ABC Juice Benefits in Tamil உடலுக்கு ஊட்டச்சத்து அளிக்கும் ABC ஜூஸ்: அது என்னங்க ABC?
ஒவ்வொருவரும் நல்ல ஆரோக்கியத்தைப் பெற விரும்புகிறார்கள். ஆனால் அவை மிகவும் சுலபமாகவும் விரைவாகவும் இருக்க வேண்டும் என நினைக்கிறார்கள் நம்மில் பலர் அறிந்திருக்கக்கூடாத ஒரு அதிசய ஆரோக்கிய பானத்தைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்
நம்முடைய அன்றாட உணவுப் பழக்கங்களில் ஜூஸ் அல்லது பழச்சாறுகளை அடிக்கடி சேர்ப்பது உடலுக்கு நன்மை பயக்கும் என உணவியல் நிபுணர்கள் கூறுன்றனர். இந்த ஜூஸ்கள் நமது உடலுக்கு எண்ணற்ற பயன்களை அள்ளித்தருகின்றன. இந்த அருமையான பானங்களை நம்முடைய வீடுகளிலேயே நாம் தயார் செய்யலாம்.
இந்த பானம் சருமத்தின் நிறத்தை அதிகரிக்கவும், முகச் சுருக்கங்கள் மற்றும் அதிக எடையைக் குறைக்கவும் உதவும்.
இந்த ABC ஜூஸ் செல்களை புத்துயிர் பெற செய்வதோடு, உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்றவும், இரத்த அழுத்தத்தை குறைக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. மேலும் இவை, செரிமான எடை இழப்பு மற்றும் கண் மற்றும் தோல் ஆரோக்கியத்திற்கு நன்றாக வேலை செய்கிறது.
பார்வைத் திறனை மேம்படுத்துகிறது. கண் சிவத்தல், களைப்புற்ற கண்கள், ஈரப்பசையின்றி உலர்ந்து போன கண்களை பாதுகாக்கிறது.
உடற்பயிற்சியின் காரணமாக ஏற்படும் உடல் வலி, தசை வலிகளை நீக்குகிறது. உடலில் உள்ள விஷப் பொருட்களை மலக்குடல் செயல்பாடுகளைத் து£ண்டி வெளியேற்றுகிறது.
சருமப் பொலிவு, பாதுகாப்பு ஆரோக்கியம் பெற உதவுகிறது. செரிமானக் கோளாறு, தொண்டை தொற்றினால் ஏற்படும் வாய் துர்நாற்றத்தை தடுக்கிறது.
மாத விலக்கு சமயம் ஏற்படும் வலியைக் குறைக்கிறது. பக்க விளைவுகள் ஏதுமில்லாத ஒரு அற்புத பானம் இது.
உடல் எடையைக் குறைத்து உடல் பலம் ஏறி சுறுசுறுப்பாக உள்ளது என்பதை இரண்டு வாரம் தொடர்ந்து பருகி வந்த பின்பு நீங்களே உணர்வீர்கள். நோய் எதிர்ப்பு ஆற்றலும் அதிகரித்து காணப்படுவதை உணர்வீர்கள்.
எப்போது பருக வேண்டும்?
இந்த அற்புதமான பானத்தை காலையில் வெறும் வயிற்றில் குடிப்பது நல்லது.அவ்வாறு முடியாவிட்டால் நீங்கள் இரண்டு முக்கிய உணவுகளுக்கு இடையில் சாப்பிடலாம். உதாரணமாக, நீங்கள் காலை 11 மணியளவில் சாப்பிடலாம், இது காலை உணவுக்கும் மதிய உணவிற்கும் இடைப்பட்ட நேரமாகும். அல்லது மாலை நேர சிற்றுண்டியாகவும் கூட இவற்றை பருகலாம்.
இந்த சாற்றில் அதிக நார்ச்சத்து இருப்பதால் சிலருக்கு வாய்வு தொல்லை ஏற்படலாம். எனவே வாயுத்தொல்லை இருந்தால் சாறு தயாரிக்கும் போது சிறிது இஞ்சி சேர்த்துக் கொள்ளுங்கள். சாற்றை வடிகட்டாமல் குடிப்பது நல்லது. மேலும், இந்த சாற்றில் பீட்ரூட் அதிகமாக சேர்த்துக்கொண்டால் சிறுநீரகத்தில் கல் உருவாகும் அபாயம் ஏற்படும். எனவே, ஒருநாள் விட்டு ஒருநாள் பீட்ரூட்டை சேர்த்து பருகுவது நல்லது.
தேவையான பொருட்கள்
ஆப்பிள் – 1 தோல் உரிக்கப்பட்டது
பீட்ரூட் – 1/2
கேரட் – 1 நடுத்தர அளவிலானது
தயார் செய்வது எப்படி?
இந்த மூன்று பொருட்களையும் மிக்சியில் இட்டு அரைத்துக்கொள்ளவும்.
விருப்பப்பட்டால் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக்கொள்ளலாம்.
சாற்றை வடிகட்டாமல் அப்படியே பருகவும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu