Benefits of Basepacking- முகத்தில் அதிக வறட்சி இருக்கிறதா, தயிருடன் இதை கலந்து ஃபேஸ் பேக் பண்ணுங்க!

Benefits of Basepacking- வறட்சியான முகத்தை பொலிவுபடுத்தும் பேஸ்மேக் முறைகள் குறித்து தெரிந்துக்கொள்வோம் (கோப்பு படம்)
Benefits of Basepacking- குளிர்காலத்தில் பெரும்பாலானோர் சந்திக்கும் ஒரு பொதுவான சரும பிரச்சனை தான் சரும வறட்சி. இந்த சரும வறட்சியை பலர் கை, கால்களில் மட்டுமின்றி, முகத்திலும் சந்திப்பதுண்டு. கை, கால்களில் சந்திக்கும் சரும வறட்சியைப் போக்க மாய்ஸ்சுரைசர், எண்ணெய் போன்றவற்றை பயன்படுத்துகிறோம்.
ஆனால் கை, கால்களில் உள்ள சருமத்தை விட முகத்தில் உள்ள சருமம் மிகவும் சென்சிடிவ்வானது. இப்பகுதியில் கெமிக்கல் கலந்த பொருட்களை பயன்படுத்தினால், சிலருக்கு அதன் விளைவாக பருக்கள் அதிகம் வர வாய்ப்புள்ளது. எனவே இதைத் தவிர்க்க சிறந்த வழி, நம் வீட்டு சமையலறையில் உள்ள இயற்கை பொருட்களைக் கொண்டு ஃபேஸ் பேக் போடுவது தான்.
கீழே சரும வறட்சியைப் போக்கி, சருமத்தின் அழகை மேம்படுத்த உதவும் சில நேச்சுரல் ஃபேஸ் பேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. அந்த ஃபேஸ் பேக்குகளை சரும வறட்சியை அதிகம் சந்திப்பவர்கள் பயன்படுத்தி வந்தால், நல்ல பலனைப் பெறலாம்.
1. தேங்காய் பால் ஃபேஸ் பேக்
* முதலில் துருவிய தேங்காயை மிக்சர் ஜாரில் எடுத்து, சிறிது நீர் ஊற்றி நன்கு அரைத்து, அதை வடிகட்டி, கெட்டியான தேங்காய் பாலை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அந்த தேங்காய் பாலை முகத்தில் மட்டுமின்றி, கை, கால்களிலும் தடவி 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதன் பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இப்படி தினமும் பயன்படுத்தி வந்தால், சருமம் வறட்சியின்றி நன்கு பட்டுப் போன்று மென்மையாக இருக்கும்.
2. தேன் ஃபேஸ் பேக்
* ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் தேனை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அத்துடன் 2 டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டரை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
* இப்படி தினமும் ஒருமுறை பயன்படுத்தி வந்தால், சரும வறட்சி நீங்கும்.
3. கற்றாழை ஃபேஸ் பேக்
* ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் சந்தன பொடியுடன்,
2 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல்லை சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின் அந்த கலவையை முகம் மற்றும் கழுத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும்.
* இப்படி வாரத்திற்கு 2 முறை பயன்படுத்தி வந்தால், நல்ல மாற்றத்தைக் காணலாம்.
4. தயிர் ஃபேஸ் பேக்
* ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் தயிரை எடுத்து, அத்துடன் 1 சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அந்த கலவையை முகம் மற்றும் கழுத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* 20 நிமிடம் ஆனதும், குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு 2 முறை பயன்படுத்த வேண்டும்.
5. காபி ஃபேஸ் பேக்
* ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் காபி தூளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் பால் சேர்த்து கெட்டியாக பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு அந்த கலவையை முகம் மற்றும் கழுத்தில் தடவி மென்மையாக சிறிது நேரம் மசாஜ் செய்து, 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும்.
* இப்படி வாரத்திற்கு ஒருமுறை பயன்படுத்தினால், சரும வறட்சி நீங்குவதோடு, சருமமும் பளிச்சென்று பிரகாசமாக இருக்கும்.
6. முட்டை மஞ்சள் கரு ஃபேஸ் பேக்
* ஒரு பௌலில் ஒரு முட்டையின் மஞ்சள் கருவை எடுத்து, அத்துடன் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து நன்கு அடித்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு 2 முறை பயன்படுத்துவது நல்லது.
7. பப்பாளி ஃபேஸ் பேக்
* கனியாத பப்பாளி காயை எடுத்து, பால் சேர்த்து அரைத்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின் அந்த கலவையை முகத்தில் தடவி நன்கு காய வைக்க வேண்டும்.
* பின்பு குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
* இப்படி வாரத்திற்கு 2-3 முறை பயன்படுத்தினால், சிறப்பான பலன்கள் கிடைக்கும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu