வெற்றிலை, இது வெற்று இலை அல்ல, வெற்றி இலை..

Betel Leaf Benefits in Tamil
X

Betel Leaf Benefits in Tamil

Betel Leaf Benefits in Tamil-தமிழர்கள் வெற்றிலையை எல்லா மங்கல காரியங்களுக்கும் பயன்படுத்துகிறார்கள். மருத்துவ குணங்கள் வெற்றிலைக்கு நிறைய உண்டு.

Betel Leaf Benefits in Tamil

நம் சமூகப் பழக்கவழக்கங்களோடும் இறை வழிபாட்டோடும் பிரிக்க இயலாத ஒரு முக்கியப் பொருளாக வெற்றிலையை நம் முன்னோர்கள் இணைத்துள்ளனர். அதற்கு மருத்துவரீதியான பல காரணங்களும் உண்டு.

மரத்தின் மீது ஏறி படரும் கொடியான வெற்றிலையை அகத்திக்கீரையோடு ஊடு பயிராகப் பயிரிடுவது வழக்கம். தாம்பூலம், நாகவல்லி, நாகினி, தாம்பூலவல்லி, சப்த ஷீரா, புஜங்கலதா என்று வடமொழியில் பல்வேறு பெயர்களை வெற்றிலை பெற்றுள்ளது.

எத்தனையோ தாவரங்களின் இலைகள் உலகில் இருப்பினும், அத்தனையையும் தன் முக்கியத்துவத்தால் பின்னுக்குத்தள்ளிவிட்டு தான் முன்னின்று வெற்றி பெறுவதால் இதற்கு வெற்றி + இலை என்று பெயர் சூட்டியுள்ளார்கள் என்று புரிந்துகொள்ளும் அளவு மகத்தான பலன்கள் கொண்டது வெற்றிலை.

நீர்ச்சத்து – 90%,

புரதச்சத்து – 3.5%,

கொழுப்புச்சத்து – 1.9%,

தாது உப்பு – 3.3%,

நார்ச்சத்து – 2.3%,

பச்சையம் – 0.25%,

மாவுச்சத்து – 6.10%,

நிகோடினிக் அமிலம் – 0.89 மி.கி./100 மி.கி.,

வைட்டமின் சி – 0.01,

வைட்டமின் ஏ – 2.9 மி.கி.,

தயாமின் – 10 கி/100கி,

ரிபோஃப்ளேவின் –,

நைட்ரஜன் – 7.0%,

பாஸ்பரஸ் – 0.6%,

பொட்டாசியம் – 4.6%,

கால்சியம் – 0.2%,

சத்தூட்டம் – 44 கலோரி/100 கிராம்,

இரும்புச்சத்து – 0.007%,

டானின் என்னும் நிறமி – 1.3%

என ஒரு பல்வேறு சத்துகளை உள்ளடக்கியுள்ளது வெற்றிலை.

வெற்றிலை பற்றிய அகத்தியர் பாடல்

‘ஐயம் அறுங்காண் அதன்சாரங் கொண்டக்காற்

பையச் சயித்தியம்போம் பைக் கொடியே – மெய்யின்

கடியின் குணம்போகும் காரவெற்றி லைக்குப்

படியுமுத் தோடமிதைப் பார்.’

ஐயம் என்னும் சீதள நோய்களை வெற்றிலை போக்கும். காதின் உள்பகுதி மற்றும் கழுத்துப் பகுதியில் வீக்கம் கண்டு மிக்க வேதனை தரும் சயித்தியம் என்னும் நோய் வெற்றிலையால் குணமாகும். மேலும், வண்டுக்கடி முதலான விஷக்கடிகள் அத்தனையும் வெற்றிலையை உள்ளுக்குக் கொடுத்து மேலுக்கும் தடவுவதால் குணமாகும். வாத, பித்த, சிலேத்துமங்களால் வருகிற அனைத்து முத்தோஷ நோய்களும் வெற்றிலையால் போகும்

வெற்றிலை ஒரு மருத்துவ மூலிகையாகும். வெற்றிலை பசியை தூண்டக் கூடியது. கோழை இளக, வயிற்றுக் கோளாறு நீக்க, அஜீரணத்தை போக்க வெற்றிலை பயன்படுத்தலாம். பொதுவாக இருமல் - சளி, ஆஸ்துமா, மூச்சுக்குழல் அலர்ஜி, வாத நோய், நுரையீரல் மற்றும் அல்சர் போன்ற நோய்களை போக்கக்கூடிய மருத்துவ குணங்கள் கொண்டது வெற்றிலை.

தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்திலும் அதன் சுற்று வட்டாரத்திலுள்ள அய்யம்பேட்டை, ராஜகிரி, பண்டாரவாடை, சுவாமிமலை, ஆவூர், திருவையாறு ஆகிய ஊர்களிலும் அதிகமாக பயிராகிறது.

வெற்றிலைப் பயிருக்கு விதை என்று எதுவும் இல்லை. காம்புகளை வெட்டி பதியன் போட்டுத்தான் பயிர் செய்கிறார்கள்

வெற்றிலை பயிராகும் நிலப்பகுதிக்கு வெற்றிலை கொடிக்கால் என்கிறார்கள். மிதமான தட்பவெப்பம், மண்வளம், தண்ணீர்வசதி உள்ள பகுதிகளில் வெற்றிலை பயிராகும்

கருகருவென கரும்பச்சை நிறத்தில் இருக்கும் வெற்றிலைகள் ஆண் வெற்றிலைகள் என்றும், இளம்பச்சை வெற்றிலைகள் பெண் வெற்றிலைகள் என்றும் வகைப்படுத்தப்படுகின்றன. வெற்றிலையில் பச்சை வெற்றிலை, வெள்ளை வெற்றிலை, கற்பூரவள்ளி என சில வகைகளை நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர், பொத்தனூர், பாண்டமங்கலம் பகுதிகளில் பயிரிடப்படுகின்றன. இவற்றுள் கற்பூர வள்ளி வெற்றிலை வடமாநிலங்களுக்கு அதிகளவில் ஏற்பமதியாகின்றன என்பது குறிப்பிடத் தக்கது.

தமிழர்கள் வெற்றிலையை எல்லா மங்கல காரியங்களுக்கும் பயன்படுத்துகிறார்கள். மருத்துவ குணங்கள் வெற்றிலைக்கு நிறைய உண்டு. உணவு செரிக்க, ரணங்கள் தீர பயன்படுத்துகிறார்கள்

வெற்றிலையுடன் பாக்கு சேர்த்து சாப்பிட்டு வந்தால் பல்வேறுபட்ட நோய்கள் நீங்கும்

  • வெற்றிலை உடன் பாக்கு குறைவாகவும், சுண்ணாம்பு சிறிது அதிகமாகவும் சேர்த்து சாப்பிட்டால் பசி எடுக்காதவர்களுக்கும் பசி எடுக்கும்.

தினமும் காலையில் வெறும் வயிற்றில் கொழுந்து வெற்றிலை மற்றும் மிளகு சேர்த்து தொடர்ச்சியாக எட்டு வாரங்கள் சாப்பிட்டு வந்தால், உடல் எடையில் நல்ல மாற்றம் ஏற்படும்.

  • உடலில் தீப்பட்டதால் ஏற்படும் காயங்களுக்கு இளம் வெற்றிலையை தீக்காயங்களின் மேல் வைத்துக்கட்ட விரைவில் புண்கள் ஆறும்.

சிறு குழந்தைகளுக்கு மலக்கட்டு ஏற்பட்டு வேதனையுறும்போதும், வயிற்றுப் பொருமல் வலி ஆகியன வந்தபோதும் வெற்றிலைக்காம்பை விளக்கெண்ணெயில் நனைத்து ஆசன வாயினுள் நுழைத்து வைக்க சிறிது நேரத்தில் மலம் வெளிப்பட்டு குழந்தை யின் வயிற்றுத் தொல்லைகள் போகும்.

  • கொழுந்து வெற்றிலை மற்றும் மிளகு சாப்பிட்டு வர, இரைப்பை குடல் வலி, அசிடிட்டி, செரிமானம் மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் குணமாகும். அதுமட்டுமல்லாமல், மெட்டபாலிசம் அதிகரித்து, உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, உடல் முழுவதையும் சுத்தமாக்க உதவுகிறது

வெற்றிலையை மெல்ல ஆரம்பித்த உடனேயே வாயில் எச்சில் உற்பத்தி அதிகரிக்கும். இதனால் நீங்கள் உண்ட உணவை செரிக்க சொல்லி வயிற்றுக்கு சிக்னல் அனுப்பும் உங்கள் வாய். இதனால் செரிமானம் சிறப்பாக செயல்பட தொடங்கும். வயிற்றில் இருந்து நச்சுக்களை நீக்கவும் இது உதவுகிறது.

  • வெற்றிலை பயன்படுத்தும்போது அதன் காம்பு, நுனி, நடுநரம்பு இவற்றை நீக்கி உபயோகிக்க வேண்டும்.

வெற்றிலையில் கால்சியம், இரும்புச்சத்து ஆகியன அதிகம் உள்ளது.

  • வயிற்றுப்புண், வாய்ப்புண், வாயில் துர்வாடை பிரச்னை உள்ளவர்கள், மாலையில் வெற்றிலை அதிகமாகவும், பாக்கு சுண்ணாம்பு குறைவாகவும் மென்றால் இந்த பிரச்சனைகள் குணமாகும்.

ஒரு வெற்றிலையினுள் ஐந்தாறு துளசி இலைகளை வைத்து சிறிது கசக்கிப் பிழிந்து, அந்த சாற்றினை குழந்தைகளுக்கு கொடுத்தால் சளி, இருமல் குணமாகும்.

  • வெற்றிலையின் வலி நிவாரணி பண்புகள் வலியிலிருந்து நிவாரணம் அளிக்கிறது. ஒரு சில இலைகளை நசுக்கி, அதை காயங்கள் அல்லது தொற்றுநோய்களின் மீது தடவவும். இது காயங்கள், வெட்டுக்காயங்கள், கீறல்கள் போன்றவற்றை ஆற்றும். வெற்றிலையை மென்று சாப்பிடுவது உள் வலியிலிருந்தும் நிவாரணம் அளிக்கிறது.

வெற்றிலையின் ஆண்டிமைக்ரோபியல் பண்புகள் பருக்களை நீக்கி, மிருதுவான சருமத்தை வழங்கும். இது தோல் ஒவ்வாமை, சொறி, வெயில், தோல் புண், அரிப்பு மற்றும் உடல் துர்நாற்றம் ஆகியவற்றைத் தடுக்கிறது. மஞ்சளுடன் வெற்றிலையை நசுக்கி சாறு கலந்து முகத்தில் தடவினால் பல்வேறு தோல் பிரச்சனைகள் வராமல் தடுக்கலாம்.

  • வெற்றிலையை விளக்கெண்ணெயில் வதக்கி கட்டிகளின் மேல் பற்றாகப் போட்டு வைக்க கட்டிகள் சீக்கிரத்தில் பழுத்து உடையும்

வெற்றிலைச்சாற்றில் சிறிது கற்பூரம் சேர்த்து லேசாக சூடு செய்து வெதுவெதுப்பான நிலையில் நெற்றிப்பொட்டுகளின் மேல் தடவ தலைவலி விலகும்.

வெற்றிலை பயன்படுத்தும்போது அதன் காம்பு, நுனி, நடுநரம்பு இவற்றை நீக்கி உபயோகிக்க வேண்டும்.

மஞ்சள் நிறத்தில் அல்லது அழுகிய நிலையில் உள்ள வெற்றிலையை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அது வயிற்றுப்போக்கு பிரச்சனையை ஏற்படுத்திவிடும்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags

Next Story
இது தெரியாம போச்சே ,காலை எழுந்து வெந்நீர் பருகுவதால் இவ்வளவு நன்மைகள் இருக்கா