குழந்தை வளர்ச்சிக்கு உதவும் அவல் கொழுக்கட்டை செய்வது எப்படி?

குழந்தை வளர்ச்சிக்கு உதவும் அவல் கொழுக்கட்டை செய்வது எப்படி?

Aval Kozhukkattai recipe- அவல் கொழுக்கட்டை ( கோப்பு படம்)

Aval Kozhukkattai recipe- வீட்டில் உள்ள உங்களது குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துள்ள உணவுகளைக் கொடுக்க வேண்டியது ஒவ்வொரு பெற்றோரின் கடமை. அந்த வகையில் அவல் கொழுக்கட்டை செய்வது குறித்து தெரிந்துக் கொள்வோம்.

Aval Kozhukkattai recipe- கோடை விடுமுறை வந்தாலே குழந்தைகளுக்குக் குதூகலமாக இருந்தாலும், பெற்றோர்களுக்கு பெரும் சவாலாகவே அமையும். பள்ளிக்குச் சென்றால் கூட காலை, மதியம், மாலை என மூன்று வேளைகளிலும் ஊட்டச்சத்துள்ள உணவுகளை உட்கொள்வார்கள். ஆனால் நாள் முழுவதும் விளையாட்டு, நேரம் தவறி சாப்பிடுவது போன்ற பழக்கங்கள் தான் குழந்தைகள் மத்தியில் அதிகளவில் உள்ளது. இந்த நேரத்தில் உங்களது குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துள்ள உணவுகளைக் கொடுக்க வேண்டியது ஒவ்வொரு பெற்றோர்களின் கடமைகள். இதோ இவற்றில் ஒன்றான அவல் கொழுக்கட்டை எப்படி செய்வது? என்பது குறித்து அறிந்துக் கொள்ளலாம்.


குழந்தைகள் விரும்பும் அவல் கொழுக்கட்டை:

தேவையான பொருட்கள்:

அவல் - 1 கப்

வெல்லம் - அரை கப்

தண்ணீர் - கால் கப்

தேங்காய் துருவியது - கால் கப்

ஏலக்காய் பொடி - சிறிதளவு

நெய்- தேவையான அளவு

செய்முறை:

அவல் கொழுக்கட்டை செய்வதற்கு முதலில் அவலை மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

இதையடுத்து ஒரு பாத்திரத்தில் வெல்லத்தை அரை கப் தண்ணீர் ஊற்றி உருகியதும் இறக்கி விடவும். சூடு ஆறியதும் வடிகட்டிக் கொள்ளவும். பின்னர் ஒரு வாணலில் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

நன்கு கொதித்து வந்தும் அதனுடன் தேங்காய் துருவல், ஏலக்காய் பொடி மற்றும் நெய் சேர்த்துக கிளறவும். பின்னர் அரைத்த அவலையும் சேர்த்து ஓரளவு கெட்டியாகும் வரை கிளற வேண்டும். ஓரளவிற்குக் கெட்டியாக வந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.

இந்த அவல் கலவையை வழக்கம் போல கொழுக்கட்டை எப்படி பிடிப்போமோ? அதுபோன்று பிடித்து இட்லி பாத்திரத்தில் வைத்து 10 நிமிடங்களுக்கு வேக வைத்தால் போதும் சுவையான அவல் கொழுக்கட்டை ரெடி.

ஒருவேளை உங்களுக்கு இனிப்பு கொழுக்கட்டை பிடிக்கவில்லையென்றால், தேங்காய் துருவல், ஏலக்காய் பொடி சேர்த்து கொதிக்க வைப்பதற்கு முன்னதாக வெங்காயம், பச்சை மிளகாய் போன்றவற்றை வதக்கிக்கொள்ளவும். பின்னர் வழக்கம் போல கொழுக்கட்டையை தயார் செய்யலாம்.


அவலில் உள்ள ஊட்டச்சத்துக்கள்:

நம்முடைய முன்னோர்களின் பாரம்பரிய உணவுகளில் ஒன்றாக உள்ளது அவல். இதில் நார்ச்சத்துக்கள், வைட்டமின் பி, கால்சியம், ஜிங்க், இரும்புச்சத்து, மாங்கனீசு, மெக்னீசியம், கார்போஹைட்ரேட், புரதம் போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உள்ளதால் உடலுக்குத் தேவையான ஆற்றலை அளிக்கிறது.

மேலும் இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடல் சூட்டைத் தணித்து உடலுக்குப் புத்துணர்ச்சியை அளிக்கிறது. எளிதில் செரிமானம் ஆகக்கூடிய உணவுகளில் ஒன்று என்பதால் குடல் ஆரோக்கியமும் மேம்படும். குறிப்பாக குழந்தைகளின் வளர்ச்சிக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களும் அவலில் உள்ளது.

Tags

Read MoreRead Less
Next Story