தரணி போற்றும் தமிழர்களின் திருவிழா பொங்கல் திருவிழா.... படிச்சு பாருங்க...
![தரணி போற்றும் தமிழர்களின் திருவிழா பொங்கல் திருவிழா.... படிச்சு பாருங்க... தரணி போற்றும் தமிழர்களின் திருவிழா பொங்கல் திருவிழா.... படிச்சு பாருங்க...](https://www.nativenews.in/h-upload/2022/10/18/1606786-18-oct-pongal-image-2.webp)
about pongal festival in tamil
about pongal festival in tamil
சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் என வள்ளுவப் பெருந்தகை வாக்கின்படி உழவுத்தொழிலைச் சிறப்பிக்க உழவர்களால் கொண்டாடப்படுவதே பொங்கல்திருவிழா.இது தமிழகத்தின் தலையாய விழா எனவும், தமிழர்கள் போற்றும் திருவிழாவாகவும் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. சிலப்பதிகாரத்தில் கடவுள் வாழ்த்தில் ''ஞாயிறு போற்றுதும்'' என்ற பாடலுக்கேற்ப உழவர்கள் தங்கள் வாழ்வின் உதவியாக விளங்கிய கதிரவன், பூமி, மாடுகள் இவற்றிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக விளைநெல்லின் அரிசியில்பொங்கலாக்கி அதனை படைத்து மகிழும் நன்னாளே பொங்கல்விழாவாகும்.
இப்பொங்கல் விழாவை சங்கராந்தி எனவும் அழைப்பர். ஆந்திர மாநிலத்தில் இப்பண்டிகையானது சங்கராந்தியாக கொண்டாடப்படுவது இதன் சிறப்பு. தமிழர் திருநாளாகிய பொங்கலை தமிழகத்தில் தொடர்ந்து 4 நாட்கள் கொண்டாடுவது வழக்கம்.
முதல் நாள் போகிப்பண்டிகை இரண்டாம் நாள் தைப்பொங்கல், மூன்றாவது நாள் மாட்டுப்பொங்கல், நான்காவது நாள் காணும் பொங்கல் என 4 நாட்கள் கொண்டாடப்படுவது வழக்கம்.
போகிப்பண்டிகை
விளைச்சலில் தாம் பெற்ற பயன்கள் அனைத்துமே இறையருளால் கிடைத்தவை என்பதனை உணர்த்தும் அறுவடைத்திருவிழாதான் பொங்கல் பண்டிகையாகும். மார்கழி மாத இறுதியில் இறைவழிபாட்டுடன் பழையன கழிதலும், புதியன புகுதலும் என்பதற்கேற்ப போகிப்பண்டிகையானது கொண்டாடப்படுகிறது.
''போகி'' என்றால் இந்திரனைக் குறிப்பதாகும். சிலப்பதிகாரத்தில் கூறப்படும் இந்திரவிழாவின் போது மக்கள் தங்கள் இல்லங்களைத்துாய்மைப்படுத்தி தெருக்களைச் சுத்தம் செய்து புது மணல் பரப்பி வைப்பதாக கூறப்படுகிறது.
அதாவது பழையன கழிதலும் புதியன புகுதலும் என்ற தன்மைக்கேற்ப வீடுகளைப் பொலிவு பெறச்செய்தலே இதன் நோக்கம் ஆகும். வட மாநிலங்களில் போகியன்று வீடுகளில் பயன்படுத்திய வேண்டாத பொருட்களை எல்லாம் போட்டு எரிப்பர். இதேபோல் தமிழகத்திலும் பல இடங்களில் நடக்கிறது. ஆனால் அதற்கு தற்போது மாசுக்கட்டுப்பாட்டுவாரியமானது தடைவிதித்துள்ளது.சுற்றுப்புறச் சுகாதாரசீர்கேடு அடைவதால்இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. பொங்கல்வரவினைத் தெரிவிக்கும் வகையில் வீடுகளில் ஒரு வாரத்திற்கு முன்பாகவே வெள்ளையடிக்கும் பணி துவங்கிவிடும்.
about pongal festival in tamil
about pongal festival in tamil
பொங்கல்திருவிழா
அக்காலத்தில் பொங்கல் என்றாலே வாழ்த்து அட்டைகளை தனது நண்பர்களுக்கும், உறவுகளுக்கும் தபாலில் அனுப்புவது வழக்கமாக இருந்து வந்தது. ஆனால் காலப்போக்கில் தொழில்நுட்ப வளர்ச்சியினால் இந்த அட்டை அனுப்புவது அடியோடு நின்று மறைந்து போனது. தற்போது பேஸ்புக், வாட்ஸ்அப், ட்விட்டர் உள்ளிட்ட சோஷியல் மீடியாக்களின் மூலம் வாழ்த்துகள் பரிமாறிக்கொள்ளப்படுகிறது.
தை பிறந்தால் வழிபிறக்கும் எனும்பொன்மொழிக்கு ஏற்ப, தை மாதத்தின் முதல் நாள் பொங்கல் திருநாளாக கொண்டாடப்படுகிறது. வீட்டு முற்றத்தில் அடுப்பு வைத்து அதில் புதிய மண் பானையை வைத்திருப்பர். பானையின் கழுத்துப்பகுதியில் மஞ்சள் செடியைக் கிழங்குடன் கட்டி வைப்பர். விளக்கினை அங்கு வைத்து அதன் முன் பல்வேறு விளைபொருட்களையும், செங்கரும்பு, மற்றும்மஞ்சளையும், உடன் வைப்பர். பானையில் பாலை ஊற்றி புத்தரிசியிட்டு கொதிக்கச் செய்வர்.
பானையில் பால் பொங்கி எழும்போது உள்ளத்து மகிழ்ச்சி எல்லாம் பொங்க ''பொங்கலோ பொங்கல்'' என்று மும்முறை கூறுவர். சிறுவர், சிறுமியர் கைத்தட்டி ஆரவாரம்செய்வார்கள். பெரியோர் குரவையிடுவர். இதுநாவால் செய்யப்படும் ஒலியாகும். இது குலவை என்றும்அழைக்கப்படுகிறது. செய்து வைத்த பொங்கலையும், அரிசி,பழம், சர்க்கரை இவற்றால்செய்யப்பட்ட உணவுப்பொருட்களையும் விளக்கின் முன் வைத்து தீபாராதனை காட்டி வழிபடுவர். பின்பு கதிரவனையும் வழிபடுவர்.
about pongal festival in tamil
about pongal festival in tamil
மாட்டுப்பொங்கல்
பொங்கல் முதல் நாளின் இரண்டாம்நாளாக மாட்டுப்பொங்கலானது விமர்சையாக தமிழகத்தில் கொண்டாடப்படுவது வழக்கம். உழவர்கள் உழவுத்தொழிலில் உடன் உழைத்த வாயில்லா ஜூவன்களான கால்நடைகளுக்கும் நன்றி தெரிவிக்கும் திருவிழாதான் மாட்டுப்பொங்கல் ஆகும். அன்றைய தினத்தில் மாடுகளை நன்கு குளிப்பாட்டி நெற்றி்யில் பொட்டு வைத்து கொம்புகளைச் சீவி வர்ணமிட்டு கழுத்தில் புதிய மணி மற்றும் தாம்புக்கயிறு, மூக்கணாங்கயிறு உள்ளிட்டவைகளால் அலங்கரிப்பர்.
பெரும்பாலும் உழவுத்தொழில் நடக்கும் வயல்வெளிகளில் தோரணம் கட்டி அதன் நடுவே பானை வைத்துபொங்கலிட்டு சூரியனையும் வணங்கி மகிழ்வர். அன்றைய தினம் மாடுகளுக்கு ஓய்வளிக்கப்படும். மாலை நேரங்களில் மாடுவிரட்டுதலும் ஒருசில ஊர்களிலும் நடக்கும்.
மாட்டுப்பொங்கலன்று ஏறுதழுவுதல் , மஞ்சுவிரட்டு, மாட்டுவண்டிப்போட்டி உள்ளிட்டவைகளும் நடக்கும். பண்டைக்காலத்தில் பெண்கள் ஏறுதழுவியவனையே மணப்பர். ஏறு கண்டு அஞ்சியவனை மறு பிறவியிலும் திரும்பிப்பாரார். கலித்தொகைப்பாடலொன்று இச்செய்தியை விளக்குகிறது.
'' கொல்லேற்று கோடஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆயர்மகள்தோள்'' எனத் தெரிவிக்கிறது.
காணும்பொங்கல்
தை மாதத்தின் மூன்றாவது நாளில் இக்காணும்பொங்கலானது கொண்டாடப்படுகிறது. இப்பொங்கல் பல்வேறு பெயர்களில் வழங்கப்படுவதோடு பல்வேறு இயல்புகளில் காணப்படுகிறது. காணும்பொங்கல், கன்னிப்பொங்கல், சிறுவீட்டுப்பொங்கல், எனவும் வழங்கப்படுகிறது.
மணமாகாத பெண்கள் மார்கழி மாத நோன்பின் பின்பு நல்லகணவன், கிடைப்பதற்காக பொங்கல் வைத்துவழிபடுவதால் கன்னிப்பொங்கல் என்றும், உறவினர்கள் எல்லாம் தம் சுற்றத்தவரைக் காணும் தன்மையால் காணும் பொங்கல் என்றும், வழங்கப்பட்டது. சிறுவர், சிறுமியர் சின்னஞ்சிறு அடுப்பு வைத்து பொங்கல் படைத்து மகிழ்வதால் இதனை சிறுவீட்டுப்பொங்கல் என்று வழங்கப்பட்டதாகவும் பல்வேறு கருத்துகள் காணப்படுகின்றன.
4 நாட்கள் விடுமுறை
ஆண்டுதோறும் தை முதல் நாளில் பொங்கல் பண்டிகையானது தமிழகத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. பொங்கல் பண்டிகைக்கு தொடர்ந்து ௪நாட்கள் விடுமுறை வருவதால் வெளியூில் படிப்போர்,வேலை பார்ப்போ் என குடும்பம் குடும்பமாக சொந்த ஊருக்கு திரும்புவர். இதனால் பஸ், ரயில்களில் கூட்டமானது நிரம்பி வழியும். இதற்காகவே அரசானது ஒரு மாதத்திற்கு முன்பாகவே முன்பதிவு செய்ய வழி வகுத்துள்ளது.இருந்தபோதிலும் அதனை ஆரம்பித்த ஒருசில மணி நேரங்களிலே அனைத்துமே முடிந்துவிடுவதால் பலர் முன்பதிவு செய்யாமல் ஆர்டனரி பஸ்களில் தான் பயணம் செய்வார்கள். இதனால் இந்த 4 நாட்களுமே பஸ், ரயில்களில் கூட்டம் அதிகமாக இருப்பது வாடிக்கையாக இருந்து வருகிறது.
உழைப்பின் உயர்வையும், உறவின் பெருமைகளையும், உழவின் சிறப்புகளையும், கூறும் நன்னாளே பொங்கல் திருநாள். உலகனைத்தும் உள்ள தமிழனை ஒன்றிணைக்கும் அற்புத திருநாளாக பொங்கல் விளங்குகிறது. தித்திக்கும் பொங்கல் நாளில் கரும்பினைச் சுவைத்து மகிழ்வோமாக.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu