அன்பு மொழி பேசுங்க. ஆண்டவனும் உங்ககிட்ட பேசுவார்.
Anbu Quotes in Tamil
Anbu Quotes in Tamil
அனைத்து உயிர்களையும் படைத்து, அவை உயிர்வாழத் தேவையான அத்தனையையும் கொடுத்த இறைவன் அவை பேசுவதற்கு ஒரு மொழியை மட்டும் கொடுக்காமலா விட்டிருப்பார். உண்மை என்னவென்றால் அன்பென்னும் மொழி மூலம் நம்மால் விலங்குகளுடன் பேச முடியும். ஆனால் நாம் தான் அன்பென்னும் மொழியில் பேசுவதில்லை.
அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் என்றார் வள்ளுவர். அன்பே சிவம் என்பது சிவநெறியை பின்பற்றுபவர்கள் நம்பிக்கை. அன்பு என்பது வார்த்தைகள் தேவையில்லா அற்புத மொழி. அதை பேசக் கற்றுக்கொள்ளுங்கள், ஆண்டவனும் உங்களுடன் பேச ஆசைப்படுவார்.
அன்பு குறித்து அறிஞர்களின் அற்புதமான பொன்மொழிகள்
அன்னை தெரேசா: அன்பு என்பது எல்லாப் பருவத்திலும் கிடைக்கும் ஒரு பழம், மேலும் எல்லோர் கைகளுக்கும் எட்டும் தூரத்தில் தான் உள்ளது.
மகாத்மா காந்தி: எங்கே அன்பு இருக்கிறதோ, அங்கே வாழ்க்கை இருக்கிறது.
தலாய் லாமா: அன்பும் இரக்கமும் நிறைந்த இதயமே மன வலிமை, மன உறுதி, மகிழ்ச்சி மற்றும் மன அமைதிக்கான முக்கிய ஆதாரமாகும்.
மார்ட்டின் லூதர் கிங்: நாம் மன்னிக்கும் திறனை வளர்த்து அதை தக்கவைத்துக் கொள்ள வேண்டும். மன்னிக்கும் ஆற்றல் இல்லாதவன் அன்பு செய்யும் ஆற்றல் இல்லாதவன்.
நெப்போலியன் ஹில்: அதிகமாக நேசித்தால் நீங்கள் காயப்படக்கூடும், ஆனால் குறைவாக நேசித்தால் நீங்கள் துன்பத்தில் வாழ்வீர்கள்.
சோஃபோக்கிள்ஸ்: ஒரு வார்த்தை நம்மை வாழ்வின் அனைத்து சுமைகளிலிருந்தும் வலிகளிலிருந்தும் விடுவிக்கிறது: அந்த வார்த்தைதான் அன்பு.
மகாத்மா காந்தி: ஒரு நாட்டின் மகத்துவத்தை அதன் விலங்குகள் நடத்தப்படும் விதத்தை வைத்து மதிப்பிட முடியும்.
மாதா அமிர்தானந்தமயி: ஒருவர் அன்பும் இரக்கமும் நிறைந்தவராக இருக்கும்போது, அவரால் இரண்டு நாடுகள், இரண்டு நம்பிக்கைகள் அல்லது இரண்டு மதங்களுக்கு இடையே ஒரு கோட்டை வரைய முடியாது.
அன்னை தெரேசா: இந்த உலகை வெல்வதற்கு நாங்கள் வெடிகுண்டுகளையும் துப்பாக்கிகளையும் பயன்படுத்த வேண்டாம். அன்பையும் இரக்கத்தையும் பயன்படுத்துவோம்.
மார்டின் லூதர் கிங்: நான் அன்போடு ஒட்டிக்கொள்ள முடிவு செய்துள்ளேன். வெறுப்பு என்பது தாங்க முடியாத ஒரு சுமை.
தலாய் லாமா: மூச்சை உள்இழுக்கும் போது, உங்களை நீங்களே நேசியுங்கள். மூச்சை வெளிவிடும் போது, எல்லா உயிர்களையும் நேசியுங்கள்.
கெளதம புத்தர்: நீங்கள் ஒரு பூவில் விருப்பப்பட்டால் அதைப் பறித்து விடுவீர்கள். ஆனால் நீங்கள் ஒரு பூவில் அன்பு வைத்தால் தினமும் அதற்குத் தண்ணீர் ஊற்றுவீர்கள்.
சார்லி சாப்ளின்: புத்திசாலித்தனத்தை விட, நமக்கு அன்பும் கருணையுமே தேவை.
பிளேட்டோ: எங்கே அன்பு ஆட்சி செய்கிறதோ, அங்கே சட்டங்கள் தேவையில்லை.
தீபக் சோப்ரா: செயல் இல்லாத அன்பு அர்த்தமற்றது மற்றும் அன்பு இல்லாத செயல் பொருத்தமற்றது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu