ரூ.18,000 சம்பளத்தில் நர்ஸ் பணியிடங்கள்

ரூ.18,000 சம்பளத்தில் நர்ஸ் பணியிடங்கள்
திருச்சி மாவட்டத்தில் பணியாற்ற செவிலியர்கள் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

திருச்சிராப்பள்ளி மாவட்ட மூலம் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவ கல்லுாரி மருத்துவமனைகள் மற்றும் திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள செவிலியர் பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமாக நிரப்புவதற்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 31.01.2023 மாலை 5.00 மணிக்குள் வரவேற்க்கப்படுகின்றன.

பதவியின் பெயர்: செவிலியர்கள் (ஒப்பந்த அடிப்படை)

பணியிடங்களின் எண்ணிக்கை: 119

கல்வித்தகுதி: செவிலியர் பட்டய படிப்பு (DGNM) அல்லது இளங்கலை செவிலியர் பட்டம் (B.Sc., Nursing) / தமிழ் இளங்கலை செவிலியர் பட்டம் மற்றும் தாதியர் குழுமத்தில் பதிவு செய்யப்பட்ட ஒருங்கிணைந்த பாடத்திட்டம (Integrated curriculum registered under TN nursing council)

வயது வரம்பு: 12.01.2023 தேதியில் 50 வயது வரை

ஒப்பந்த அடிப்படையிலான தொகுப்பூதியம்: ரூ.18,000/

நிபந்தனைகள்:

1. இந்த பதவி முற்றிலும் தற்காலிகமானது.

2. எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்பட மாட்டாது

3. பணியில் சேருவதற்கான சுய விருப்ப ஒப்புதல் கடிதம் (Undertaking) அளிக்க வேண்டும்.

விண்ணப்பம் வந்து சேர வேண்டிய கடைசி நாள்:

31.01.2023 - செவ்வாய்க் கிழமை மாலை 5.00 மணிக்குள்.

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:

நிர்வாக செயலாளர் / துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகம், ரேஸ்கோர்ஸ் ரோடு, ஜமால் முகம்மது கல்லூரி அருகில்,

T.V.S. டோல்கேட், திருச்சிராப்பள்ளி - 620 020.

தொலைபேசி எண். 0431-2333112, மின்னஞ்சல் முகவரி:dphtry@nic.in

குறிப்பு:

1. விண்ணப்பங்கள் நேரிலோ / விரைவுத்தபால் (Speed Post) மூலமாகவே வரவேற்கப்படுகின்றன.

2. விண்ணப்ப படிவங்கள் அலுவலக பணி நாட்களில் திருச்சிராப்பள்ளி துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகத்தில் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை பெற்றுக்கொள்ளலாம்.

Tags

Read MoreRead Less
Next Story