நினைத்து வாட ஒன்று மறந்து வாழ ஒன்று! இரண்டு மனம் கேட்பவரா நீங்கள்?

Breakup Quotes in Tamil
Breakup Quotes in Tamil-பிரிவு! இந்தச் சொல்தான் இலக்கியங்களில் என்னமாய்ப் புகுந்து விளையாடுகிறது? கவிஞர்களாயினும் சரி.. கற்பனாவாதிகளாயினும் சரி… உள்ளம் உருக்கும் வார்த்தை நயத்தைத் தம் இலக்கியப் படைப்பில் என்னமாய் வெளிக்காட்டி விடுகிறார்கள்..
மனத்துக்குப் பிடித்த யாராயினும் உடனேயே இருக்கும் போது தோன்றும் உள்ளக் கிளர்ச்சியும், அவர்களைப் பிரிந்து வாடும்போது வருத்தும் உள்ள மெலிவையும், அன்பும் ஈரமும் உள்ளத்தில் உள்ள எவராயினும் சரி… அனுபவித்திருப்போம்!
இலக்கியமும் அப்படியே! காதலனைப் பிரிந்து தாபத்தால் மெலிந்துபோன காதலியையும், காதல் நிலையையும் காட்டும் பாடல்கள் நமக்குப் புதிதல்ல… அறமும் பொருளும் படைத்துக் காட்டிய வள்ளுவப் பேராசான், இன்பத்தை இறுதியில் வைத்து, உள்ளத்தின் தன்மையைக் காட்டுகிறார்.
"பிரிவாற்றாமை' என்பதை வைத்து, ஓர் அதிகாரத்தையே படைத்துள்ளார்…
நாலாயிர திவ்யப் பிரபந்தங்களில் பிரிவாற்றாமை குறித்த பாசுரங்கள் மிக அதிகம். பெருமானை நினைந்து கதறும் கோதை நாச்சியார், தம் திருமொழியில், எழிலுடைய அம்மனையீர் பாசுரத்தில், 'என்னுடைய கழல்வளையைத் தாமும் கழல் வளையே யாக்கினரே' என்கிறார்.
இந்த பதிவில் பிரிவுகள் பற்றிய வாசகங்களை பார்க்கலாம்

நேரமில்லாத நேரத்திலும் உன்னுடன் பேசினேன்! நீ நேரம் போவதற்காக, பேசுகிறாய் என்று கொஞ்சம் கூட தெரியாமல்!
உன் அலைபேசி கூட அறிந்துவிட்டது, நீ எந்தன் தொடர்பு எல்லைக்கு அப்பால் சென்றுவிட்டாய் என்று!
பசி அடங்கிய பின் கிடைக்கும் உணவும், மனம் வெறுத்த பின் கிடைக்கும் அன்பும் பயனற்றது.
நீ கொடுத்த வலிகளும் நன்மைக்கு தான்! அவையே உணர்த்துகின்றன, நான் உயிரோடு உள்ளதை!

கனவும் கற்பனையும் நீ தந்தது, வலியும் வார்த்தைகளும் நான் கொண்டது!
என் காயங்களை என் கண்கள் கூறும் போதெல்லாம் அன்போடு ஏற்கும் என் தலையணைக்கு நன்றி பாடுவேன்.
என் காயங்கள் "தீரும் வரை அல்ல! என் காலம் தீரும் வரை!"
ஏனோ காதல் பிரிந்தது, இணையாத தண்டவாளம் போல, வாழ்க்கை கண்ணிர் பயணத்தில்!

இப்போதெல்லாம் குப்பைக் காகிதங்களை விட, அதிகமாக தூக்கி வீசப்படுகின்றன, காதல் இதயங்கள்!
வந்த தூக்கத்தை துரத்தி விட்டு, வராத உன்னை பார்க்கிறேன்
அறை சுவற்றில் சுவரோவியமாக உன் முகம்!
அன்பின் பூக்களுக்கு தான் விதையிட்டேன்! அதில் பிரிவின் முட்கள் எப்படி முளைத்ததென்று இப்போது வரை விளங்கவேயில்லை!

தொலைக்கவில்லை! இருந்தும் தேடுகிறேன், நேற்று இருந்த உன்னையும் என்னையும்!
கண் மூடி நான் காணும் கனவே, கண் விழிக்க நான் மறுக்கக் காரணம்!
சிரிப்பதால் வலியை மறந்து விட்டேன் என்று அர்த்தம் அல்ல!
மறைத்து விட்டேன் அவ்வளவு தான்!
எல்லாம் இருந்தும், ஏதும் இல்லாதவள் போல் உணர்கிறேன். நீ என்னுடன் இருந்தும், ஏதோ ஏக்கம்! இது நிரந்தரம் தானா என்று விடையில்லை. விடைசொல்ல நீயும் இல்லை!
நம்மை ஒருவர் காயப்படுத்துவது வேதனை! அதையே நியாப்படுத்துவது நரக வேதனை.
விரும்பிய நாட்ளை வெறுக்க நினைக்கிறேன்,
ஏனோ, விரும்பிய உன்னை இன்னும் வெறுக்க நினைக்கவில்லை!
மிகச் சரியாக செய்த, மிகப் பெரிய தவறு, உன்னை உண்மையாக நேசித்தது தான்!
கை தவறினால் பொருள் உடையும் என யோசிப்பவர்கள், வாய் தவறினால் மனம் உடையும் என யோசிப்பதில்லை.
பிடிக்கவில்லை என்றால் பொய்யாக நேசிக்காதீர்கள்! அன்பாய் இருப்பவர்களால் ஏமாற்றத்தை தாங்கிக்கொள்ள முடியாது!
ஒரு உண்மையான அன்பை எந்த காரணமும் இல்லாமல் நிராகரிப்பதை விட, கொடிய வன்முறை இந்த உலகில் இல்லை.
புரியாமல் பிரிந்து சென்றவர்களை விட, புரிந்திருந்தும் பிரிந்து சென்றவர்கள் தான் இங்கே அதிகம்!
இவ்வுலகில் எதுவும் நிரந்தரம் இல்லை என்பதை நாம் புரிந்து கொள்ளவே சிலர் நம் வாழ்வில் வந்து செல்கின்றனர்!
ஒருவர் உங்களிடமிருந்து பிரிந்து செல்லும்போது ஏற்படும் மனச்சிக்கலை சரிசெய்வது எப்படி?
உங்களுக்குப் பிரியமானவர் உங்களிடமிருந்து பிரிந்து செல்லும் நேரங்களில் நீங்கள் மிகவும் வெறுப்புடனோ அல்லது மிகவும் துயரமாகவோ உணர்வீர்கள்.அதாவது, குறிப்பிட்ட அந்த நபரிடமிருந்து எந்தவொரு பிரிவையும் நீங்கள் தாங்கிக் கொள்ள முடியாது. பிரிவாற்றாமையை சரியாக கையாளவில்லை என்றால், அது உங்கள் உறவையே பாதிக்கக் கூடும்.
பிரிவாற்றாமை, ஒரு கடுமையான நோயாக, குறைபாடாக மாறக் கூடியது. அதனால், முன்னதாகவே அபாய அறிகுறிகளைக் தொழில்முறை நிபுணர்களின் உதவியை நாடுவது மூலம் கண்டறிவது சிறந்தது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu