புத்தரின் பொன்மொழிகள் வாழ்க்கை என்றால் சந்தோஷங்களும் துன்பங்களும் இருக்கத்தான் செய்யும்

புத்தரின் பொன்மொழிகள்   வாழ்க்கை என்றால் சந்தோஷங்களும்  துன்பங்களும் இருக்கத்தான் செய்யும்
X
buddha quotes in tamil

buddha quotes in tamil



வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும் வாசல் தோறும் ....என்ற சினிமா பாடலை அனைவருக்கும் நினைவிருக்கலாம். அதுபோல் வாழ்க்கை என்பது சாதாரணமானது அல்ல. ஒரு மனிதன் பிறப்பில் இருந்து இறப்பது வரை பல்வேறுபட்ட அனுபவங்களை கஷ்டங்களால் உணர்கிறான்... அந்த கஷ்டங்கள் அவனது வாழ்வு காலத்தில் ஏதாவது ஒரு சூழலில் கை கொடுக்கிறது. அவனுக்கு இல்லாவிட்டாலும் மற்றவர்களுக்காவது பயனளிக்கிறது.

ஆசையே துன்பத்துக்கு காரணம். இந்த உலகில் பலர் தேவைக்கு மேல் ஆசைப்பட்டு கடைசியில் அவதியடைந்து வருகின்றனர். வருமானத்துக்கு தகுந்த செலவுகளை செய்ய வேண்டுமே தவிர ரத்தின கம்பளம் விரித்து அழைக்கும் நிறுவனங்களில் கடனை வாங்கிவிட்டு கட்ட முடியாமல் விழி பிதுங்கி நிற்கின்றனர் பலர்.

யார் தன் சக்திக்கு மீறிய வாழ்க்கையை அமைத்துக்கொள்ள விரும்புகிறானோ அவனே வாழ்க்கையில் அனைத்து கஷ்டங்களையும் அனுபவித்தே உணர்கிறான். அதேநேரத்தில் வருமானத்துக்குள் செலவு செய்பவர்கள் அனைவருமே மன நிம்மதியுடன் வாழ்கின்றனர். இதிலிருந்தே தெரியவில்லை. ஆசையே துன்பத்துக்கு காரணம். எவனொருவன் எளிமையான வாழ்க்கையை வாழ நினைக்கிறாரோ அவருக்கு உடல் அளவிலும் மனதளவி்லும் எந்த பிரச்னைகளும் ஏற்படுவதில்லை என்பதற்கு பலரின் வாழ்க்கையே சாட்சி...

சரிங்க... வாழ்க்கையில் எப்படி இருக்க வேண்டும் என புத்தர் ஒரு சில போதனைகளை சொல்லியுள்ளார்... அதைப் படிக்கலாமா?

buddha quotes in tamil


buddha quotes in tamil

அமைதியாய் இருப்பவன் முட்டாள் என்று எண்ணிவிடாதே.பேசுபவனை விட கேட்பவனே புத்திசாலி.

மூடனை பிறர் அழிக்க வேண்டியதில்லை. அவன் தன்னைத் தானே அழித்துக்கொள்கிறான்.

ஒன்றும் தெரியாது என்று நினைப்பவனுக்கு கொஞ்சமாவது அறிவு உண்டு.ஆனால், எல்லாம் தெரியும் என்று நினைப்பவன் முழு மூடன்.

ஒருவன் என்னை இகழ்ந்து பேசினான். ஒருவன் என்னை அடித்தான்.என்று அடுத்தவனைப்பற்றியே ஒருவன் நினைத்துக் கொண்டிருந்தால் அவனுடைய கோபம் ஒருபோதும் தணியாது.

செல்வத்தின் இயல்பு வளர்வதும் தேய்வதும். செல்வம் என்றைக்கும் ஒரு இடத்தில் நிலைத்திருப்பது கிடையாது.

போரில் ஆயிரம் பேரை வெல்வதை காட்டிலும் சிறந்ததுஉன் மனதை நீ வெற்றி கொள்வது.

நம் எண்ணங்கள் யாவும், பிறருக்கு எந்த வகையிலும் துன்பம் தருவதாக இருக்கக்கூடாது.பிறருக்கு நன்மையையும் ஆறுதலையும் தரக்கூடியதாக இருக்கவேண்டும்.

buddha quotes in tamil


buddha quotes in tamil

நமது உதடுகளை அரண்மனை வாயிற் கதவுகளைப் போல பாதுகாக்க வேண்டும்.நமது வாயிலிருந்து வெளிப்படும் ஒவ்வொரு சொல்லும் சாந்தமானதாகவும் இதமாகவும் இருக்க வேண்டும்.

நீ செய்த செயல்கள் ஒவ்வொன்றும் உன் நிழல் போல உன்னை தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும். அது நல்லதா இருந்தாலும் சரி கெட்டதாக இருந்தாலும் சரி.

வாழ்க்கை என்றாலே துன்பங்களும் துயரங்களும்இருக்கத் தான் செய்யும். அது தான் நியதி என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

அமைதியை விட உயர்வான சந்தோஷம் இந்த பூமியில் வேறு ஒன்றும் இல்லை.

வாழ்க்கையின் நோக்கம் பிறருக்கு உதவி செய்வதே ஆகும்.

நிம்மதிக்கான இரண்டு வழிகள். விட்டு கொடுங்கள்.இல்லை விட்டு விடுங்கள்.

உண்மைக்கு மகத்தான சக்தி உண்டு. அதை எவராலும் மாற்றிடவோ மறைத்திடவோ இயலாது.

உண்மையை அழிக்கும் சக்தி எவருக்கும் இல்லை.

buddha quotes in tamil


buddha quotes in tamil

இந்த உலகில் எப்போதும் நிலைத்திருக்கும் சக்தி உண்மைக்கு தான் உண்டு.

தீமையை நன்மையால் வெல்லுங்கள்.பொய்யினை உண்மையால் வெல்லுங்கள்.

உன் வாழ்வில் உண்மையும் அன்பும் நிறைந்திருந்தால்,எப்போதும் உன் வாழ்வு மகிழ்ச்சியாகவே இருக்கும்.

ஆகாயத்திற்குச் சென்றாலும், நடுக் கடலுக்குச் சென்றாலும்,மலையின் இடுக்கில் மறைந்துகொண்டாலும், எங்கு சென்று ஒளிந்துகொண்டாலும், தீய செயலைச் செய்தவர் அதன் விளைவுக்குத் தப்பவே முடியாது.

உங்கள் வாழ்க்கை எந்த திசையில் செல்ல வேண்டும் என்பதை சரியாக நீங்கள் தீர்மானித்துவிட்டால், அந்த வானத்தையும் நீங்கள் எட்டலாம்.

உங்களை யாராலும் தடுக்க முடியாது. ஆகையால், உங்கள் குறிக்கோள் என்ன என்பதை உணருங்கள்!

நம் வாழ்க்கையில் எதுவுமே நிலையானது இல்லை என்பதை உணர ஆரம்பித்து விட்டால்.நமக்குள் இருக்கும் ஆணவம் காணாமல் போய் விடும்.

உங்கள் வாழ்நாளில் எதை செய்தாலும் திருப்தியுடன் செய்யுங்கள்.அதுவே உங்கள் வாழ்வை அர்த்தம் உள்ளதாக மாற்றும்.

இந்த நொடியை சந்தோசமாக வாழுங்கள். நிகழ்காலத்தை சந்தோசமாக வாழ்வது தான் வாழ்க்கையை இனிமையாக மாற்றும்.

உயிர் நண்பன் என்பவன் தக்க நேரத்தில் சரியான உதவிகளை செய்பவன் தான். அந்த நட்பை விட்டு விடக் கூடாது.

ஒரு முட்டாள் நண்பனுடன் சேர்ந்து வாழ்வதை விட நீ தனியாக வாழ்வதே சிறந்தது.

அதிகமாக பேசுவதால் மட்டும் ஒருவன் அறிஞனாகிவிட மாட்டான்

Tags

Next Story
மல்லசமுத்திரத்தில் கொப்பரை வர்த்தகம்: விவசாயிகள் சந்தித்த நன்மைகள்