பெண்களுக்கு முன்னுரிமை! அஞ்சல் துறையில் 30 ஆயிரம் காலியிடங்கள்!

பெண்களுக்கு முன்னுரிமை! அஞ்சல் துறையில் 30 ஆயிரம் காலியிடங்கள்!
அஞ்சல் துறையில் 30 ஆயிரம் காலிப் பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்திய அஞ்சல் துறையில் 30 ஆயிரம் பேருக்கு வேலை தயாராக இருக்கிறது. நீங்கள் தகுதியானவராக இருந்தால் உடனடியாக இந்த பணிக்கு விண்ணப்பியுங்கள். பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அஞ்சல் துறையில் காலியாக இருக்கும் 30 ஆயிரம் இடங்களுக்கு (30,041 பணியிடங்களுக்கு) ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இதில் தமிழ்நாட்டில் 2994 பேருக்கான காலியிடங்கல் நிரப்பப்பட இருக்கின்றன.

பொதுப்பிரிவினருக்கு 1406 இடங்களும், ஓபிசிக்கு 689 இடங்களும், பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு 280 இடங்களும், பட்டியல் இனத்தவருக்கு 492 மற்றும் பழங்குடியினருக்கு 20 இடங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

கல்வித் தகுதி

குறைந்தபட்சம் 10ம் வகுப்பு தேர்ச்சி அடைந்தவர்கள் அல்லது அதற்கு சமமான படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

10ம் வகுப்பு பொதுத் தேர்வில் ஆங்கிலம் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களில் படித்து தேர்ச்சி அடைந்திருக்க வேண்டும் என்பதும் நிபந்தனையாக இருக்கிறது

பெண்களுக்கு கூடுதல் வாய்ப்பு

இரண்டு போட்டியாளர்கள் ஒரே மதிப்பெண்ணை பெற்றிருந்தால் அவர்களில் பெண்களுக்கு இவ்வாறு முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயதில் மூத்தவர்,

பழங்குடியின இனத்தைச் சேர்ந்த திருநங்கை,

பட்டியல் இனத்தைச் சேர்நத திருநங்கை,

பட்டியல் இனத்தைச் சேர்ந்த பெண்கள்,

ஓபிசி பிரிவைச் சேர்ந்த திருநங்கை,

ஓபிசி பிரிவினரில் உள்ள பெண்கள்,

பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்த திருநங்கை,

பொருளாதார பின்தங்கிய வகுப்பினரில் உள்ள பெண்கள்,

பொதுப் பிரிவினரில் உள்ள திருநங்கை,

பொதுப் பிரிவினரில் உள்ள பெண்கள்,

பழங்குடி வகுப்பைச் சேர்ந்த திருநம்பி,

பட்டியல் வகுப்பைச் சேர்ந்த ஆண்கள்,

பட்டியல் வகுப்பைச் சேர்ந்த திருநம்பி,

பட்டியல் வகுப்பைச் சேர்ந்த ஆண்கள்,

ஓபிசி பிரிவைச் சேர்ந்த திருநம்பி,

பிற்படுத்தப்பட்ட பிரிவினரில் உள்ள ஆண்கள்,

பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்த திருநம்பி,

பொருளாதார பின்தங்கிய வகுப்பினரில் உள்ள ஆண்கள்,

பொதுப் பிரிவினரில் உள்ள திருநம்பி,

பொதுப் பிரிவினரில் உள்ள ஆண்கள்

விண்ணப்ப கட்டணம்

இந்த பணியிடங்களுக்கான விண்ணப்ப கட்டணம் 100 ரூபாய்

ஆனால் பட்டியல் சாதிகள்/ பட்டியல் பழங்குடியினர்/ அனைத்துப் பிரிவுகளையும் சேர்ந்த பெண்கள், மாற்றுத் திறனாளிகள்/ திருநர்கள் ஆகியோர் விண்ணப்ப கட்டணம் செலுத்த தேவையில்லை.

Tags

Next Story