ABC juice- குளிர்காலத்தில் ஏபிசி ஜூஸ் குடிங்க! - உங்கள் சருமம் பிரகாசமாகும்

ABC juice- குளிர்காலத்தில் ஏபிசி  ஜூஸ் குடிங்க! - உங்கள் சருமம் பிரகாசமாகும்
X

ABC juice- ஏபிசி ஜூஸ் குடித்தால் உங்கள் சருமம் பளபளப்பாக காட்சி தரும் (கோப்பு படம்)

ABC juice- ஏபிசி ஜூஸ் என்றால் என்ன என்று பலருக்கும் குழப்பம் ஏற்படும். ஆனால் ஏபிசி ஜூஸ் குடித்தால், இந்த குளிர் காலத்திலும் உங்கள் சருமம் பிரகாசமாக காட்சியளிக்கும்.

ABC juice, winter, skin glow- குளிர்காலத்தில் ஈரப்பதம் குறைவாக இருப்பதால் சருமம் வறண்டுவிடும்.

”மதி போன்ற முகம் உடையவள் என்று பெண்களை” வர்ணிப்பதில் எவ்வித தவறும் இல்லை. கருப்போ? சிவப்போ? எப்படிப் பார்த்தாலும் பெண்கள் அழகாகவே தெரிவார்கள். இந்த அழகிற்கு மேலும் அழகுச் சேர்க்கும் விதமாக அவர்கள் மேற்கொள்ளும் சரும பராமரிப்புகள் அனைத்தும் தனித்துவம் வாய்ந்தது. குளிர்காலம் வந்துவிட்டால் அவர்களின் சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளை சரி செய்வதற்கு அவர்கள் அதிகம் மெனக்கெடுவார்கள்.

அதிலும் நவம்பர் முதல் ஜனவரி வரையிலான குளிர்காலத்தில் கிறிஸ்துமஸ், மார்கழி பிராத்தனைகள், வைகுண்ட ஏகாதசி, ஆங்கில புத்தாண்டு என கொண்டாட்டங்களுக்கு பஞ்சமே இருக்காது. ஆண்களை விட பெண்கள் தான் இந்நாளில் அதிகாலையில் எழுவார்கள். இதனால் அவர்களின் சருமம் வறண்டு விடக்கூடும். மேலும் உடலின் உட்புறத்தில் வறண்ட வெப்பம் மற்றும் வெளியில் குளிர்ச்சியான சூழல் ஏற்படுவதால் நமது தோல் மந்தமாகவும், வறண்டு போய்விடும். இதுப்போன்ற நேரத்தில் உங்களை சருமத்தைப் பாதுகாக்க ஆப்பிள், பீட்ரூட்,கேரட் கொண்டுசெய்யப்படும் ஏபிசி (ABC) ஜூஸ் நல்ல தேர்வாக அமையும்.


ABC ஜூஸின் பயன்கள்:

பொதுவாக குளிர்காலத்தில் ஈரப்பதம் குறைவாக இருப்பதால் சருமம் வறண்டுவிடும். இந்நேரத்தில் நீங்கள் ஏபிசி ஜூஸை தேர்வு செய்யலாம். ஆப்பிள், கேரட் மற்றும் பீட்ரூட்டில் உள்ள நீர்ச்சத்துக்கள், உங்களது உடலை எப்போதும் நீரேற்றத்துடன் வைத்திருக்க உதவும்.

இந்த பழங்களில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளிட்ட பல்வேறு வைட்டமின்கள் உள்ளதால் பாக்டீரிய தொற்றுகளோடு எதிர்த்துப் போராடுகிறது. மேலும் சருமத்தை எப்போதும் இளமையாக வைத்திருக்க உதவுகிறது.

பீட்ரூட்டில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் சருமத்தில் ஏற்படும் ஒவ்வாமை பிரச்சனைகள் மற்றும் முகப்பருக்களைக் குறைக்க உதவுகிறது. இதே போன்று கேரட்டில் உள்ள வைட்டமின் ஏ சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது.

ஆப்பிள் ,பீட்ரூட் மற்றும் கேரட்டில் உள்ள அனைத்து ஊட்டச்சத்துகளும் உடலில் கொலாஜன் உற்பத்தியை அதிகரிப்பதோடு நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது. எனவே உடல் நலப்பிரச்சனைகளாலும் சருமம் பாதிப்படையாது.

ஏபிசி ஜூஸ் ஒரு சக்திவாய்ந்த டிடாக்ஸ் பானமாக செயல்படுவதால், உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது.

ABC ஜூஸ் செய்முறை:

ஆப்பிள், பீட்ரூட், கேரட் போன்றவற்றை முதலில் கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் இவற்றை சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். இதை ஜூஸர் அல்லது பிளெண்டரில் நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

இறுதியில் ஒரு டம்ளரில் வடிகட்டினால் போதும் சுவையான ஏபிசி ஜூஸ் ரெடி. உங்களுக்கு இனிப்புச் சுவை தேவைபட்டால் சர்க்கரையை கலந்துக் கொண்டு பருகலாம்.

சருமத்தைப் பொலிவுடன் வைத்திருக்க வேண்டும் என்று நினைக்கும் பெரும்பாலோனர் தேர்வு செய்யும் பானங்களில் ஒன்று தான் இந்த ABC ஜூஸ். குறிப்பாக சமந்தா போன்ற சினிமா பிரபலங்களும் தங்களின் முக அழகைப் பராமரிப்பதற்கு இந்த ஜூஸைத் தான் பருகிறார்கள் என்து குறிப்பிடத்தக்கது.


உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் ஜூஸ் வகைகள்

பாகற்காய் ஜூஸ்: உங்கள் உடலில் உள்ள பூச்சிகளை அழிக்க நினைத்தால் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் பாகற்காய் ஜூஸ் குடிக்க வேண்டும். இது உங்களின் செரிமான திரவத்தின் அளவை அதிகரிக்கும். இது பசியின்மையைப் போக்கும் மற்றும் வயிற்றில் உள்ள பூச்சிகளையும் அழித்து விடும். மேலும் பாகற்காய் ஜூஸ் இரத்த சர்க்கரை அளவையும் கட்டுக்குள் வைக்கும்.

வேப்பிலை ஜூஸ்: இது உண்மையிலேயே மிகவும் கடினமான ஒன்று. ஆனால் வேப்பிலை ஜூஸை காலையில் வெறும் வயிற்றில் குடித்தால், இரத்த சர்க்கரை அளவை சீராகப் பராமரித்து விடலாம். முக்கியமாக இது சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு ஏற்ற அற்புதமான ஓர் ஜூஸ் வகையாகும்.

சுரைக்காய் ஜூஸ்: உங்களுக்கு சிறுநீர் பாதையில் நோய்த்தொற்றுகள் இருந்தால் சுரைக்காய் கொண்டு ஜூஸ் தயாரித்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர வேண்டும். இதனால் உடலில் உள்ள அதிகப்படியான அமிலம் மட்டுப்படுத்தப்படும் மற்றும் சுரைக்காயில் சக்தி வாய்ந்த சிறுநீர்ப் பெருக்கியாக செயல்படும்.

அருகம்புல் ஜூஸ்: அருகம்புல்லில் நோய்த் தீர்க்கும் பண்புகள் அதிகளவில் இருக்கிறது. குறிப்பாக அமினோ அமிலங்கள் மற்றும் நோயெதிர்ப்பு அழற்சி பொருட்கள் அதிகம் இருக்கின்றன. எனவே இந்த ஜூஸை காலையில் வெறும் வயிற்றில் குடித்தால், வயிறு மற்றும் செரிமான பாதைகள் சுத்தமாகி, செரிமான பிரச்சனைகளை தடுக்கும்.

கற்றாழை ஜூஸ்: கற்றாழை சரும அழகை மட்டும் அதிகரிக்க பயன்படுவதில்லை, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் தான் பயன்படுகின்றன. குறிப்பாக கற்றாழை ஜூஸை ஒருவர் காலையில் வெறும் வயிற்றில் குடித்தால், உடலில் உள்ள நச்சுமிக்க டாக்ஸின்கள் முழுமையாக வெளியேற்றப்படுவதோடு, உடலின் மெட்டபாலிசம் அதிகரித்து உடல் எடை வேகமாக குறையவும் உதவி செய்யும்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!