Benefits of Beans - இனிமே மிஸ் பண்ணாம சாப்பிடுங்க! அளவற்ற நன்மைகளை கொண்ட பீன்ஸ்

Benefits of Beans - இனிமே மிஸ் பண்ணாம சாப்பிடுங்க! அளவற்ற நன்மைகளை கொண்ட பீன்ஸ்
X

Benefits of Beans- பீன்ஸ் சாப்பிடுங்கள், உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது (கோப்பு படம்)

Benefits of Beans- ஏராளமான உடல் ஆரோக்கிய நன்மைகளை கொண்டிருக்கிறது பீன்ஸ். எனவே உங்கள் உணவில் கட்டாயம் பீன்ஸ் சேர்த்துக்கொள்ளுங்கள்.

Benefits of Beans - அளவற்ற நன்மைகளை கொண்ட பீன்ஸ் காய்கறிகளின் பயன்களை தெரிந்துக்கொள்வோம்.

நீங்கள் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு பீன்ஸில் உடல் ஆரோக்கியத்திற்கான நன்மைகள் உள்ளன. எனவே பீன்ஸை உணவு பழக்கத்தில் கட்டாயம் சேருங்கள்

பீன்ஸ் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

இன்னைக்கு வீட்டில் என்ன பொரியல் என தாயிடம் கேட்கும் பிள்ளைகளுக்கு பீன்ஸ் பொரியல் என்று பதில் கிடைத்தால் அவ்வளவு தான்… முகம் மாறிவிடும். வேற பொரியலேயே கிடைக்கவில்லையா என கோபம் வரும். ஆனால் பீன்ஸில் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை அளிக்கும் ஏராளமான விஷயங்கள் உள்ளன.

புரதம், நார்ச்சத்து, இரும்பு மற்றும் வைட்டமின்களின் தாவர ஆதாரம் என பீன்ஸை குறிப்பிடலாம். பீன்ஸ் ஒருவரின் இதயம், குடல் மற்றும் கல்லீரல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

பீன்ஸில் உள்ள புரதம் நமது உடலைப் பராமரிப்பதிலும், உடலில் ஏற்படும் பிரச்சினைகளை சரி செய்வதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. பீன்ஸில் அமினோ அமிலங்கள், ஃபோலேட் உட்பட பல முக்கிய ஊட்டச்சத்துகள் உள்ளன. ஃபோலேட் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும், சிவப்பு இரத்த அணுக்களை உருவாக்குவதற்கும் உதவுகிறது. கர்ப்ப காலத்தில் பீன்ஸ் சாப்பிட்டால் கருவை சுமக்கும் நரம்பு குழாய்களில் குறைபாடுகள் இருந்தால் அது சரி செய்யப்படுகிறது.

சில ஆய்வுகளில் ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு முகவர்களாக பீன்ஸ் செயல்படுவதை உறுதிபடுத்துகின்றன. இது புற்றுநோயின் அபாயத்தை குறைக்கும். நாம் பீன்ஸ் சாப்பிடும்போது அதில் உள்ள நார்ச்சத்து மற்றும் மாவுச்சத்து ஆரோக்கியமான வாழ்விற்கு வித்திடும்.


பீன்ஸில் உள்ள பொட்டாசியம் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் கொழுப்பைக் குறைக்கவும் உதவுகிறது. அதிக நார்ச்சத்து உள்ளடக்கம் வழக்கமான குடல் இயக்கங்களை எளிதாக்குகிறது. மேலும் செரிமானத்திற்கு உதவுகிறது மற்றும் குடல் ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது.

கால்சியம், பாஸ்பேட் மற்றும் வைட்டமின் கே நிறைந்த பீன்ஸ் எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது. நீரிழிவு நோயாளிகள் அன்றாட உணவில் பீன்ஸை தேவையான அளவு சேர்க்க வேண்டும். பீன்ஸில் இருக்கும் நார்ச்சத்து இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. பீன்ஸின் குறைந்த கலோரி எண்ணிக்கை எடை மேலாண்மைக்கும் பயனளிக்கிறது.

