'தம்பிக்கு இன்னொரு அம்மா தான் அக்கா'

Akka Thambi Images With Quotes
X

Akka Thambi Images With Quotes

Akka Thambi Images With Quotes-க்கா - தம்பி உறவு என்பது அம்மா - மகன் உறவையே பிரதிபலிக்கிறது. தாயை இழந்த ஒரு மகன், தன் அக்காவை, அம்மாவாக கருதுகிறான். அக்காவும், தாயாக மாறி தம்பியை அரவணைக்கிறாள்.

Akka Thambi Images With Quotes-அக்கா, தம்பி உறவு மிக புனிதமானது. அன்பை மட்டுமே மையப்படுத்திய உறவுகளின் மேன்மை என்றுமே போற்றுதலுக்குரியது.

* வயதால் எவ்வளவு தான் வளர்ந்தாலும், அக்காவுக்கு தன் தம்பி என்றுமே சிறு குழந்தைதான்.

* தாயிடம் கூட சில உண்மைகள் மறைப்பதற்கு இருக்கலாம். ஆனால், அக்காவிடம் மறைப்பதற்கு பொய்கள் கூட ஒன்றுமில்லை

* தாயின் மறு உருவமாக நீ; உனது முதல் குழந்தையாக நான்.

* தன் தம்பியை பெற்ற குழந்தையாக பார்ப்பதும், அக்காவை இன்னொரு அம்மாவாக பார்ப்பதும்தான் உன்னதமான அக்கா தம்பி உறவு.

* பிள்ளை வரம் பெறாமலே தாயாகும் வரம், அக்காக்களுக்கு மட்டுமே உண்டு.

* உன்னை வயிற்றில் சுமக்கும் பாக்கியம் எனக்கு இல்லை; ஆகையால், என் மடியில் சுமந்து தீர்த்து கொள்கிறேன்.

* அன்னையின் அன்பை அவளிடம் கண்டேன்; அன்பிற்கு அடைமொழி என் அக்கா என்றேன்.

* பத்து மாதம் சுமக்கவில்லை ஆனால் உன்னில் பார்க்கிறேன் தாயின் மறு உருவம்.

* ஒவ்வொருவரும் யாரோ ஒருவரின் அன்பிற்கு அடிமையாக இருக்கின்றனர்; நானும் ஓர் அடிமைதான், என் அக்காவின் அன்பிற்கு.

* அம்மாவிடம் கூட சொல்லாத ரகசியத்தை அக்காவிடம் கூறுவது அவள் மீதுள்ள நம்பிக்கையால்.

* ஆறுதல் தேடும்போது தோழியாக சண்டையின் போது வில்லியாக, தாலாட்டுவதில் தாயாக, எப்போதும் என் அன்னையாக மாறிவிடுகிறாள் என் அக்கா.

* தம்பிகள் இருக்கும் அக்காகளுக்கு மட்டுமே தெரியும், அவன் குழந்தை அல்ல குட்டி சாத்தான் என்று. நேரம் காலம் பார்த்து சண்டை போடுவதல்ல அக்கா தம்பி பாசம். நினைத்த நேரம் எல்லாம் சண்டை போடுவது தான் அக்கா தம்பி பாசம்.

* அன்னை இல்லா நேரத்தில் அன்னையாகவும் அன்னை இருக்கும் நேரத்தில் தேவதையாகவும் இருக்கிறாள் அன்பால் அனைவரையும் அவள் இணைக்கிறாள்.

* தன் அக்காவின் கண்ணீரை தாங்கி கொள்ளும் சக்தி எந்த தம்பிக்கும் இல்லை தன் தம்பியின் கண்ணீரை தாங்கி கொள்ளும் சக்தி எந்த அக்காவிற்கும் இல்லை.

* அவள் என்னுடன் பிறவாமல் இருக்கலாம்; ஆனாலும், அவள் என் தாய்க்கு நிகரானவளே.

* அக்கா தம்பி உறவு என்பது கையில் கட்டும் கயிற்றில் இல்லை அது இதயத்தில் கட்டப்படுவது.

* ஒரு ஆணின் கோபத்தை ஒற்றை ஆளாய் அடங்கவும் அதே ஆண்னை தன் அன்பால் அடக்கவும் தெரிந்த பெண்களில் என் அக்காவும் ஒருவள்.

* தம்பிகளுக்கு தான் தெரியும் தன் அக்காவின் அரவணைப்பும் கண்டிப்பும் இன்னொரு தாய்க்கு சமம் என்று.

* உன் அன்பில் நான் அடிமை உன் அரவணைப்பில் நான் குழந்தை உன் துன்பத்தில் நான் தோழன்.

* அக்கா என்னும் ஒற்றை வார்த்தையில் தாய்மையை முதன் முதலாய் தந்து, என் கண்ணீரிலே மொத்த உயிரையும் நனைய வைத்தவன் அவன் என் தம்பி.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags

Next Story
கடம்பூரில் வெடிபொருட்கள் பதுக்கிய 5 பேரை கைது செய்த போலீஸ்!