akka thambi quotes அம்மாவுக்கு பிறகு அதிக பாசம் காட்டுவது அக்காதாங்க...தெரியுமா?
அன்பாலே ஒரு சந்தோஷ நடை.....அன்பு பிணைப்போடு...(கோப்பு படம்)
akka thambi quotes
வாழ்க்கையில உடன் பிறந்த தம்பியோ அல்லது உடன்பிறந்த அக்காவோ இருந்துட்டா அவங்களுக்குள்ள பிரச்னை இல்லாத நாட்கள்தான் ஆண்டில்குறைவாக இருக்கும். தினமும் பிரச்னைதான் போங்க... இத தீர்த்து வைக்கவே அம்மாவுக்கு நேரம் இருக்காதுங்க.வாழ்க்கைன்னா பிரச்னைகள் இருக்கத்தான்செய்யுங்க... ஏங்க பிரச்னைன்னே ஆரம்பிக்கிறீங்கன்னு கேட்கறீங்களா? ஆமாங்க... ஆமா... வீட்டுக்கு வீடு வாசப்படி...
akka thambi quotes
ஏங்க....அக்காவின் இடத்தில் இருந்து (நம் பூனையார்) தம்பிக்கு அட்வைஸ் செய்யுறாங்க... (கோப்பு படம்)
வயதானபின் அவர்களுக்கே ஒரு முதிர்வின் காரணமாகவும் அனுபவத்தின் காரணமாகவும் அடங்கிவிடுகின்றனர். ஆனால் சின்னஞ்சிறு வயதில் பார்த்தால் சாப்பிடும் தீனியில் இருந்து பிரச்னை ஆரம்பித்து பென்சில், பேனா, ரப்பர் வரை அது இழுத்துக்கொண்டே போகுமுங்க... அதுவும் எது வாங்கினாலும் ஒன்னு மட்டும் வாங்கிடக்கூடாது .. எல்லாம் இரண்டுதான் அதுவும் ஒரே கலர்தான்... கலர் மாறினாலும் அங்கு ரகளைதான். என்னதத்தைச் சொல்ல..
இப்படி வாழ்ந்த அண்ணன்- தம்பி, அக்கா-தம்பி உறவுகள் இன்று எதற்கும் நேரம் இல்லாமல் தவிக்கின்றன. காரணம் வீட்டிற்கு வந்தால் ஆயிரம் பிரச்னைகள். அப்படியே இருந்தாலும் அவரவர்களின் செல்போன்களோடுதான்இருக்கிறார்களே தவிர எங்க போய் தம்பியை கொஞ்சுறாங்க.. எந்த அக்கா கொஞ்சுறாங்க போங்க... அதேபோல் எந்த தம்பியும் தன் பாசமான அக்கான்னு பேசறது கூட இல்லங்க.. யாருக்குமே நேரம் இல்லை. இருந்தாலும் அக்கா-தம்பி உறவு என்பது ரத்த பாசமானதுதாங்க... ஏதாவது பிரச்னை என்றால்முன்னாடி நிற்பது தம்பிதான்...அதேபோல் தம்பிக்கு ஏதாவது பிரச்னை என்றால் அக்காவும் மாமாவும்தான் பல குடும்பங்களில் பைசலுக்கு செல்வார்கள்... இப்படிப்பட்ட அக்கா-தம்பி பாசத்தின் வாசகங்கள் இதோ....
akka thambi quotes
பிள்ளை வரம் பெறாமலேதாயாகும் வரம்அக்காகளுக்கு மட்டுமே உண்டுஉன்னை வயிற்றில் சுமக்கும்பாக்கியம் எனக்கு இல்லைஆகையால் என் மடியில்சுமந்து தீர்த்து கொள்கிறேன்
அன்னையின் அன்பைஅவளிடம் கண்டேன்அன்பிற்கு அடைமொழிஎன் அக்கா என்றேன்
பத்து மாதம் சுமக்கவில்லைஆனால் உன்னில் பார்க்கிறேன்தாயின் மறு உருவம்
ஒவ்வொருவரும் யாரோஒருவரின் அன்பிற்குஅடிமையாக இருக்கின்றனர்
நானும் ஓர் அடிமைதான்என் அக்காவின் அன்பிற்குஅம்மாவிடம் கூடசொல்லாத ரகசியத்தைஅக்காவிடம் கூறுவது
அவள் மீதுள்ள நம்பிக்கையால்ஆறுதல் தேடும்போது தோழியாகசண்டையின் போது வில்லியாக
தாலாட்டுவதில் தாயாகஎப்போதும் என் அன்னையாகமாறிவிடுகிறாள் என் அக்கா
தம்பிகள் இருக்கும்அக்காக்களுக்கு மட்டுமே தெரியும்அவன் குழந்தை அல்லகுட்டி சாத்தான் என்று
நேரம் காலம் பார்த்துசண்டை போடுவதல்லஅக்கா தம்பி பாசம்நினைத்த நேரம் எல்லாம்சண்டை போடுவது தான்அக்கா தம்பி பாசம்
அன்னை இல்லா நேரத்தில்அன்னையாகவும்அன்னை இருக்கும் நேரத்தில்தேவதையாகவும் இருக்கிறாள்அன்பால் அனைவரையும்அவள் இணைக்கிறாள்
தன் அக்காவின் கண்ணீரைதாங்கி கொள்ளும் சக்தி எந்த தம்பிக்கும் இல்லை தன் தம்பியின் கண்ணீரைதாங்கி கொள்ளும் சக்திஎந்த அக்காவிற்கும் இல்லை
அவள் என்னுடன்பிறவாமல் இருக்கலாம்ஆனாலும் அவள் என் தாய்க்கு நிகரானவளேஅக்கா தம்பி உறவு என்பதுகையில் கட்டும் கயிற்றில் இல்லைஅது இதயத்தில் கட்டப்படுவது
ஒரு ஆணின் கோபத்தைஒற்றை ஆளாய் அடக்கவும்அதே ஆணைதன்அன்பால் அடக்கவும்தெரிந்த பெண்களில்என் அக்காவும் ஒருவள் தம்பிகளுக்கு தான் தெரியும்தன் அக்காவின்அரவணைப்பும் கண்டிப்பும்இன்னொரு தாய்க்கு சமம் என்று
உன் அன்பில் நான் அடிமைஉன் அரவணைப்பில் நான் குழந்தைஉன் துன்பத்தில் நான் தோழன்அக்கா எனும் ஒற்றை வார்த்தையில்தாய்மையை முதன் முதலாய் தந்து
akka thambi quotes
என் கண்ணீரிலே மொத்த உயிரையும்நனைய வைத்தவன் அவன் என் தம்பிஅவள் என்னை திட்டி தீர்த்தாலும்சண்டை போட்டு அடித்தாலும்அழும் முன் ஆறுதல் கூறிவிழும் முன் தாங்கி பிடித்துசோகம் என்னும் சுமை குறைத்துபாசம் என்னும் பலத்தை ஊட்டினாள
பிறப்பு இறப்பு காதல் வாழ்க்கை எல்லாம் ஒருமுறை ஆனால் உன் மீது கொண்ட பாசம் மட்டும் உன் தம்பி சாகும் வரை... அக்கா...
அக்கா பாசத்தின் தாய் அரவணைப்பில் அன்னை மகிழ்ச்சியின் அம்மா
akka thambi quotes
தம்பியின் கோபத்திற்கு அடங்கவும் அதே தம்பியை தன் அன்பால் அடக்கவும் தெரிந்த ஒரு பெண் அக்கா என்றால் அந்த அக்கா தம்பி பாசம் ஒரு சொர்க்கம்தான்..
நேரம் காலம் பார்த்து சண்டை போடுவதில்ல அக்கா தம்பி பாசம்... நினைத்த நேரம் எல்லாம் சண்டை போடுவதுதான் அக்கா தம்பி பாசம்..
அக்கா தம்பியின் பாசத்திற்கு முன்னால் அம்மா அப்பாவின் பாசம் கூட தோற்றுப்போகும்.
எவ்வளவுதான் சண்டை போட்டாலும் கடைசி வரை பிரியாமல் இருக்கும் ஒரே உறவு அக்கா தம்பி உறவு மட்டுமே..
தம்பிகள் இருக்கும்அக்காக்களுக்கே தெரியும் அவன் குழந்தைஅல்ல குட்டிச்சாத்தான் என்றுஅன்னைக்கு இணையானவள் ஆதரவாய் துணை நிற்பவள்
ஒருபெண்ணிற்கு முதல் குழந்தை அவளுடைய தம்பியே அவள் காட்டும் அன்பிற்கு பெயர்தான்அக்கா
ஆயிரம் உறவுகள் நமக்கிடையே வந்தாலும் நமக்கிடையே ஆயிரம் சோகங்கள் சண்டை கண்ணீர் வலிகள் வந்தாலும்... அக்கா... என்ற பந்தம் மாறாது.. இன்றைக்கும் மட்டும் அல்ல.. என்றைக்கும் அக்கா...
எத்தனை பேர் என் மேல் பாசம் வைத்தாலும் என் அக்கா பாசத்திற்கு ஈடாகாது..
எனக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் நீதான் என் அன்பு அக்கா. நீ என் அருகில் இல்லையென்றாலும் உன்னை நினைக்காத நாள் இல்லை...
அன்னையின் அன்பை அவளிடம் கண்டேன்... அன்பிற்கு அடைமொழி .. என் அக்கா என்றேன்...
கூட பிறந்த அக்கா இல்லை என்று ஏங்காத பசங்களும் இல்ல. கூட பிறந்த அண்ணன் இல்லை என்று ஏங்காத பொண்ணுங்களும்இல்ல.. ஏன்னா?அண்ணன் இன்னொரு அப்பா... அக்கா இன்னொரு அம்மா...
வயதால் எவ்வளவு தான்வளர்ந்தாலும் அக்காவுக்குதன் தம்பி என்றுமேசிறு குழந்தை தான்
akka thambi quotes
தாயிடம் கூட சில உண்மைகள்மறைப்பதற்கு இருக்கலாம்ஆனால் அக்காவிடம் மறைப்பதற்குபொய்கள் கூட ஒன்றுமில்லை
தாயின் மறு உருவமாக நீஉனது முதல் குழந்தையாக நான்தன் தம்பியை பெற்றகுழந்தையாக பார்ப்பதும்அக்காவை இன்னோருஅம்மாவாக பார்ப்பதும்தான்உன்னதமான அக்கா தம்பி உறவ
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu