Bestie quotes Tamil உயர்வென்ன தாழ்வுமென்ன உந்தன் அன்பின் முன்னாலே

நட்பு - கோப்புப்படம்
வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் தேவைப்படுவது நம்மை புரிந்து கொண்ட ஒரு நண்பன். பள்ளிப் பருவம் முதலே தொடரும் நட்பு என்றாலும், இரயில் சிநேகமாய் வழித்தடங்களில் பூக்கும் நட்பு என்றாலும் நம் வாழ்வில் அவசியமான ஒரு உறவாக அது மாறிவிடுகிறது. நட்புறவுகள் பல்வேறு பருவங்களில் பல்வேறு சூழல்களில் ஏற்படுகிறது. பிறப்பு முதல் இறப்பு வரை தொடரும் ஆழமான நட்பின் அன்பான கவிதைகளை இந்த பதிவில் காணலாம்.
நட்பு என்ற வார்த்தை
இந்த உலகில் உலவும் வரை
இங்கு யாரும் அனாதை இல்லை
நண்பர்கள் தவறு செய்தால்
மன்னித்து விடாதே
மறந்து விடு
ஏனெனில் அவர்கள் உணர்வுகள்
உன் உறவுகள் அல்ல
எதிர்பாராத சந்திப்பில் தோன்றும் புன்னகை,
நினைவுபடுத்தும் நட்பின் பசுமையை!
நல்ல நண்பனை அடைய விரும்பினால்
நீயும் நல்லவனாக இருக்க வேண்டும்
தோல்விகள் கூட இனிக்கும்
வெற்றி பெற்றது உன் நண்பனாய் இருந்தால்
எதையும் செய்ய கூடிய நட்பு கிடைத்தும்,
அதை உபயோகித்துக் கொள்ளாததில் இருக்கிறது
நட்பின் அழகு!
ஒரே ஒரு நல்ல நண்பன்
உன் வாழ்க்கையில் இருந்தாலும்
நீ ஆசிர்வதிக்கப்பட்டவன்
ஆறுதல் சொல்ல தோழி இருந்தால்
அழுவதில் கூட ஆனந்தம் உண்டு
தூக்கி நிறுத்த தோழன் இருந்தால்
விழுவதால் கூட சுகம் உண்டு
ஆயிரம் சொந்தம் நம்மை தேடி வரும்
ஆனால், தேடினாலும் கிடைக்காத ஒரே சொந்தம்
நல்ல நண்பர்கள்!
தகுதியையும் பணத்தையும்
பார்த்து பழகும் உறவுகளுக்கிடைய
குணத்தையும் மனதையும் பார்த்து பழகும்
நட்பு சிறந்ததே
பல நாட்களுக்கு ஒரு முறை பேசினாலும்,
நண்பனின் பட்டப்பெயர் தான்
முதலில் ஞாபகத்தில் வருகிறது
பல நேரங்களில் விட்டு கொடுப்பது மட்டுமல்ல
சில நேரங்களில் தட்டிகொடுப்பதும் தான் நட்பு!
மலரின் வாசம் அனைவரையும் கவரும்!
அதுபோல நம் நட்பின் சுவாசம் அனைவரையும் கவரட்டும்!
நாம் தவறு செய்யும் போது சிரிக்கின்ற நண்பன்
கஷ்டப்படும் போதும் சிரித்துக் கொண்டுதான் இருப்பான்
எத்தனை வயதானாலும்
மரியாதை மட்டும் கிடைக்காது
நண்பர்களிடத்தில்
உப்பு இருந்தால் தான் உணவு சுவைக்கும்
அதுபோல நட்பு இருந்தால் தான்
வாழ்க்கை சுவைக்கும்
உலகம் என்னை பார்த்து கேட்டது
உனக்கு எத்தனை நண்பர்கள் என்று
பாவம் அதற்கென்ன தெரியும்
என் நண்பர்கள் தான் என் உலகம் என்று
என் அழுகையின் பின்னால்
ஆயிரம் பேர் இருக்கலாம்
ஆனால் என் சிரிப்பின் பின்னால்
நிச்சயம் என் நண்பனே இருப்பான்
நட்பு என்பது
இறைவன் கொடுக்கும் வரம் அல்ல
இறைவனுக்கே கிடைக்காத வரம்
நான் சிரித்தால் என் மகிழ்ச்சியிலும்
நான் அழுதால் என் கண்ணீரிலும்
எனக்காய் நிற்பவன் என் நண்பனே
நண்பர்கள் தவறு செய்தால்
மன்னித்து விடாதே
மறந்து விடு
ஏனெனில் அவர்கள் உணர்வுகள்
உன் உறவுகள் அல்ல
எதிர்பாராத சந்திப்பில் தோன்றும் புன்னகை,
நினைவுபடுத்தும் நட்பின் பசுமையை!
எவ்வளவு அசிங்கமாகத் திட்டு வாங்கினாலும்
எதுவுமே நடக்காத மாதிரி பேச
நண்பனால் மட்டுமே முடியும்!
ஒரு துளி கண்ணீரை துடைப்பது நட்பு அல்ல
மறு துளி வராமல் தடுப்பது தான் நட்பு
தூரத்து சொந்தம் என்பது போல,
தூரத்து நண்பன் என்று யாருமே இல்லை
ஏனெனில் நண்பனான பின்னர்
யாரும் தூரம் இல்லை
நமக்காக கவலைப்படும் நண்பர்கள் இருக்கும் வரை
தினந்தோறும் நண்பர்கள் தினம் தான்
எதிர்பார்ப்புகளே இல்லாமல்
இணைந்திருக்கும் ஒரு உறவு நட்பு
தடுமாறும் போது
தாங்கிப் பிடிப்பவனும்
தடம்மாறும் போது
தட்டி கேட்பவனும்
உண்மையான நண்பண்
பிரிந்து விட்டால் இறந்து
விடுவோம் இது காதல்
இறந்தால் மட்டுமே
பிரிந்து விடுவோம்
இது தான் நட்பு
ஆண் பெண் நட்பின்
உன்னதம் உணர்ந்தேன்
உன்னிடம்
சோகமான நேரம்
மாறிப்போகும் வலிகள்
தொலைந்து போகும்
நண்பர்கள் இருந்தால்
ஒரு மனிதனின் வாழ்க்கையில்
தாங்கி பிடிக்க
நண்பன் என்ற உறவு
இல்லையென்றால்
இரும்பு மனிதனுக்கும்
இதயம் நொறுங்கி தான்
போகும்
மகிழ்ச்சி என்ற
வார்த்தையின்
முகவரி நட்பு தான்
எவ்வளவு சண்டை
போட்டாலும் பிரிவும்
முறிவும் வராத ஒரே
உறவு நட்பு
மட்டும் தான்
வாழ்க்கையின் வேர்களுக்கு
நீண்ட ஆயுளை வழங்குவது
நட்பு எனும் நீருற்று
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu