதிக்கப்படும் அபாயம் இருக்கிறது. நமது உடலில் கால்சியம் சத்து குறைந்து விட்டால் முதுகு வலி, மூட்டு வலி, எலும்பு அரிப்பு, நகம், பற்கள் என பாதிப்புகள் உருவாகும். அஜீரணக்கோளாறு, வாயுத்தொல்லை ஆகிய பிரச்சனைகள் இருப்பவர்களுக்கும் கால்சியம் குறைபாடு இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளன.


முன்பெல்லாம் கிராமப்புறத்தில் வாழ்ந்தவர்களில் பலர் வெற்றிலை பாக்கு போட்டுக்கொண்டே வயல்வெளிகளில் வேலை பார்ப்பார்கள். இதனால் இவர்களுக்கெல்லாம் அக்காலத்தில் இவர்கள் போடும் வெற்றிலையால் கால்சியம் சத்து அவர்களுடைய உடலில் கூடியது. காலமும் மாறியது. வெற்றிலை பாக்கு போடும் பழக்கம் இக்கால தலைமுறைகளில் அநாகரிகமாக கருதப்பட்டு புறக்கணிக்கப்பட்டுள்ளதால் கால்சியம் சத்து குறைவால் பல நோய்களை எதிர்கொள்கிறது இக்கால தலைமுறை.

கால்சியம் சத்து தசையை இயக்குவதற்கும், நரம்பு மண்டலம் செய்தியை மூளைக்கு எடுத்துச் செல்வதற்கும் அவசியம். குறிப்பாக ஆண்களை காட்டிலும், பெண்கள்தான் கால்சியம் சத்தால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

கால்சியம் நிறைந்த உணவுகள்


கீரை வகைகள்:

கீரை வகைகளில் கால்சியம் சத்து உண்டு. பசலைக்கீரையில் சற்றுக் கூடுதலாக இருக்கும். தினமும் கீரைச் சாப்பிடுவது மிகவும் நல்லது. வாரத்திற்கு இரு முறையாவது புதினா, கொத்துமல்லி, கறிவேப்பிலை துவையல் சாப்பிட வேண்டும். மணத்தக்காளி கீரையைக் கூட்டாகவோ, துவையலாகவோ செய்து சாப்பிட்டால் கால்சியம் சத்து அதிகமாக கிடைக்கும்.


பால்:

பாலின் மூலம் ஊட்டச்சத்துகளில் மிகவும் முக்கியமான கால்சியம் பெறப்படுகிறது. பால், தயிர், மோர், வெண்ணெய் பாலாடைக்கட்டி என்று அனைத்து வகையான பால் பொருட்களிலும் கால்சியம் சத்து நிரம்பியுள்ளது.

சோயா பால்:

பால் பொருட்கள் சாப்பிட முடியவில்லை என்று வருத்தப்படுபவர்களுக்கு, சோயா பால் நல்ல மாற்றாக உள்ளது. பசும்பாலில் இருக்கும் அதே அளவுள்ள கால்சியம், சோயா பாலிலும் இருக்கறது.

பாதாம் மற்றும் பூசணி விதைகள்:

வைட்டமின்-இ மற்றும் கனிமச்சத்துக்களில் நிறைந்துள்ள பாதாமில், நீங்கள் ஓரளவுக்கு கால்சியம் பெறலாம். 30 கிராம் பாதாமில் 75 மி.கி கால்சியம் உள்ளது. தினமும் ஒரு கைப்பிடி அளவு பாதாம் சாப்பிட்டு வரலாம்.

பூசணி விதைகள், எள்ளு, கசகசா உள்ளிட்ட பல்வேறு விதைகளில் கால்சியம் சத்து அதிகமாக உள்ளது. ஒரு ஸ்பூன் கசகசாவில் 127 மி.கி கால்சியம் உள்ளது


பருப்பு வகைகள்:

பீன்ஸ், கடலைப் பருப்பு, பாசி பருப்பு, மசூர் தால் உள்ளிட்ட பல்வேறு பருப்பு வகைகளில் அதிக அளவு கால்சியம் உள்ளது. தினமும் ஏதும் ஒரு வகை பருப்பை சேர்ப்பது மூலம், லாக்டோஸ் இன்டாலரன்ஸ் உள்ளவர்கள் தேவையான கால்சியம் பெறலாம். குறிப்பாக, உளுந்தில் எலும்புகளை வலுவாக்கும் சத்து இருக்கிறது.மேலும் இதில், இரும்பு, மக்னீசியம், மாங்கனிசு மற்றும் பொட்டாசியம், நார்ச்சத்துக்களும் நிறைந்துள்ளது.

Tags

Next Story
ai in future agriculture