பீன்ஸில் இருக்கும் வைட்டமின் ஏ வயது மாகுலர் சிதைவைத் தடுக்கவும், நல்ல பார்வையைத் தக்கவைக்கவும் உதவுகிறது. பீன்ஸில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் கர்ப்பிணிகளுக்கு மிகவும் நல்லது. எனவே நீங்கள் பிள்ளைகளுக்கு பீன்ஸின் நன்மைகளை எடுத்துச் சொல்லுங்கள்.


காய்கறி வகைகளிலே மிகவும் குறைந்த விலையில் கிடைக்கக்கூடியது இந்த பீன்ஸ் தான். காய்கறிகள் என்று எடுத்துக்கொண்டாலே உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் கிடைக்கூடிய ஒன்று. இன்றைய தலைமுறையினர் பெரும்பாலும் உடலுக்கு சத்து தரக்கூடிய உணவுகளை எடுத்துக்கொள்ளாமல் வெளியில் வாங்கி உண்பதையே விரும்புகிறார்கள். வீட்டில் இருக்கக்கூடிய பெரியவர்கள் காய்கறிகளை எவ்வளவு ருசியாக சமைத்து கொடுத்தாலும் அதை வீட்டில் இருக்கக்கூடிய சின்னஞ் சிறுசுங்களுக்கு பிடிக்காது. அதிலும் பீன்ஸ் பொரியல் செய்து வைத்தால் அறவே சாப்பிட மாட்டார்கள். நாம் எதை ஒதுக்கி வைத்து சாப்பிடுகிறோமா அதில்தான் அதிகளவு சத்து நிறைந்து கிடக்கிறது. பீன்ஸ் சாப்பிடுவதால் உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்று தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..

புற்றுநோயானது பெண்களுக்கு மட்டுமல்லாமல் ஆண்களுக்கும் இப்போது அதிக தாக்கத்தினை ஏற்படுத்துகிறது. புற்றுநோய்களில் பல வகையான புற்றுநோய்கள் இருக்கிறது. புற்றுநோய் இருப்பவர்கள் தினமும் உணவில் பீன்ஸை சேர்த்துக்கொண்டால் பீன்ஸில் இருக்கக்கூடிய ஃப்ளேவோனாய்டுகள் புற்றுநோய் உண்டாக்கும் செல்களின் வளர்ச்சியைத் தடுத்து, புற்றுநோயை வராமல் தடுத்து பாதுகாத்து கொள்கிறது.


மலச்சிக்கல் தீர:

கார சாரமான உணவுகளை அதிகமாக சாப்பிடுவதால் ஒரு சிலருக்கு மலச்சிக்கல் மற்றும் வயிற்று உபாதை பிரச்சனைகள் ஏற்படுகிறது. நாம் சாப்பிடும் உணவு எளிதில் சீரணம் ஆகாமல் மலச்சிக்கல் பிரச்சனையில் கொண்டு போய் விடுகிறது. மலச்சிக்கல் பிரச்சனை இருப்பவர்கள் உணவில் தினமும் பீன்ஸ் பொரியல், கூட்டு போன்றவைகளை சேர்த்துக்கொள்வதன் மூலம் மலச்சிக்கல் பிரச்சனையிலிருந்து விடுபடலாம்.

நீரிழிவு நோய் குணமாக:

உடலில் சர்க்கரை நோய் இருப்பவர்கள் எந்த ஒரு சர்க்கரை சேர்த்த உணவுகளையும் பார்த்து பார்த்து சாப்பிடுவார்கள். இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவினை கட்டுக்கோப்பாக வைப்பதற்கு பீன்ஸ் பெரிதும் உதவுகிறது. ஏனென்றால் பீன்ஸில் இருக்கக்கூடிய கார்போஹைட்ரேட் உடலில் இரத்தத்தில் அதிக அளவு சர்க்கரையை சேர்க்க விடாமல் தடுத்து நிறுத்துகிறது.

Tags

Next Story
ai in future agriculture