Butter helps in weight loss- உடல் எடையை குறைக்க பட்டர் உதவும்; எப்படி என்று தெரிஞ்சுக்கலாமா?

Butter helps in weight loss- வெண்ணெய் சாப்பிடுவதால், உடல் எடை குறைய வாய்ப்பு (கோப்பு படம்)
Butter helps in weight loss- உடல் எடையைக் குறைக்க, நம்மில் பலர் நமக்கு பிடித்த விஷயங்களை கைவிட்டிருப்போம். ஏனென்றால், அவை நமது உடல் எடையை குறைக்க தடையாக இருக்கும் என நினைப்போம். உடல் எடையை குறைப்பதற்காக ஆரோக்கியமற்ற விஷயங்களை கைவிடுவது தவறல்ல. ஆனால், நாம் உடலுக்கு கெடுதி என நினைத்து ஒதுக்கும் பல உணவுகள் உடல் எடையை குறைக்க உதவுகிறது.
நம்மில் பலர் உடல் எடையை குறைக்க வெண்ணை சாப்பிடுவதை கைவிட்டிருப்போம். ஆனால், அது ஆரோக்கியத்திற்கும், உடல் எடையை குறைக்கவும் நல்லது. இது வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து, கெட்ட கொழுப்புகளை குறைக்க உதவுகிறது. இதன் நன்மைகள் குறித்து தெரிந்துக்கொள்வோம்.
உடல் எடையை குறைக்கும் வெண்ணெய்
வீட்டில் வெள்ளை வெண்ணெய் தயாரிக்க, க்ரீமை அரைக்க வேண்டும். இது பாலில் இருந்து எடுக்கப்படும் பாலாடை.
வீட்டில் தயாரிக்கப்பட்ட வெள்ளை வெண்ணெய் பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது.
சந்தையில் கிடைக்கும் மஞ்சள் நிறத்துடன் (சால்ட் பட்டர்) ஒப்பிடும்போது இது மிகவும் நன்மை பயக்கும்.
வெள்ளை வெண்ணெயில் லெசித்தின் காணப்படுகிறது.
இது ஒரு வகையான ஆரோக்கியமான கொழுப்பு, இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது.
எடை இழப்புக்கு விரைவான வளர்சிதை மாற்றம் மிகவும் முக்கியமானது.
உடல் எடையை குறைக்க புரதத்தைப் போலவே ஆரோக்கியமான கொழுப்பும் முக்கியமானது.
வெள்ளை வெண்ணெயில் கால்சியம் மற்றும் வைட்டமின் ஏ நிறைந்துள்ளது. பொட்டாசியம், நார்ச்சத்து, வைட்டமின் டி, பாஸ்பரஸ் மற்றும் புரதமும் இதில் உள்ளது.
இதில் ஆரோக்கியமான கொழுப்புகள் இருப்பதால், எடை இழப்புக்கு இது மிகவும் சிறப்பு வாய்ந்தது. இது கொழுப்பை எளிமையாக எரிக்கும்.
வெள்ளை வெண்ணெயின் மற்ற நன்மைகள்
இதில் ஆரோக்கியமான கொழுப்புகள் உள்ளன. இது சருமத்திற்கு நெகிழ்வுத்தன்மையை தருகிறது. இது தவிர, சருமத்திற்கு இயற்கையான பளபளப்பைக் கொடுப்பதில் பயனுள்ளதாக இருக்கும்.
வெள்ளை வெண்ணெய் மூட்டுகள் மற்றும் எலும்புகளுக்கு மிகவும் நல்லது என்று கருதப்படுகிறது. முதுமையால் ஏற்படும் மூட்டு வலி குறைய இதை சாப்பிட வேண்டும். இது மூட்டுகளுக்கு மசகு எண்ணெய் போல செயல்படுகிறது.
அராச்சிடோனிக் அமிலம் வெள்ளை வெண்ணெயில் காணப்படுகிறது. இது மூளையின் செயல்பாட்டிற்கும் நினைவாற்றலுக்கும் நல்லது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu