முண்டாசுக்கவி பாரதியின் முத்து முத்தான எழுச்சி மிகுந்த வரிகள்... இதோ

முண்டாசுக்கவி பாரதியின் முத்து  முத்தான எழுச்சி மிகுந்த வரிகள்... இதோ
X
Bharathiyar Quotes in Tamil with Images-தமிழகத்தில் தன் உணர்ச்சிமிக்க பாடல்கள் மூலம் சுதந்திர வேட்கையை உணர்த்தியவர் மகாகவி பாரதியார்.

Bharathiyar Quotes in Tamil with Images

சுப்பிரமணிய பாரதியார் வாழ்ந்த வீடு.(கோப்புபடம்)

Bharathiyar Quotes in Tamil with Images

சுப்ரமணிய பாரதியார் என்ற பெயருடைய பாரதி தமிழ்க்கவிதை உரைநடையில் சிறப்பான தன்னிகரல்லா புலமை பெற்றவர்.தமிழர் நலன், இந்திய விடுதலை, பெண் விடுதலை, சாதி மறுப்பு, பல்வேறு சமயங்கள் குறித்து கவிதைகளும் கட்டுரைகளும் எழுதியுள்ளார். தம் எழுத்துகள் மூலமாக மக்கள் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர்.

எட்டப்ப நாயக்கர் மன்னர் இவருடைய கவித்திறனை மெச்சி, கலைமகள் எனப் பொருள்படும் பாரதி என்ற பட்டம் வழங்கினார். பாரதியாரின் நூல்கள் தமிழ்நாடு மாநில அரசினால் 1949-ஆம் ஆண்டில் நாட்டுடைமை ஆக்கப்பட்டன. இந்தியாவிலேயே முதன்முதலாக நாட்டுடைமை ஆக்கப்பட்ட இலக்கியம் பாரதியாருடையதாகும்இவரை சிந்துக்குத் தந்தை, செந்தமிழ்த் தேனீ, புதிய அறம் பாட வந்த அறிஞர், மறம் பாட வந்த மறவன் என்றெல்லாம் பாரதிதாசன் இவரைப் புகழ்ந்துள்ளார்

கவிதை எழுதுபவன் கவியன்று. கவிதையே வாழ்க்கையாக உடையோன், வாழ்க்கையே கவிதையாகச் செய்தோன், அவனே கவி - பாரதி. "

நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்கு உழைத்தல், இமைப்பொழுதும் சோராதிருத்தல் - பாரதி.

தாய்மொழி தமிழின்மீது அளவுகடந்த அன்புகொண்டவர். பன்மொழிப் புலமைபெற்ற பாவலரான இவர் "யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவ தெங்கும் காணோம்" எனக் கவிபுனைந்தார்.

சமஸ்கிருதம், வங்காளம், இந்தி, பிரான்சியம், ஆங்கிலத்தில் தனிப்புலமை பெற்றவர். அம்மொழிகளின் தனிச்சிறப்புமிக்க படைப்புகளைத் தமிழ் மொழியாக்கம் செய்தவர். பழந்தமிழ்க் காவியங்களின் மீது தனி ஈடுபாடு கொண்டவர். அழகியல் உணர்வும் தத்துவ சிந்தனைகளும் ஒருங்கே கொண்டவர் என்று அறியப்படுகின்றார். தேசியக்கவி என்ற முறையிலும் உலகு தழுவிய சிந்தனைகளை அழகியலுடனும் உண்மையுடனும் கவி இயற்றியதினாலும், இவர் உலகின் சிறந்த கவிஞர்களுடன் ஒப்பிடப்படும் சிறப்பு பெற்றவர் என்றும், அண்மைக்காலத் தமிழின் தன்னிகரற்ற கவியேறு என்றும் பலர் கருதுகின்றனர்.

Bharathiyar Quotes in Tamil with Images

" தேடிச் சோறு நிதந் தின்று

பல சின்னஞ் சிறு கதைகள் பேசி

மனம் வாடித் துன்பமிக உழன்று

பிறர் வாடப் பல செயல்கள் செய்து

நரை கூடிக் கிழப்பருவம் எய்தி

கொடுங் கூற்றுக் கிரை யெனப்பின் மாயும்

பல வேடிக்கை மனிதரைப் போலே

நான் வீழ்வே னென்று நினைத்தாயோ?

யாமறிந்த மொழிகளிலெ தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்…

மன உறுதி இல்லாதவனுடைய உள்ளம் குழம்பிய ஒரு கடலுக்கு சமமானது.

ஒளியற்றப் பொருள் சகத்திலே இல்லை இருளென்பது குறைந்த ஒளி…

இவ்வுலக வாழ்க்கையில் சம்பாதித்துக் கொள்ள வேண்டிய குணங்கள்எல்லாவற்றிலும் மிக மிக உயர்ந்தது பொறுமை…

எந்த ஏற்றத்துக்கும் ஒரு இறக்கம் உண்டு,எந்தத் துன்பத்துக்கும் ஒரு இறுதி உண்டு,

எந்த முயற்சிக்கும் ஒரு பலன் உண்டு…


சுப்பிரமணிய பாரதியார் தன் மனைவி செல்லம்மாவுடன். (கோப்பு படம் )


எண்ணிய முடிதல் வேண்டும்,நல்லவை எண்ணல் வேண்டும்.

தர்மத்தாலும், கருணையாலும் பெறப்படும் வெற்றியே நிலைபெற்று நிற்கும்.

அதர்மத்தை தர்மத்தாலும், தீமையை நன்மையாலும்தான் வெல்ல முடியும்…

பல வேடிக்கை மனிதரைப் போல் நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ!

Bharathiyar Quotes in Tamil with Images

அச்சம் தவிர் ஆளுமை கொள்!

யாருக்கும் அஞ்சோம், எதற்கும் அஞ்சோம்,எங்கும் அஞ்சோம், எப்போதும் அஞ்சோம்…

கவலையும் பயமும் எனக்கு பகைவர் நான் இப்பகைவரை வென்று தீர்த்தேன்

அதனால் மரணத்தை வென்றேன் நான் அமரன்…நான் வீழ்வேன் என நினைத்தாயோ?

எவனையும் வெற்று காகிதம் என எண்ணாதே…!ஒரு நாள் அவன் பட்டமாய் பறப்பான்

விழும் வேகத்தை விட எழும் வேகம் அதிகமாக இருந்தால்,தோற்கடிக்க அல்ல, உன்னை பார்க்கவே எவனும் பயப்படுவான்…

உள்ளத்தில் நேர்மையும், தைரியமும் இருந்தால் நடக்கும் பாதையும் நேரானதாகவே இருக்கும்…!

உங்களின் தோல்வி எங்கே ஒளிந்துள்ளது தெரியுமா?பிரச்னைகள் வரும்போது அல்ல,

Bharathiyar Quotes in Tamil with Images

Bharathiyar Quotes in Tamil with Images

பிரச்னைகளை கண்டு நீங்கள் பயந்து விலகும்போது…காயங்கள் குணமாக காலம் காத்திரு. கனவுகள் நினைவாக காயம் பொறுத்திரு…

வயிற்றுக்குச் சோறிட வேண்டும்இங்கு வாழும் மனிதருக்கெல்லாம் பயிற்றிப் பலகல்வி தந்து

இந்தப் பார்வை உயர்த்திட வேண்டும்…

வீரமும் மானமும் எங்களின் உடமை…வீழ்த்திட நினைப்பது எதிரியின் மடமை…

துன்பம் நேரும் சமயத்தில் அதை கண்டு சிரிக்கப் பழகுங்கள் அதுவே…அத்துன்பத்தை வெட்டும் வாளாகி விடும்…

எந்த ஒரு செயலைச் செய்யும் போதும் அச்சமில்லாது துணிவுடன் செய்யுங்கள்…

வாழ்க்கையில் எப்போதும், சமாதானத்தையும் சகிப்புத்தன்மையையும் நமது லட்சியமாக கொள்ள வேண்டும்.

துன்பம் நெருங்கிவந்த போதும் நாம் சோர்ந்து விடலாகாது பாப்பா…

காதலடி நீ எனக்கு காந்தமடி நான் உனக்கு வேதமடி நீ எனக்கு வித்தையடி நான் உனக்கு…

பட்டினி கிடந்து பசியில் மெலிந்து பாழ்பட நேர்ந்திடினும்கட்டி இழுத்து கால்கை முறித்து அங்கம் பிளந்து இழந்துதுடிதுடினும் பொங்கு தமிழை பேச மறப்பேனோ..


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
Weight Loss Tips In Tamil