டிஎன்பிஎஸ்சி.,யில் இளநிலை அறிவியல் அலுவலர் பதவிக்கான தேர்வு அறிவிப்பு

டிஎன்பிஎஸ்சி.,யில் இளநிலை அறிவியல் அலுவலர் பதவிக்கான தேர்வு அறிவிப்பு
TNPSC Recruitmnt: தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தில் இளநிலை அறிவியல் அலுவலர் பதவிக்கான தேர்வு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

TNPSC Recruitmnt: தமிழ்நாடு தடயவியல் அறிவியல் சார்நிலைப் பணியில் அடங்கிய இளநிலை அறிவியல் அலுவலர் பதவிக்கான காலிப்பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கான கணினிவழித் தேர்விற்கு 26.05.2023 அன்று வரை இணைய வழி மூலம் மட்டுமே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பதவிக்கான தேர்வு கணினி வழித் தேர்வாக நடத்தப்படும் என தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

இளநிலை அறிவியல் அலுவலர் (தடயவியல் அறிவியல் துறை) -31 இடங்கள்

சம்பளம்: ரூ.36,900-1,35,100/-

வயதுவரம்பு: 18 முதல் 32 வயது வரை

கல்வித்தகுதி:

எம்.எஸ்சி (தடய அறிவியல்)

விண்ணப்பதாரர்கள் போதுமான தமிழறிவு பெற்றிருக்கவேண்டும்.

பதிவுக் கட்டணம்:

நிரந்தரப் பதிவுக்கட்டணம் (One Time Registration)- ரூ.150/-

நிரந்தர பதிவில் பதிவில் பதிவு செய்த நாளிலிருந்து ஐந்தாண்டுகள் முடிவுறாத விண்ணப்பதாரர்கள், இத்தேர்வுக்கான நிரந்தர பதிவுக்கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகின்றனர்.

தேர்வு கட்டணம்:

தேர்வுக்கட்டணச் சலுகை பெற தகுதியுடையவர்கள் தவிர பிற விண்ணப்பதாரர்கள், இணையவழி விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கும்போது ரூ.150/-தேர்வுக்கட்டணம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

1. விண்ணப்பதாரர்கள் www.tnpsc.gov.in / www.tnpscexams.in ஆகிய தேர்வாணையத்தின் இணையதளங்கள் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

2. எந்தவொரு பதவிக்கும் விண்ணப்பிக்கும் முன்பு ஆதார் எண் மூலம்ஒருமுறைப்பதிவு எனப்படும் நிரந்தரப்பதிவு (OTR) மற்றும் தன்விவரப்பக்கம் தன்விவரப்பக்கம் (Dashboard) (Dashboard) ஆகியன கட்டாயமாகும். விண்ணப்பதாரர்கள் நிரந்தர பதிவு மூலம் பதிவுக்கட்டணமாக ரூ.150/- ஐ செலுத்தி, பதிவு செய்து வேண்டும். ஒருமுறைப்பதிவு, பதிவு செய்த நாள் முதல் ஐந்தாண்டுகள் வரை நடைமுறையிலிருக்கும், தங்களுக்குரிய ஒரு முறைப் பதிவு கணக்கு (One Time Registration ID) மற்றும் கடவுச் சொல் மூலமாக மட்டுமே விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

3. ஒருமுறைப்பதிவில் பதிவேற்றம்செய்ய, விண்ணப்பதாரர்கள் தங்களது புகைப்படம், கையொப்பம் ஆகியவற்றை CD/DVD/Pen drive போன்ற ஏதேனும் ஒன்றில் பதிவு செய்து தயாராக வைத்திருக்க வேண்டும்.

4. ஒரு விண்ணப்பதாரர் ஒன்றுக்கும் மேற்பட்ட ஒருமுறைப் பதிவுக் கணக்கை (One Time Registration ID) உருவாக்க அனுமதியில்லை.

5.விண்ணப்பதாரர்கள் தங்களுக்குரிய தனித்துவமான பதிவுக்கணக்கு மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி ஏற்கனவே பதிவிட்ட தங்களது விவரங்களை பார்வையிடவும், புதுப்பிக்கவும் செய்யலாம். தங்களது ஒருமுறைப் பதிவு, கடவு சொல்லினை வேறு நபரிடமோ (அ) முகவர்களிடமோ பகிர்ந்து கொள்ளக் கூடாது.

6. ஒருமுறைப்பதிவு என்பது எந்தவொரு பதவிக்கான விண்ணப்பம் அல்ல. இது விண்ணப்பதாரர்களின் விவரங்களைப் பெற்று அவர்களுக்கு தன்விவரப் பக்கம் ஒன்றினை உருவாக்க மட்டுமே பயன்படும். எந்தவொரு பதவிக்கும் விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், அறிவிக்கையில் “Apply” என்ற உள்ளீடு வழியே நிரந்தரப்பதிவுக்குரிய பயனாளர் குறியீடு மற்றும் கடவுச்சொல் ஆகியவற்றை உள்ளீடு செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

7. விண்ணப்பதாரர்கள் தாங்கள் விண்ணப்பிக்க விரும்பும் பதவியின் பெயரை தெரிவு செய்ய வேண்டும்.

8. புகைப்படம், குறிப்பிட்ட ஆவணங்கள் மற்றும் கையொப்பம் இல்லாமல் அனுப்பப்படும் இணையவழி விண்ணப்பம் உரிய வழிமுறைகளை பின்பற்றியப் பிறகு நிராகரிக்கப்படும்.

இணையவழி விண்ணப்பத்தை திருத்தம் செய்தல்-

9. இணையவழி விண்ணப்பித்த சமர்ப்பிப்பதற்கான இறுதி தேதிக்குப் பிறகு, அறிவிக்கையின் பத்தி 4ல் (முக்கியமான தேதி மற்றும் நேரம்) குறிப்பிட்டுள்ளபடி, இணைவழி விண்ணப்பத் திருத்த காலத்தில் விண்ணப்பதாரர்கள் தங்களது இணைவழி விண்ணப்பத்தை திருத்தம் செய்ய அனுமதிக்கப்படுவர். திருத்தம் செய்தல் காலத்தின் இறுதி தேதிக்குப் பிறகு, இணையவழி விண்ணப்பத்தில் எந்த மாற்றமும் செய்ய அனுமதிக்கப்படமாட்டாது. விண்ணப்பதாரர்கள் தாங்கள் இறுதியாக அளித்துள்ள விவரங்களின்படி விண்ணப்பங்கள் செயலாக்கப்படும். இது விண்ணப்பதாரர்களின் பொறுப்பாகும். மேலும் இணையவழி விண்ணப்பத்தில் ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்ட விவரங்களைத் திருத்தியதால் ஏற்படும் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதற்கு தேர்வாணையத்திற்கு எந்த பொறுப்பும் இல்லை. எந்தவொரு முறையிலும் இணையவழி விண்ணப்பத்தில் உள்ள உரிமைகோரல்களை மாற்றியமைப்பதற்காக தேர்வாணையத்திற்கு அனுப்பப்படும் கோரிக்கைகள் /மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

10. அச்சிடுதலில் விருப்ப தேர்வு

அ) விண்ணப்பத்தை இணைய வழியில் அனுப்பியபின், விண்ணப்பதாரர்கள் PDF முறையில் தங்கள் விண்ணப்பத்தை அச்சிட / சேமிக்க முடியும்.

ஆ)விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப நகல் தேவைப்பட்டால், பயனாளர் குறியீடு மற்றும் கடவுச் சொல்லை பயன்படுத்தி அச்சிட்டுக் கொள்ளலாம் / பதிவிறக்கமும் செய்து கொள்ளலாம்.

இணையதள விண்ணப்ப அச்சுப்படி (PRINT) அல்லது வேறு எந்தவிதமான ஆதார ஆவணங்களையும் தேர்வாணையத்திற்கு அனுப்ப வேண்டாம்.

விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான இறுதி நாள்:

இணையவழி மூலம் 26.05.2023 அன்று இரவு 11.59 மணி வரை விண்ணப்பிக்க இயலும். பின்னர் அச்சேவை நிறுத்தப்படும். இணையவழி விண்ணப்பத்தை 02.06.2023 நள்ளிரவு 12.01 மணி முதல் 04.06.2023 இரவு 11.59 மணி வரை திருத்தம் செய்யலாம். இணைய வழி விண்ணப்பத்துடன் இணைத்து பதிவேற்றம் செய்த ஆவணங்கள் / சான்றிதழ்கள் மாற்ற / பதிவேற்ற / மீள்பதிவேற்றம் செய்ய 10.072023 அன்று இரவு 11.59 மணி வரை அனுமதிக்கப்படுவர். பின்னர் அச்சேவை நிறுத்தப்படும்.

மேலும் விபரங்களுக்கு: Click Here

Tags

Next Story