உடல் உறுப்புகள் சீராக இருக்கனுமா? தினமும் ஒரு ஸ்பூன் கருஞ்சீரகத்தை சாப்பிடுங்க..

Kalonji Seeds Benefits in Tamil
Kalonji Seeds Benefits in Tamil-உடலுக்குத் தேவையான பலவித அமிலங்களான மிரிஸ்டிக் அமிலம், பாமிட்ரிக் அமிலம், ஸ்டீரிக் அமிலம், ணுயிலிக் அமிலம், லினோயின் அமிலம், ஒமேகா 6 ஃபேட்டி ஆசிட், ஃபோலிக் அமிலம் போன்றவை கருஞ்சீரகத்துக்குள் இருந்திருக்கிறது.
அதோடு புரதச்சத்து, கால்சியம், இரும்புச்சத்து, தாமிரம், ஜிங்க், பாஸ்பரஸ், வைட்டமின் பி1, பி2, பி3 போன்ற ஊட்டச்சத்துக்களை உள்ளடக்கிய அற்புத மருத்துவம் தான் இந்த கருஞ்சீரகம்.
`இறப்பைத் தவிர மற்ற எல்லா நோய்களையும் குணப்படுத்தக்கூடியது' என்று நபிகள் நாயகம் இதன் சிறப்பை பற்றி குறிப்பிட்டிருக்கிறார். யுனானி மருத்துவத்தில் கருஞ்சீரக எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. அரபு நாடுகளில் இதை உணவில் சேர்த்துப் பயன்படுத்துகிறார்கள்.
கருஞ்சீரகத்தின் விதையில் உள்ள `தைமோகுயினன்' என்ற வேதிப்பொருள் நோய் எதிர்ப்பு சக்தியை தரக்கூடியது. இது கெட்ட கொழுப்புக் குறைய உதவும். மேலும், அமினோ அமிலங்கள், வைட்டமின்கள், கால்சியம், இரும்புச்சத்து போன்றவையும் இதில் உள்ளன.
- ஆஸ்துமா, சுவாசப் பிரச்னைகள் உள்ளவர்களுக்கு, நோய் எதிர்ப்பு சக்தியைத் தரும்.
- எலும்பு மஜ்ஜை உற்பத்தியைச் சீராக்கி, புற்றுநோய்க் கட்டிகள் ஏற்படாதபடி பாதுகாக்கும். குறிப்பாக, கணையப் புற்றுநோயைக் கட்டுப்படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கிறது.
- மூக்கடைப்புக்கு இது நல்ல மருந்து. ஒரு டீஸ்பூன் கருஞ்சீரகப் பொடியை தேங்காய் எண்ணெய் சேர்த்து சூடாக்கி, இரண்டு சொட்டு மூக்கில் விட்டால் மூக்கடைப்பு விலகும்.
- கருஞ்சீரகப் பொடியை வெந்நீர், தேன் கலந்து பருகினால் சிறுநீரகக் கற்களும் பித்தப்பைக் கற்களும் கரையும். இதை காலை, மாலை இரண்டுவேளையும் சாப்பிட்டு வரவேண்டியது அவசியம்.
- இருமலுக்கு கருஞ்சீரகம் கண்கண்ட மருந்து. ஒரு டீஸ்பூன் கருஞ்சீரகப் பொடியை, அரை டீஸ்பூன் அரைத்த பூண்டு விழுதுடன் தேன் சேர்த்துச் சாப்பிட நுரையீரலில் தேங்கியிருக்கும் சளியை அகற்றும்.
- தோல் கரப்பான், சொரியாசிஸ் உள்ளவர்கள் கருஞ்சீரகத்தைப் பொடியாக்கி தேய்த்துக் குளிக்க நோயின் தீவிரம் குறையும். கருஞ்சீரகத்தைத் தண்ணீர் விட்டு அரைத்து, அந்த பேஸ்ட்டை நல்லெண்ணெயில் குழைத்து கரப்பான், சொரி, சிரங்கு உள்ள இடத்தில் தடவி வர தோல் சம்பந்தப்பட்ட தீராத நோயும் தீரும். தேமல் மேல் தடவ, தேமலும் மறையும். தோல் சம்பந்தப்பட்ட பிரச்னைகளை குறைப்பதில் மிகத் தீவிரமாக குணப்படுத்துவது கருஞ்சீரகம்.
- மாதவிடாய்க் கோளாறுகளின்போது வறுத்துப் பொடித்த கருஞ்சீரகத்துடன் தேன் அல்லது கருப்பட்டி கலந்து, மாதவிடாய் தேதிக்கு 10 நாள்கள் முன்பிருந்தே ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வர, வயிற்று வலி, ரத்தப்போக்கு உள்ளிட்ட மாதவிடாய்ச் சிக்கல்களை சரி செய்யும்; வயிறு கனம் குறைந்து நன்றாகச் சிறுநீர் வெளியேற உதவும்.
பிரசவத்துக்குப் பின்னர் கர்ப்பப்பையில் சேரும் அழுக்கை நீக்க, கருஞ்சீரகப் பொடியுடன் பனைவெல்லம் சேர்த்துச் சாப்பிடலாம். குழந்தை பெற்ற மூன்றாவது நாளில் இருந்து காலை, மாலை என ஐந்து நாள்கள் தொடர்ந்து சாப்பிட வேண்டும்.
உடலில் தேங்கியிருக்கும் அனைத்து நச்சுக்களும் வெளியேற வேண்டுமா?
வெந்தயம் கால் கிலோ, ஓமம் 100 கிராம், கருஞ்சீரகம் 50 கிராம் எடுத்து கருக விடாமல் வறுத்துப் பொடியாக்க வேண்டும். இதை ஒரு டீஸ்பூன் அளவுக்கு எடுத்து, இரவு நேரத்தில் வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிக்க வேண்டும். இதைச் சாப்பிட்டதும் வேறு எந்த உணவும் சாப்பிடக் கூடாது. இப்படித் தொடர்ந்து செய்து வந்தால், மலம், சிறுநீர், வியர்வை மூலம் உடலில் தேங்கியிருக்கும் அனைத்து நச்சுக்களும் வெளியேறும்; தேவையற்ற கொழுப்பு நீங்கும். ரத்தம் சுத்திகரிக்கப்பட்டு ரத்த ஓட்டம் சீராகும்.
இவ்வளவு மருத்துவ குணங்கள் நிரந்த கருஞ்சீரகத்தை தினமும் உணவில் சேர்த்து சாப்பிட்டு வாருங்கள்! காலம் முழுவதும் ஆரோக்கியமான வாழ்க்கை வாழுங்கள்
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu