Benefits Of Sabja Seeds In Tamil-ஊட்டசத்து மிகுந்த சப்ஜா விதைகளை சாப்பிட்டுள்ளீர்களா? அதன் பலனை பாருங்க sabja seeds in tamil

Benefits Of Sabja Seeds In Tamil-ஊட்டசத்து மிகுந்த சப்ஜா விதைகளை சாப்பிட்டுள்ளீர்களா? அதன் பலனை பாருங்க sabja seeds in tamil
X
Benefits Of Sabja Seeds In Tamil-சப்ஜா விதையில் உள்ள புரதம், அத்தியாவசிAய கொழுப்புகள், கார்போஹைட்ரேட்டுகள், நார்ச் சத்து மற்றும் குறைந்த கலோரிகள் எடை இழப்புக்கு உதவுகிறது

Benefits Of Sabja Seeds In Tamil-சப்ஜா விதை (துளசி விதை) திருநீற்றுப்பச்சை, கரந்தை அல்லது துன்னூத்துப் பச்சிலை என்ற பெயரில் வீடுகளில் வளர்க்கப்படும் ஒரு மூலிகை செடியாகும். இந்த செடியின் விதைகள் சப்ஜா விதைகள் என அழைக்கப்படுகிறது.

பொதுவாக ஃபலூடா விதைகள் என்று அழைக்கப்படும் இந்த சப்ஜா விதைகள் ஊட்டச்சத்துக்களின் வளமான ஆதாரமாகும். இவை வெப்பமான மற்றும் ஈரப்பதமான வானிலைக்கும் ஏற்றது.

இது குளிர்பானங்களில் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றது. பார்ப்பதற்கு எள் மற்றும் கருஞ்சீரகத்தினை போல் இருக்கும். நீரில் 15 நிமிடங்கள் ஊறவைத்தால், நீரினை உறிஞ்சி வழவழப்புத்தன்மையுடன் இருக்கும். சர்பத்கள் மற்றும் பலூடாவிலும் இது சேர்க்கப்படுகிறது.

இது இனிப்பு துளசி என்றும் அழைக்கப்படுகிறது, ஆனால் இது சாதாரணமாக நாம் பார்க்கும் துளசியிலிருந்து வேறுபட்டது


மருத்துவக் குணம்

  • சப்ஜா விதையில் துத்தநாகம், சல்ஃபர், ஆன்டிஆக்ஸிடன்ட், வைட்டமின் ஏ, பி, சி உள்ளிட்ட சத்துகள் உள்ளன.
  • நீர்க்கடுப்பு, உடல் சூடு போன்றவற்றைத் தணிப்பதற்கும், குடல் மற்றும் வயிற்று புண்களை சிறப்பாக ஆற்றக்கூடியது.
  • மலச்சிக்கலைப் போக்கும்.
  • நோய் எதிர்ப்புச் சக்தியை வலுப்படுத்தும்.
  • அதிக அளவு இரும்புச்சத்து இருப்பதால், ரத்தச் சோகை வராமல் காக்கும்.
  • ஆண்மையை அதிகரிக்கும்

புதினா குடும்பத்தைச் சேர்ந்த இந்த அதிசய விதையான சப்ஜா விதை பல ஆரோக்கிய நன்மைகளையும், பல நோய்களுக்கும் மருந்தாகி குணப்படுத்த உதவுகிறது. இந்த விதைகள் உங்களுக்கு ஏற்படும் நெஞ்செரிச்சல், இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும். அதுமட்டுமின்றி, நமது உடல் வெப்பத்தைக் குறைக்கவும் இவை உதவுகின்றன. இதிலுள்ள புரதம், அத்தியாவசிய கொழுப்புகள், கார்போ ஹைட்ரேட்டுகள், நார்ச் சத்துக்கள் மற்றும் குறைந்த அளவிலான கலோரிகள் எடை இழப்புக்கு உதவுகிறது.

1-2 டீஸ்பூன் சப்ஜா விதைகளை ஒரே இரவில் தண்ணீரில் ஊறவைக்கவும் (அல்லது 20 நிமிடங்களுக்கு முன் ஊறவைக்கவும்)

இவை தனித்தனி சுவை இல்லாததால், சப்ஜா விதைகளை பல்வேறு உணவுகள் மற்றும் பானங்களில் சேர்க்கலாம், அவற்றின் ஊட்டச்சத்து மதிப்பை அதிகரிக்கவும் குளிர்ச்சியான விளைவையும் சேர்க்கலாம்.

பக்கவிளைவுகள்

சப்ஜா விதையில் பல நன்மைகள் இருந்தபோதிலும், இது குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு தீங்கு விளைவிக்கும். எனவே, அவர்கள் அவற்றை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

சிறு குழந்தைகள் இந்த விதைகளை தண்ணீரில் நன்றாக கலக்கவில்லை என்றால் மூச்சுத் திணறலாம்.

கர்ப்பிணிப் பெண்களைப் பொறுத்தவரை, இந்த விதைகள் உடலில் ஈஸ்ட்ரோஜனின் அளவைக் குறைக்கும். நீங்கள் கர்ப்பமாக இருந்தால், உங்கள் உணவில் சப்ஜா விதைகளைச் சேர்ப்பதற்கு முன், உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
ai automation digital future