/* */

அஜ்வைன் எனப்படும் ஓமத்தின் நன்மைகள் தெரியுமா?

Ajwain Seeds In Tamil-ஓமத்தில் நன்மைகள் அதிகம் என்றாலும் அளவுக்கு மிஞ்சினால் ஆபத்து என்பதையும் புரிந்து கொள்ளுங்கள்

HIGHLIGHTS

Ajwain Seeds In Tamil
X

Ajwain Seeds In Tamil

Ajwain Seeds In Tamil-உணவு செரிமானம் ஆகாமல் வயிறு உப்புசமாக இருக்கும் சமயத்தில் உடனடியாக நம் மனதுக்கு நினைவுக்கு வருவது ஓம வாட்டர் எனப்படும் ஓமத்ரா பானமாகத் தான் இருக்கும். சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு சளி, ஜலதோஷம் போன்ற தொந்தரவுகள் ஏற்படும் போது, ஓம இலைகளை கொதிக்க வைத்து, அந்தச் சாறு கொடுத்து வருவதையும் பார்த்திருப்போம்.

ஓமத்தை நீரில் கொதிக்க வைத்து அதனுடன் பனை வெல்லம் சேர்த்து காலையில் அருந்தி வந்தால் உடல் பலம்பெறும். உடல் தேறாமல் இருப்பவர்கள் இந்த ஓம நீரை குடித்து வந்தால் உடல் பலமாகும்

தொண்டை புகைச்சல், இருமல் ஏற்பட்டால் ஓமம், முக்கடுகு, சித்தரத்தை, கடுக்காய் தோல், திப்பிலி வேர், அக்கிரகாரம் இவைகளின் பொடி செய்த்து சம அளவு எடுத்து அதனுடன் சரிபாதி பனங்கற்கண்டு சேர்த்து காலை, மாலை கொடுத்து வந்தால் தொண்டை புகைச்சல் மற்றும் இருமல் குணமாகிவரும்.


  • குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அஜீரணக் கோளாறு, வயிற்று வலி, வயிற்றுப் பொருமல் உள்ளவர்கள் ஒரு லிட்டர் தண்ணீரில் நூறு கிராம் ஓமத்தை கலந்து கொதிக்க வைத்து குடித்து வந்தால் வயிற்று பிரச்சனைகள் நீங்கும்.

வயிறு தொடர்பான அனைத்து பிரச்சனைகள் தீரவும், சாப்பிட்ட உணவு சீரணமாகவும், ஓமத்தை கஷாயமாக்கி அருந்தி வந்தால் நல்லது. இதனால் இருமல் குணமாகும்.

  • தண்ணீரில் சிறிது ஓமம் போட்டு கொதிக்க வைத்து, அதில் தேங்காய் எண்ணெயை விட்டு கொதிக்க விட்டு வடிகட்டி அதனுடன் கற்பூரப் பொடியைக் கலந்து இடுப்பில் நன்றாகத் தேய்த்து வந்தால் இடுப்பு வலி குணமாகிவரும்.

கொசு விரட்டி

கடையில் வாங்கிய கொசு விரட்டி வேலை செய்யவில்லை என்றால், நீங்கள் அதை வீட்டிலேயே தயாரிக்கலாம். கடுகு எண்ணெயை அஜ்வைன் விதைகளுடன் சேர்த்து, அட்டைத் துண்டுகளில் தடவி, கொசுக்களைத் தடுக்க உங்கள் அறையின் மூலைகளில் கட்டலாம்.

இந்த மசாலாவை கொசுவிரட்டியாகப் பயன்படுத்துவதால், சுருள்களில் இருந்து வெளியாகும் புகையைப் போலன்றி, உங்கள் வீடு அழகான வாசனையுடன் இருக்கும்.

கீல்வாதத்திற்கு பயன்தரும்

அஜ்வைன் விதைகளில் கீல்வாதத்தை எதிர்த்துப் போராட உதவும் இரண்டு குணங்கள் உள்ளன. அவை ஆண்டிபயாடிக் பண்புகளைக் கொண்டுள்ளன, அவை சிவப்பைக் குறைக்கின்றன மற்றும் வீக்கத்தை எதிர்த்துப் போராடுகின்றன, மேலும் அவை வலி மற்றும் வீக்கத்தைத் தணிக்கும் பண்புகளைக் கொண்டுள்ளன. வீட்டு வைத்தியமாக, பாதிக்கப்பட்ட மூட்டுகளில் அரைத்த விதைகளின் பேஸ்ட்டை நீங்கள் பயன்படுத்தலாம்

பக்கவிளைவுகள்

என்னதான் ஓமத்தில் நிறைய மருத்துவப் பலன்கள் இருக்கிறது என்றாலும், இதிலும் சில பக்க விளைவுகள் இருக்கத்தான் செய்கின்றன.

  • ஓமம் அசிடிட்டியை குறைக்கும் என்றாலும் கூட, அதை நீங்கள் அதிகப்படியாக சாப்பிட்டீர்கள் என்றால் ஆசிட் ரிஃப்லெக்ஸ், வாயு போன்ற தொந்தரவுகள் ஏற்படக் கூடும்.
  • ஓமத்தில் தைமால் என்னும் பொருள் இருக்கிறது. இது உங்களுக்கு தலைச்சுற்றல், குமட்டல், வாந்தி போன்ற தொந்தரவுகளை ஏற்படுத்தக் கூடும்.
  • ஓமத்தில் உள்ள காரத்தன்மை மற்றும் பயோ ஆக்டிவ் பொருள்கள் காரணமாக வாய்ப் பகுதியில் இது வீக்கத்தை ஏற்படுத்தும். இதன் விளைவாக எரிச்சல், வாய்ப்புண் போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.
  • கர்ப்பிணிப் பெண்கள் ஓமத்தை கட்டாயம் தவிர்க்க வேண்டும். வயிற்றில் வளரும் குழந்தைகளுக்கு இது ஆபத்தை ஏற்படுத்தும்.
  • நீங்கள் அறுவை சிகிச்சை செய்து கொள்ள இருப்பவர் என்றால் கட்டாயம் ஓமத்தை தவிர்க்க வேண்டும். ஏனென்றால், அறுவை சிகிச்சையின் போது இது ரத்தக் கசிவை அதிகப்படுத்தும். ஆகவே, அறுவை சிகிச்சைக்கு 2 வாரங்கள் முன்பாகவே ஓமத்தை நிறுத்தி விட வேண்டும்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 9 April 2024 5:06 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு