Appa Kavithai - அப்பா என்னும் உன்னத உறவை சொல்லும் கவிதை வரிகள்

Appa Kavithai - அப்பா பிள்ளை பாசம் என்பது, வார்த்தைகளால் சொல்லி விட முடியாதது (கோப்பு படம்)
Appa Kavithai- அப்பாவின் அன்பை கவிதைகளாக எழுதி, பிள்ளைகள் வெளிப்படுத்தலாம். அன்னை தன் வயிற்றில் பத்து மாதங்கள் நம்மை சுமந்தாலும், ஆயுள் வரை நெஞ்சில் சுமப்பவர் தந்தை. எட்டி உதைத்த கால்களை கட்டி அணைத்து முத்தமிட்டு பூரித்து போவார். வாழ்க்கைச் சக்கரத்தில் நாம் வசதியாக வாழ்வதற்காக, ஓயாமல் சுழலும் அன்பு சக்கரம். நாம் எழுமுன் வேலைக்கு சென்று, நாம் தூங்கிய பின்பு வீடு திரும்பும் தன்னலமில்லா உள்ளம்.
அப்பா என்ற வார்த்தையில் தான் எத்தனை மந்திரங்கள். தந்தை என்பவர் ஆயிரம் ஆசான்களுக்கு சமம். தன் குழந்தைகளுக்கு ஆலோசனை கூறுவதில் தொடங்கி, அனுபவ பாடங்களை போதித்து சிறந்த வழிகாட்டியாக எத்தனை பொறுப்புகள். 'தந்தை சொல்மிக்க மந்திரமில்லை' என்னும் ஔவையின் வாக்கில் எவ்வளவு உண்மை.
உழைப்பு, சேமிப்பு, தன்னம்பிக்கையின் ஊற்று தந்தை என்றால் மிகையாகாது. அப்பாவின் கைப்பிடித்து நடக்கும் அனுபவம் கோடி ரூபாய்க்கும் ஈடாகாது. அப்பாவின் கரம் பிடித்து நடக்கையிலே, கவலைகள் அனைத்தும் மறந்து போகும். பிள்ளைகள் துவண்ட போதும், 'நான் இருக்கிறேன், எதற்கும் கவலைப்படாதே' என்னும் நம்பிக்கையை தோற்றுவித்து. தன் பிள்ளையின் நிழலாகவே இருப்பார்.
தந்தை தனது குழந்தைக்கு பிரச்னைகளை எதிர்கொண்டு போராடும் எதிர்நீச்சலை கற்றுத் தருகிறார். எத்தனையோ இன்னல்கள் வந்தாலும் அதை வெளிக்காட்டாமல், துன்பத்தின் சாயல் தம் பிள்ளைகள்மீது படாமல், அனைத்தையும் தம் தோளில் சுமப்பவரே தந்தை. தந்தை தன் குழந்தை தன்னைவிட உயர்ந்த நிலைக்கு செல்ல வேண்டுமென்று தோளில் சுமந்து உலகை காட்டுபவர். வெடிப்பு விழுந்திருக்கும் பாதங்களில், நரம்பு தெரியும் கைகளில், நரை விழுந்த தலைமுடியில் அப்பாக்களின் உழைப்பின் வரலாறு அமைதியாக குடிகொண்டிருக்கிறது.
கடவுள் கொடுத்த வரம் கிடைக்க வில்லை
கடவுளே கிடைத்தார் வரமாக
அப்பா!
பத்து திங்கள் தாய் பட்ட வேதனையை
தாய்க்கும் பிள்ளைக்குமாய்
ஆயுள் வரை தாங்கிடும்
ஒரே உயிர்!
***
எத்தனை பேர் நான் இருக்கிறேன்
என்று சொன்னாலும்
அப்பாவை போல் யாராலும்
இருக்கவே முடியாது.
ஆராய்ந்து பார்க்கும் வரை
யாருக்கும் தெரியாது
ஒவ்வொரு தந்தையின்
கஷ்டத்தை!
***
இறைவனுக்கும் அப்பாவுக்கும்
சிறு வித்தியாசம்தான்
இறைவன் நாம் காணாத கடவுள்
அப்பா நாம் தினமும் காணும் கடவுள்.
***
அழகிய உறவாய் அன்பான துணையாய்
உயிர் கொடுக்கும் உயிராய் மழலையின் தோழனாய் குழந்தையின் வழிகாட்டியாய் இருக்கும்
ஒரே உறவு அப்பா!
அப்பாவின் தோளில் ஏறி
சாமியை பார்க்கும் போது தெரியவில்லை
சாமியின் தோள் மீதுதான் ஏறி இருக்கிறேன் என்று!
***
அப்பாவை தவிர
நமக்கு நல்ல நடத்தையை
வாழ்க்கையில்
வேறு எந்த ஆசானாலும்
கற்பிக்க முடியாது
***
எந்த பெண்ணும்
அவள் கணவணுக்கு
ராணியாக இல்லாமல் இருக்கலாம்
ஆனால் நிச்சயம்
அவள் தந்தைக்கு
இளவரசியாகவே இருக்கிறாள்..!
அப்பா எதனையோ சரிவுகளுக்குப் பிறகும்,
தைரியமாய் சிரித்துக் கொண்டிருக்கிற
அப்பாவுக்கு நிகரான
நம்பிக்கையூட்டும்
புத்தகம் பிரபஞ்சத்தில் எங்குமே இல்லை ...!
***
அம்மாவின் பாசம்
கருணையில் தெரியும்
அப்பாவின் பாசம்
அவரது கடமையில் புரியும்
***
எனக்கு கிடைக்காத அனைத்து சந்தோஷங்களும்
தன் குழந்தைகளுக்கு கிடைக்க வேண்டும்
என்று நினைத்து வாழும் உயிர் தான் அப்பா
அப்பாவின் அன்பில்
ஓர் அழகியல் இருக்கின்றது;
அது..
மகள்களுக்கு மட்டுமே உரித்தாகின்றது!
***
ஆயிரம் மடங்கு அன்பை உள்ளே வைத்து கொண்டு
எதிரியை போல் நடமாடும் ஓர்உயிர் அப்பா!!!!
***
நான் எழுதும் தமிழ் கவிதையில்
நான் கண்ட மிக சிறந்த மூன்று எழுத்து
என் “அப்பா” “அம்மா”.
அம்மாவின் பாசம் கருணையில் தெரியும்
அப்பாவின் பாசம் அவரது கடமையில் புரியும்.
***
அப்பா என்ற ஒன்றின் இலக்கணத்தில்
அன்பு, பாசம், பரிவு, நேசம், செல்லம், வெகுளித்தனம் என
இவை அனைத்தும் அடங்கி விடும்.
***
நல்ல நடத்தையை யாரும் கற்பிக்க முடியாது
தந்தையை தவிர இந்த உலகில்...!
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu